கிரேக்கத்தில் Trypanon; இலத்தீனில் Trepanum; ஆங்கிலத்தில் Trepanning… ஆதார மொழி தமிழ் என்பது தெரியுமா?

துளையிடும் தச்சுக் கருவி...
துளையிடும் தச்சுக் கருவி...

ன்றைய நவீன மருத்துவ உலகில் மனிதர்களின்  மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு தொடர்பான நோய்க்கு, பாதிப்புக்கு உள்ளானவரின்  மண்டையோட்டை  கருவி கொண்டு துளையிட்டு செய்யப்படும் சிகிச்சைக்கு - Trepanning/Trepanation என்று பெயர். இந்த சிகிச்சை பண்டைய கிரேக்கத்தின் நடைமுறையைப் பின்பற்றியது என்பதால் Trypanon என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து Trepanning வந்ததாக ஆஙகில அகராதிகள் குறிப்பிட்டுள்ளன.

மருத்துவம் தவிர… இன்றைய பொறியியல் துறையிலும் துளையிடும் இயந்திரங்களைக் குறிக்கும் சொல்லாக Trepannationஐ பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு இன்றைய மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில்நுட்பத்தைக் குறிக்கும் கலைச்சொல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்  தமிழ் முன்னோர்கள் விதைத்த விதை என்று சொன்னால் நம்புவீர்களா?

இதையும் படியுங்கள்:
சுண்டைக்காயின் சூப்பர் பயன்கள்!
துளையிடும் தச்சுக் கருவி...

கிரேக்கத்தில் - Trypanon.
இலத்தீனில் - Trepanum.
ஆங்கிலத்தில் - Trepanning, trepanation, trephination, trephining.. எனக் குறிப்பிடப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் நம் தமிழ் மொழியிலிருந்து சென்று திரிந்தவையே!
தமிழிலிருந்து சென்று கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் நீங்கா இடம் பிடித்து - பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் அழியாமல் நிலைத்து நிற்கும் தமிழ்ச்சொல்லே இதற்குச் சான்றாக விளங்குகிறது. அது என்ன சொல்?
ஆம். துரப்பணம் - என்ற தமிழ்ச்சொல்தான் கிரேக்கத்தில் - Trypanon என்றும், இலத்தீனில் - Trepanum என்றும் ஆங்கிலத்தில் - Trepanning/ Trepanation என்றும் எடுத்தாளப்பட்டது.

துரப்பணம் - என்றால் துளையிடும் தச்சுக் கருவி; துளைக்கும் ஊசி என்று பொருள். பண்டைய தச்சர்கள் துளைகளை உருவாக்க அந்நாட்களில் பயன்படுத்திய கருவியின் தமிழ்ப்பெயராகும்.

தமிழ் மொழியில் துருவுதல் - என்றால் துளைத்தல், துளைத்துச் செல், ஊடுசெல், உட்சென்று ஆராய் போன்ற பொருள்களைக் குறிப்பதாகும். துருவுதல் என்பது, ஒன்று இன்னொன்றில் புகுந்து ஊடுருவிச் செல்லுதல்.
தூர்த்தல் = உள்செல்லுதல்.

Drilling machine...
Drilling machine...

துருவிச் செல்லும் (துளைத்துச் செல்லும்) பண்பையொட்டி அமைந்த பெயர்தான் - துரப்பணம்.
மரத்திலோ கற்களிலோ தேவையான துளைகளை எளிதாக உருவாக்கும் பொருட்டு கண்டுபிடிக்கப்பட்டதே இக்கருவி. இன்றைக்கும் நம்மூரில் துளையிடும் Drilling machineஐ துரப்பணம் என்றுதான் அழைப்பார்கள்.
இன்றைக்கு மின் ஆற்றலின் துணையோடு பயன்படுத்தப்படும் .

Drilling machine-க்கு முன்னோடிதான் தமிழர்கள் பயன்படுத்திய துரப்பணக் கருவி.
பண்டைய இலத்தீன், கிரேக்க, ஆங்கில மொழிகளுக்கு நம் தமிழ் மொழி வெறும் சொற்களை மட்டும் வழங்கவில்லை... அவற்றோடு சேர்த்து அறிவியலையும் கண்டுபிடிப்புகளையும் வழங்கியிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது, அல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com