மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

மழை ஜோக்ஸ்..! மழை ஜோக்ஸ்..!
Rain jokes...
ஓவியம்; பிள்ளை
வாசுதேவன்

எழுதுவதின் மேல் இருக்கும் ஆர்வம் காரணமாக, பல ஆண்டுகளாக என் பெயரிலும் ( வாசுதேவன் ), புனை பெயரிலும் ( மஞ்சுதேவன் ) (Pen name. Manjudevan) எழுதி வருகிறேன். பல்வேறு பத்திரிகைகளில் எனது படைப்புக்கள் வந்துள்ளன. பணி நிமித்தம் கர்நாடகா, தமிழ் நாடு, மேற்கு வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் வேலை செய்யும் பொழுது, பல்வேறு மக்களை சந்திக்கவும், பழகவும் கிடைத்த வாய்ப்புக்கள், பெற்ற அனுபவங்கள் எழுத உதவுகின்றன

Updated on

என்னது, சென்னையில் வேலை கிடைச்சிருக்கா? என்ன தகுதி அடிப்படையில்!


நீச்சல் தெரியும் என்பதனால்தான்!

---------------------------------------

எந்த தைரியத்தில் சென்னைக்கு செல்கிறாய்!


வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்துட முடியும்ங்கற தைரியத்தில்தான்!

---------------------------------------

திருமண சீர் என்ன கொடுத்தீங்க!


மாப்பிள்ளை வீடு சென்னை. அதனால போட்டும், துடுப்பும்தான்!

---------------------------------------

எப்படி அவன் திடீர் பணக்காரன் ஆகிட்டான்?


சென்னைல படகு சர்வீஸ் ஆரம்பித்துதான்.

---------------------------------------

என்னது,
மழைதான் கை கொடுக்குதா அவருக்கு!


ஆமாம், குடைகள், ரெயின் கோட் மொத்த வியாபாரமாம்.

logo
Kalki Online
kalkionline.com