முதல் வாஷ்லயே நீங்க நினைக்கிற கலர் வந்துடும்!

ஜோக்ஸ்!
ஓவியம்; பிள்ளை
ஓவியம்; பிள்ளை
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

புது டிசைனா இருக்கே எங்க வாங்கின இந்த சாரி...

போன நவராத்திரிக்கு வந்த பிளவுஸ் பிட்டு எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணாம ஒண்ணா சேர்த்து தச்சு புடவையா ஆக்கிட்டேன்!

*****************************

புடவை கடையில்:

தீபாவளி கலெக்ஷன் புடவைல இந்த டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. ஆனா கலர்தான் பிடிக்கல...

அதுக்காக கவலைப்படாதீங்க மேடம். முதல் வாஷ்லயே நீங்க நினைக்கிற கலர் வந்துடும்!

*****************************

மனைவி:

எனக்கு வெறும் ஜலதோஷம்தானே  எதுக்கு டாக்டர் பத்து நாள் ரெஸ்ட் எடுக்க சொல்றார்? 

கணவன்: 

போன வருஷம் மாதிரி லட்டு முறுக்கு செய்றேன்னு கிளம்பிட கூடாதுன்னு, நான் கேட்டுகிட்டதாலதான் டாக்டர் தீபாவளி வரை ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கிறார். 

*****************************

டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன்ல மாத்திரை பேர் எழுதாம புஸ்வானம், தரைச்சக்கரம், குருவி வெடினு எழுதி இருக்காரே? 

தீபாவளியை முன்னிட்டு அவங்க மெடிக்கல் ஷாப்பில் இந்த வாரம் பட்டாசு மட்டும்தான் விக்கிறார்களாம்!