டி.கே.பட்டம்மாள் வீட்டு ப்ரிஜ்ல் இருந்த வாழைப்பழம்!

MLV - MS - D.K. Pattammal
MLV - MS - D.K. Pattammal
Published on

- அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து... பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்

கர்நாடக சங்கீதத்துக்கும் எனக்கும் காத தூரம். ரசிக்க மட்டுமே தெரியும். ராகங்கள் பெயரா ஊஹூம் தெரியாது. சங்கீத மும்மூர்த்திகள் போல, முப்பெரும் பாடகிகளான எம்.எஸ், எம்.எல்.வி மற்றும் டி.கே. பட்டம்மாள் அவர்கள் மூவரின் சங்கீதம் மற்றும் நேரில் சந்தித்தது பற்றிய அனுபவக் கட்டுரை இது.

எம்.எல்.வி அவருடைய கச்சேரியை நான் சிறுவனாக மயிலாப்பூரில் இருந்த காலத்தில் கேட்டிருக்கிறேன். மயிலை சாய்பாபா கோயில், ஆர்.ஆர்.சபா இன்னும் இன்னும் நிறைய சபாக்களில் கேட்டிருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்து பேச  முடியவில்லை.

முதலில் எம்.எஸ்  அவர்களை கல்கி கார்டனில் சந்தித்து சுமாராக 45நிமிடங்கள் பேசினேன்.அந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் வாங்கிய, சங்கீதம் தொடர்பான புத்தகங்களைக் கொடுத்து  ஆசீர்வாதம் பெற்றேன். 
கிண்டி அம்பாள் நகரில் நான் பணி புரிந்த காலத்தில், கல்கி அலுவலகம் சென்று கவிதை  கதை கொடுத்து வருவேன், சிலது பிரசுரமானது. ஒரு நாள் அங்குள்ள ஒருவர், தான் மறுநாள் எம்எஸ் அம்மாவைப் பார்க்கப் போவதாகச் சொன்னதும், நானும் வருவதாக சொல்லி, அலுவலகத்தில் அரை நாள் விடுப்புப் போட்டு விட்டு அவர்களுடன், எம்எஸ் அம்மாவை சந்தித்து, வெங்கடேசப் பெருமாள், தாயாருடன் இருந்த படத்தைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிய சமயத்தில் என் குடும்பம் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். அந்த சமயத்தில் என் மகளுக்கு 8 வயதிருக்கும். வாய்ப்பாட்டு கற்றுக்
கொண்டிருந்தாள். அவளை முடிந்தால் அழைத்து வா என்றார் அன்புடன். ஆனால் ஏனோ தெரியவில்லை, என் மகளை அழைத்து போக முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
'ஓலை நறுக்கு'க் கொண்டு காசிக்குச் சென்றானாம்! எப்படி? அது என்னது?
MLV - MS - D.K. Pattammal

எப்போதும் காலை ஆபீஸ் கிளம்பும் போது பேப்பர் படிப்பேன். அன்றைய செய்தியாக, டி.கே.பட்டம்மாள் அவர்களுக்கு 30/09/1998 அன்று ராஜா சர் செட்டியார் அவர்களால் விருது மற்றும் பணம் ரொக்கமாக ரூபாய் 1/00லட்சம் வழங்கப்படும் எனத்தெரிந்து, மாலை அலுவலகம் முடிந்ததும்  நேராக  அவர்களுடைய வீட்டில் சென்று சந்தித்து பேசி வி்ட்டு கிளம்பும் போது, சமையல்காரரைக் கூப்பிட்டு, 'இவனிடம் 6 வாழைப்பழம் கொடு' என்றதும், அவர் போய் கொண்டு வந்து கொடுத்த பழம் ஈரமாகவும், கறுப்பாகவும் இருந்தது. என்ன என்றதற்கு, வாழைப்பழம் ப்ரிஜ்ல் இருந்தது என்றார். நான் உடனே சொன்னேன் வாழைப்பழம், ப்ரிஜ்ல் வைக்கக் கூடாது, வாழைக்காய் தண்ணீரில், வெளியே வைக்க வேண்டும் என்று. 'அதனால் தான் கற்றது கைம்மண் அளவு என்கிறார்கள்' என்ற பழமொழியைச் சொல்லி என்னை அனுப்பினார். அவரது எளிமையையும் அன்பையும் என்றுமே மறக்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com