தொடர்கதை: தழும்பு - அத்தியாயம் 2

Thazhumbu serial story - Chapter 2
Thazhumbu serial story - Chapter 2Image: ChatGPT
சகா

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

தழும்பு - அத்தியாயம் 2

“என்னடா மகனே.. உங்க அம்மாவைப் பத்தி வர்ஷிகாகிட்ட எதுவும் சொல்லலையா..?” எனப் புன்னகைத்தார் சேதுராமன்.

தலை சொறிந்தான் விமல்.

“பாரும்மா... யசோதா இருக்காளே அவ நம்மளைப்போல இல்லை. வேற மாதிரி உயிரினம்...! ராத்திரி எட்டரை மணிக்குத் தூங்கி காலையில நாலரை மணிக்கு எந்திரிக்கிற க்ரூப். புடவை, நகை பிடிக்காது. சீரியல்ன்னா வெறுப்பு. வீட்டுல லட்ச ரூபாய்க்கு மேல புஸ்தகங்க இருக்கு. அசைவம் சாப்பிடமாட்டா. பதினஞ்சு வருசமா அதே அறுபது கிலோ. தினம் மூணு கிலோ மீட்டர் தூரம் நடப்பா. பத்து கேள்விகளுக்கு ஒரு வார்த்தைதான் பதில். ஆனா அந்தப் பத்து கேள்விகளுக்கும் அவளோட அந்த ஒத்தை வார்த்தையிலேயே பதில் இருக்கும்...”

“இன்ட்ரஸ்டிங்..” வியந்தாள் வர்ஷிகா. “எனக்கு அவங்களை உடனே பார்க்கணும்போல இருக்கு..”

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com