சுண்டைக்காயின் சூப்பர் பயன்கள்!

Super benefits of Sundaikkai
Super benefits of Sundaikkaihttps://www.youtube.com

ம் வீடுகளிலே தானாகவே முளைக்கக்கூடிய செடிதான் சுண்டைக்காய். அது மரமாக வளர்வதற்குள்ளாகவே காய்கள் வைக்கத் தொடங்கிவிடும். சுண்டைக்காய் செடியை பெரிதாக பராமரிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இருப்பினும் அதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். பார்க்க சின்னதாக இருக்கும் சுண்டைக்காயின் பயன்களை கேட்டால் வாயடைத்து போய் விடுவோம்.

சுண்டைக்காய் வயிற்றில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் ஜீரணக் கோளாறு போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. உடலில் உள்ள இரும்பு சத்து குறைபாட்டை போக்குகிறது. இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதயம் சம்பந்தமான பிரச்னைகளைப் போக்குகிறது.

இந்தச் செடியை வெப்பமண்டல இடங்களான ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் இதற்கு பல பெயர்கள் உண்டு. மலையாளத்தில், 'சுண்டங்கா’ என்றும் தமிழில், 'சுண்டைக்காய்' என்றும் இந்தியில், 'புகாத்’ என்றும் அழைக்கின்றனர். இது வயிற்று வலி பிரச்னைகளை போக்குவது மட்டுமல்லாமல், செரிமான சம்பந்தமான பிரச்னைகளையும் குணமாக்குகிறது. சுண்டைக்காயை பற்றி ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுண்டைக்காயில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின், மினரல், ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்றவை உள்ளன. இதில் கார்போஹைட்ரேட், கலோரி, கொழுப்பு போன்றவை குறைவாகவே உள்ளதால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஏற்றதாகக் கருதப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் கேரோட்டினாய்ட் நன்றாக கண் பார்வை தெரியவும் சருமப் பளபளப்புக்கும் உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரும்பு சத்து உடலில் இரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. கால்சியம், எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தமிழ்நாட்டில் சுண்டைக்காயை மோரில் நனைத்து காய வைத்து வத்தலாகப் போட்டு வைத்து கொள்வார்கள். சுண்டைக்காய் வத்தல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுண்டைக்காய் வத்தலை புளியுடன் சேர்த்து சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்தால், நாவில் உமிழ்நீர் ஊற வைக்கும் சுவையை கொடுக்கும். அது மட்டுமில்லாமல், சுண்டாக்காயில் பொரியல், சாம்பார் என்று முடிந்த அளவு இந்த காயை உணவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படியுங்கள்:
இரவு உணவில் எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா?
Super benefits of Sundaikkai

சுண்டைக்காய் உண்பதால் உடலில் இரத்தத்தை அதிகரித்து அனிமியாவை போக்குகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து சர்க்கரை வியாதி வராமல் காக்கிறது,. ஹார்மோன் குறைபாட்டல் தள்ளிப்போகும் மாதவிடாய் பிரச்னையை தீர்த்து, சரியான நேரத்திற்கு மாதவிடாய் வருவதற்கு உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயை போக்குகிறது. ஜுரம், சளி, இருமல் போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது. சிறுநீரகக் கற்களைப் போக்குகிறது.

சுண்டைக்காயை வெயிலில் நன்றாகக் காய வைத்து வத்தலாக்கி பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு இரண்டு வாரங்கள் வரை அவ்வப்போது பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com