
மதுரை அம்பதியில்
வந்துதித்த இளவலே!
பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டத்தை
காமராஜ் பல்கலையில்
கற்றே பெற்றவரே!
நாற்பத்தாறு வயதுக்குள்
நற்புகழை அடைந்தவரே!
உடற்கட்டுப் பயிற்சியிலே
உயர்ந்து நின்றவரே!
ஐந்துமுறை மிஸ்டர்மதுரைபட்டத்தை
அழகுடனே பெற்றவரே!
கிராமிய நடனத்தில்
ரோபோ வேடமிட்டு…
ரோபாவாய் நடனமிட்டு…
ரோபோவைப் பெயருடன்
இணைத்தே கொண்டவரே!
விஜய் டிவியிலே
வித்தகராய் உருவெடுத்து…
பல்குரல் கலைஞனாய்
பாங்குடனே பணியாற்றும்
பொறுப்பான ஆங்கராய்
புத்துலகம் கண்டவரே!
வெள்ளித் திரையிலும்
சின்னத் திரையிலும்…
நின்று நிலைத்தவரே!
நீளுலக வாழ்வினிலே
நில்லாமல் போனவரே!
‘கற்ககசடற’வில் கால்வைத்தே
பெருந்திரையில் புகுந்தவரே!
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா’ விலும்
‘வாயை மூடிப் பேசவும்’போன்ற படங்களிலும்
இயல்பாய் நடித்தே…
இதயங்களில் புகுந்தவரே!
குணச்சித்திர வேடங்களில்…
குலுங்க வைத்தவரே!
இத்தனையும் செய்துவிட்டு
இளவயது தன்னிலேயே
இவ்வுலகைப் பிரிந்தவரே!
எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டஎங்களால்
பிரிவை ஏற்கும்
பெரும்பலம் இல்லையே!
ஊற்றாய்க் கண்கள்
உதிர்த்திடும் நீரே
எங்கள் மனத்தை
இயல்பாய்க் காட்டிடும்!
உங்களின் ஆன்மா…
நித்திய அமைதியில்
நின்றே இலங்கட்டும்!