டீம் மீட்டிங் நடத்திக் கொண்டிருந்த நந்தினியை வாட்ஸ்-ஆப் சிணுங்கல் ஈர்த்தது.. அசிருத்தையாக நோட்டமிட்டவள் செய்தி வந்திருந்த பெயரைப் பார்த்து பரபரப்பானாள்..சீதா... சீதாவிடமிருந்து...அவசர அவசரமாக எடுத்துப் பார்த்தாள்..“ரீச்சிங் டெல்லி ஆன் 24த்.. ஒன் வீக் ஸ்டே.. வில் கால் திஸ் நைட்”நந்தினியின் மனம் துள்ளிக் குதித்தது..சீதா வரப் போகிறாள்... சீதா வரப் போகிறாள்...மீட்டிங்கை ஏனோ தானோவென்று முடித்துவிட்டு தன் கேபினுக்கு விரைந்தாள்.தன் இருக்கையில் அமர்ந்து கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.சீதா...நந்தினி டெல்லியில் செட்டில் ஆனதிலிருந்து சீதாவை வரச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். இதோ... அதோ... என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்தவள் ஆறு வருடங்கள் கழித்து ஒருவழியாக டெல்லி வரப் போகிறாள்.நந்தினி தன் பாஸ் திவாகரை மொபைலில் அழைத்தாள். திவாகர் அவளைவிட வயதில் மூத்தவன்... திறமை சாலி... ரொம்பவே சகஜமாகப் பழகுவான்... நல்லவன்... நந்தினி அவ்வப்போது மனம் விட்டுப் பேசி சகோதரனைக் காண்பது அவனிடத்தில் தான்.“திவா... இருபத்தி நாலாம் தேதிலேர்ந்து ஒரு வாரம் நான் ஜூட்”“என்ன... புருஷன் தேடப் போறயா? நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?”“கொன்னுருவேன்... கெஸ்ட் வராங்க”“லீவு நாளுல கூட வீட்டுலேர்ந்து வேலை பண்ணறே... நீ லீவு கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுமா? எஞ்சாய்... ஆனா அதுக்குள்ள அந்த ஜப்பான் காரன் ப்ராஜக்டை தேத்திரு”“டன்...”அன்று இரவு சீக்கிரமே டின்னர் முடித்து சீதாவின் காலுக்காகக் காத்திருந்தாள் நந்தினி.சீதா...கல்லூரியில் நந்தினியின் பேராசிரியை. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரினி. பல பத்திரிகைகளில் அவளுடைய எழுத்து பிரபலம்.நந்தினி கம்ப்யூட்டர் சயன்ஸ்... இருந்தாலும் முதல் வருடம் ஆங்கிலப் பாடம் உண்டு... சீதாதான் வகுப்பு எடுத்தாள். முதல் நாளிலிருந்தே நந்தினிக்கு சீதாவைப் பிடித்து விட்டது. தானே வலியப் போய் பழகினாள். நாளாக நாளாக சீதாவுக்கும் நந்தினியைப் பிடித்து விட்டது.நந்தினி கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அவர்கள் உறவு ஆசிரியை மாணவி என்பதைத் தாண்டி ‘தோழி’ என்ற கட்டத்துக்கு நகர்ந்தது.மொபைல் சிணுங்கவே நந்தினி அவசரமாக எடுத்தாள்.“ஹாய் நந்து... எப்படி இருக்கே?”“நான் இப்ப சந்தோஷத்துல மிதண்டுட்டிருக்கேன். நாளைக்கே இருப்பத்தி நாலாம் தேதியா இருக்கக் கூடாதான்னு ஏங்கிண்டிருக்கேன்.”“ஓ.. எங்கூட சண்டை போட அவ்வளவு அவசரமா?”“அது சரி... மஹாராணி திடீர்னு மனசு வந்து டெல்லி வரீங்க... காரணம் இல்லாம இருக்காதே...”“உன்னைப் பார்க்கத்தான்”“புளுகாதே”“டெல்லி யூனிவர்ஸிட்டில லிங்குவிஸ்டிக் செமினார். நான் பேப்பர் பிரசெண்ட் பண்ணப் போறேன்”“ஹே.. கங்ராட்ஸ்”“ரெண்டு நாள் செமினார்... ஸ்டார் ஹோட்டல் அக்காமடேஷன் தராங்க... நான் வேண்டாம்னுட்டேன். ஹோட்டல்ல இருந்தா உன்னை எப்படி டார்ச்சர் பண்ண முடியும்?”“வா...வா... யாரு யாரை டார்ச்சர் பண்ணறான்னு பார்க்கலாம்”அன்றிரவு முழுவதும் நந்தினிக்கு தூக்கம் வரவில்லை.சீதாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.அஷ்வினுடன் நந்தினியின் கல்யாணத்தில் சீதாவுக்கு ரொம்பவே சந்தோஷம். மனதார ஆசிர்வதித்தாள்.ஆனால், இரண்டே வருடங்களில் ஒரு விபத்தில் அஷ்வினின் கதை முடிய...அதன்பிறகு சென்னையில் இருக்கப் பிடிக்காமல் இருந்த கம்பெனியிலேயே மாற்றல் வாங்கிக் கொண்டு நந்தினி டெல்லிக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இந்த ஆறு வருடங்களில் எத்தனையோ முறை சீதாவை டெல்லிக்கு வரும்படி அழைத்திருக்கிறாள் நந்தினி. ஆனால், ஏதேதோ காரணங்களினால் அவளுக்கு வர முடியாமல் போனது..நந்தினி டெல்லியிலேயே செட்டில் ஆகிவிட்டாள். எப்பவாவது சென்னைக்குப் போய் சீதாவைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பாள். உடனே அஷ்வினும் அவளும் அங்கு சந்தோஷமாகக் கழித்த நாட்கள் அவள் மனதில் நிழலாடும்... அஷ்வின் இல்லாமல் அங்கு போக மனம் ஏற்காது. உடனே அந்த யோசனையைக் கை விட்டு விடுவாள்.சீதாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் வீடியோ காலில் அழைத்துப் பேசுவாள்.மறுநாளிலிருந்து திட்டம் போட ஆரம்பித்தாள் நந்தினி.சீதாவுக்கு காலையில் நல்ல ஸ்ட்ராங் ஃபில்டர் காப்பி வேண்டும். நந்தினி காப்பி சாப்பிட மாட்டாள். இருந்தாலும் உடனே ஒரு காப்பி மேக்கர் வாங்கினாள். கரோல் பாக் சென்று தமிழ் கடையில் மணக்க மணக்க காப்பிப் பொடியும் வாங்கினாள். பிரேக்பாஸ்டுக்கு சீதா ஓட்ஸ் கஞ்சிதான் சாப்பிடுவாள். ஓட்ஸ் பேக்கட்டும் கிட்சன் அலமாரியில் ஏறியது. இப்படி ஒவ்வொரு விஷயமாக யோசித்து யோசித்து ஏற்பாடு பண்ணினாள்.பணிப்பெண்ணிடம் இரண்டாவது படுக்கையறையை சுத்தம் செய்யச் சொன்னாள். புது பெட் ஸ்ப்ரெட் விரிக்கச் செய்தாள். புது உறைக்குள் தலையணிகள் புகுந்தன.அதோடு ‘சீதாவுடன் எங்கெல்லாம் போக வேண்டும்’ என்று ஒரு லிஸ்ட் தயாரித்தாள். டெல்லியில் சுற்றுலா ஸ்தலங்களாக சமாதிகளுக்கு பஞ்சம் கிடையாது. ஆனால், சீதாவுக்கு சமாதிகளைப் பார்ப்பதில் நிச்சயமாக விருப்பம் இருக்காது. ஷாப்பிங் போவதில் அலாதி விருப்பம். குழந்தையைப் போல் குதூகலிப்பாள். அதிகமாக எதுவும் வாங்க மாட்டாள். இருந்தாலும் கடை கடையாக ஏறி இறங்கி பார்ப்பதில் சந்தோஷம்.டி.எல்.எப். சாணக்யா மால், சுபாஷ் நகர் மெட்ரோ வாக் மால், ரஜோரி கார்டன் டி.டி.ஐ. மால்.. கன்னாட் பிளேஸ், கரோல் பாக் மண்டே மார்கெட்..பட்டியல் நீண்டுக் கொண்டே போனது..இருபத்தி நான்காம் தேதி..விமான நிலைய வாயிலில் லக்கேஜ் டிராலியைத் தள்ளிக் கொண்டு சீதா வெளிப்பட்டதும் சின்னக் குழந்தையைப் போல் கையாட்டிக் குதித்தாள் நந்தினி. தடுப்பைச் சுற்றி அவள் வரும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லாமல் தடுப்பின் விளிம்புக்கு ஓடினாள். சீதா தடுப்பைத் தாண்டியதும் அவளைக் கட்டிக் கொண்டாள்..இந்த ஆறு வருடங்களில் சீதா கொஞ்சம் மாறித்தான் போயிருந்தாள். தலை முடியில் சாயம் பூசாத அலட்சிய வெளுப்பு. அதுவும் அழகான கம்பீரமாகத்தான் இருந்தது. புருவத்தில் பார்லரின் கைவண்ணம் தெரிந்தது. முகத்தில் வழக்கமான மின்சாரத் துள்ளல் இல்லாமல் கொஞ்சம் சோர்வு.ஆனால், சீதாவின் உற்சாகம் குறையவில்லை என்பது காரில் பயணித்த போது புரிந்தது.“ம்.. மோடி எப்படி இருக்கார்?”“நீ ஏன் டெல்லி வரலைன்னு அடிக்கடி கேட்டுண்டிருந்தார்”“அதான் இப்ப வந்தாச்சே. ஆனா நான் கொஞ்சம் பிஸி. என்னைப் பார்க்கணும்னா அபாயிண்ட்மெண்ட் வாங்கிக்கச் சொல்லு”“உத்தரவு மேடம்”அடுத்த இரண்டு நாட்கள் காலையில் கிளம்பிய சீதா செமினார் முடிந்து வீடு திரும்ப இரவு ஏழாகிவிட்டது. காலையில் நந்தினிதான் காரில் டிராப் பண்ணினாள். மாலையில் வாடகை கார் பிடித்து வந்து விட்டாள்..செமினாரின் சோர்வு தெரிய டின்னர் முடித்து சீக்கிரமே உறங்கப் போனாள்.மூன்றாம் நாளிலிருந்து இஷ்டப்படி ஊர் சுற்றினார்கள். மால் மாலாக ஏறி இறங்கினார்கள்.சந்தோஷமாக கோல்-கப்பா (நம்ம ஊர் பானி பூரி) சாப்பிட்டார்கள்..ஒரு நாள் தாஜ் மஹால் போய் செல்பி எடுத்துக் கொண்டார்கள்..மலை மந்திர் போனார்கள்..அஷ்வினுக்குப் பிடித்த கடவுள் முருகன்.அவர்கள் வீட்டில் இருந்த போது சிரிப்பும் கும்மாளமும் தான்.ஒரு வாரம் ஓடி விட்டது..சீதா சென்னை கிளம்பினாள்..விமான நிலயத்துக்குள் நுழையும் முன் நந்தினியின் கையில் ஒட்டப்பட்ட கவரைத் திணித்தாள் சீதா.வீடு திரும்பிய நந்தினிக்கு மீண்டும் தனிமை உரைத்தது.வழக்கம்போல் வந்த பணிப்பெண்...“என்னம்மா... உங்க தோழி கிளம்பிட்டாங்களா?நந்தினிக்கு சீதா கொடுத்த கவர் நினைவுக்கு வந்தது...கைப்பையிலிருந்து அவசரமாக எடுத்து அதைப் பிரித்தாள்...“இதை நேரிடையாச் சொல்ல தைரியம் இல்லை... என் மகனையே நினைச்சு வாழ்க்கையை வீணாக்கிக்காதே... இன்னொரு கல்யாணம் பண்ணிக்க”இதை எதிர்பார்க்காத நந்தினியின் பார்வை எதிரே சுவரில் பதிந்தது.சட்டத்துக்குள் சீதாவின் மகன் அஷ்வின் சிரித்துக் கொண்டிருந்தான்.