தோல்வியை உணர்த்தும் வெற்றி!

Narendra Modi
Narendra Modihttps://x.com

மோடியின் வெற்றி, ‘ஹாட் ட்ரிக்’ வெற்றிதான் என்பதில் ஐயமில்லை. ஆலயத்தில் தீர்த்தம் வழங்கும்போதுகூட மூன்று முறை வழங்குகிறார்கள். தேக சுத்தி, மன சுத்தி, ஆத்ம சுத்தி என்பதற்காக. ஆக, இந்த மூன்றாவது முறை பெற்ற வெற்றி பெரிய சாதனையாகத்தான் திகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் இதை, ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது’ போன்ற ஒரு வெற்றியாகத்தான் கருத வேண்டி இருக்கிறது?

‘ஆட்சியைப் பிடிப்போம்’ என்று மட்டும் சொல்லி இருந்தால் அது இமாலய வெற்றிதான். ஆனால், 380, 400 என்று சொன்னதால்தான் இந்த வெற்றி, தோல்வியைப் போன்று தோன்றுகிறது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று வார்த்தைக்கு வார்த்தை சொன்ன புண்ணியம்தானோ என்னவோ, கூட்டணி ஆட்சியாவது மிஞ்சியுள்ளது.

400 வருட ஆகமக் கோயில்களை எல்லாம் இடித்து, ராமர் கோயிலைப் பிரம்மாண்டமாகக் கட்டினார்கள். அதனால், அயோத்யா லோக்கல் மக்களின் கோபத்திற்கு ஆளானார்கள்.

ஆண்டாள், ஐயப்பன் அவமானப்படுத்தப்பட்டபோதெல்லாம் வாய் திறக்காமல் இருந்துவிட்டு, தேர்தல் சமயத்தில் சனாதனத்திற்கு ஆபத்து என்று அச்சுறுத்தியது மக்களிடையே ஏற்புடையதாக இல்லை. நாட்டின் கலாசாரம் வேறு; ஆலய ஆகமங்கள் வேறு.  கலாசாரத்தைக் காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று ஆலய ஆகம Ritualsசுடன் விளையாடக் கூடாது.

ஒரு தனிமனிதனை, தெய்வம் என்ற அளவில் சித்தரித்து, அவதாரப் புருஷனாகக் காட்டி, அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை, உலகமே அவரது அசைவை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது போன்ற பில்ட்அப்கள், 400 தொகுதி உறுதி, ராகுல் இத்தாலியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்ல டிக்கெட் வாங்கிவிட்டார் போன்ற நையாண்டிகள், சமூக ஊடகங்களில் வளைய வர, அது பலருக்கும் எரிச்சலை ஊட்டின.

Deification of humans is totally wrong. ஜெயலலிதாவைக் கொண்டாடிய அ.தி.மு.க.வினரை, ‘டயர் நக்கிகள்’ என்று கூறிவிட்டு, மோடியை உலகளந்த பெருமாளாகக் கருதியதுதான் பாஜகவுக்கு 2024 தேர்தலின் சறுக்கல்.

இதையும் படியுங்கள்:
‘நான் தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம்தான்’ சந்திரபாபு நாயுடு விளக்கம்!
Narendra Modi

ராமனின் பிராண பிரதிஷ்டை திரைமறைவில் நடக்க வேண்டிய ஒரு ஆகம வைபவம். அதை உலகக்கோப்பை கிரிக்கெட்போல நடத்தியது, கேலிக்குரியதாக இருந்தது. அயோத்தியில் பாஜக தோல்விக்கு, இதுவும் ஒரு காரணம்.

இந்தக் கோபங்கள் இருந்தாலும் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டியது, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியது போன்ற செயல்பாடுகளுக்காக 292 தொகுதிகளைத் தந்து, ‘மெஜாரிட்டி இல்லாமல், கூட்டணியாக ஆளுங்கள்’ என்று மூன்றாம் முறை ஆட்சியைத் தந்திருக்கிறார்கள் மக்கள்.

மூன்றாம் முறையாவது, பணப்புழக்கம், வேலை வாய்ப்பு போன்ற குடும்பப் பிரச்னைகளைக் கையாளுங்கள். குடும்பத்தில் வருமானம் இருந்தால்தான் ஸ்ரீராம நவமியோ, சுதந்திர தின விழாவோ கொண்டாட முடியும்.

நல்லாட்சி தந்து மக்களை emotional ஆக மாற்ற வேண்டும். Emotionsசை தூண்டி, நல்லாட்சி தரப்படுவதாக அவர்களை நம்ப வைக்கக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com