உலக அதிசயம்! கடலுக்கு அடியில் டென்னிஸ் மைதானம்... எங்கே?

The underwater tennis court
The underwater tennis court
Published on
Kalki Strip
Kalki Strip

துபாயில் எங்கு பார்த்தாலும் விண்ணைத் தொடும் அளவுக்கு  கட்டடங்கள் உயர்ந்து காணப்படும். உலகின் உயரமான பூஜ் கலிபா இங்குதான் உள்ளது. சுமார் 9000 கோடி செலவில் 828 மீட்டர் உயரத்தில் இது கட்டப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு புஜ்ஜி கலிபா திறக்கப்பட்டது. 

இதுபோன்று விண்ணைத் தொடும் அளவில் உயரமான கட்டிடங்களை கட்டி அதை பொதுமக்கள் பார்வைக்காக காசு பார்ப்பதில் துபாய் அரசு கில்லாடி. இது அந்த நாட்டின் ஒரு டிரெண்டாகவே உள்ளது. 

துபாயில் 304 மீட்டர் உயரமுள்ள புர்ஜ் அல் அராப் ஹோட்டல் மேல் உள்ள டென்னிஸ் மைதானம் தான் மக்கள் பேசி வந்தனர். ஹெலிபேடில் டென்னிஸ் மைதானம் கட்டி அதிலும் டென்னிஸ் விளையாடி வந்தனர். இந்த ஓட்டலில் ஒரு இரவு தங்க 2 லட்சம் செலவாகும். 

ஆனால், தற்போது துபாயில் ஆழ் கடலில் ஏழு டென்னிஸ் மைதானங்களை உருவாக்கி வருகிறார்கள். புர்ஜ் அல்அரப்  மற்றும் பார்ம் ஜிஸ்ரா தீவுகளுக்கு இடையே பெர்சியன் ஆழ் கடலில் இந்த மைதானம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மைதானத்தை போலந்து நாட்டைச் சார்ந்த கட்டடக்கலைஞர் cristaap kodulaa என்பவர் ஏற்றுள்ளார். இதை வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டால் உலகமே வியக்கும் வண்ணம் ஏழு டென்னிஸ் மைதானங்கள் ஆழ் கடலில் அமையும்.

மைதானத்தின் மேலே கடலில் மீன்கள் உலா வருவதை காணலாம். மேலும் ஒரு அக்வேரியம் அமைக்கப்படுகிறது. அதன் கீழே டென்னிஸ் மைதானம் இருக்கும். கிராண்ட்ஸ்லாம் போட்டியை இங்கு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். முதலில் கடல் நீர் உள்ளே புகாதவாறு தடிமனான 33 மீட்டர் அகலத்திலும் 9718 கிலோ கிராம் எடை உள்ள கண்ணாடி அமைத்து கட்டப்படுகிறது. 

சுனாமி நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. கண்ணாடியின் மேற்கூரை வெளிச்சமாகவும் அவசர வழிகள் வைத்து கட்டப்படுவது அதிசயமாக பார்க்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
வரலாறு படைத்த ஷீதல் தேவி: 2025 உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள்..!
The underwater tennis court

இரண்டு பில்லியன் டாலர்கள் செலவழித்து கடல் நீருக்கு அடியில் இந்த மைதானத்தை உருவாக்கி வருகிறார்கள். இதற்காக பருமனான செங்குத்தான கண்ணாடிகள் பயன்படுத்தி 95% வேலைகள் முடிந்து விட்டன. பொறியியல் வல்லுநர்கள் ஆழ் கடலில் தீயாக வேலை செய்கின்றனர்.

இதேபோன்று கடல் நீருக்கு அடியில் 55 மில்லியன் திராம்கள் செலவு தயவு செய்து மசூதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இது கடற்கரைக்கு அருகில் உள்ளதால் கடற்கரையில் நடந்து செல்ல நடைபாதை கட்டப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி! ஆஷ்லே ஆட்ட நாயகி!
The underwater tennis court

இந்த மசூதியில் ஒரே சமயத்தில் 75 நபர்கள் தொழுகை நடத்தலாம். கட்டடத்தின் பாதி நீருக்கு அடியிலும், நீருக்கு மேல் பரப்பில் பொதுமக்கள் அமரும் இடமும், காபி, ஷாப்பிங் அமைக்கப்பட உள்ளது. 

துபாய் என்றாலே ஆச்சரியமும், வினோதமும் கலந்து காணப்படுவது வியப்பாகத்தான் உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com