உரத்த சிந்தனை அமைப்பு சார்பில் பாரதி உலா - 11ஆம் ஆண்டு தொடக்க விழா...

பாரதியின் புகழ் மேலோங்க உரத்த சிந்தனை அமைப்பு சார்பில் 11ஆம் ஆண்டு பாரதி உலா தொடக்க விழா நடைபெற்றது.
Bharathi ula 11th year Opening ceremony
Bharathi ula
Published on

உரத்த சிந்தனை அமைப்பு சார்பில், 11ஆம் ஆண்டு பாரதி உலா தொடக்க விழா, கடந்த நவம்பர் 2-ம் தேதி, சென்னை இந்துஸ்தான் சேம்பர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை, சென்னை ஸ்ரீ ராம் சமாஜத்தின் தலைவரான ஆடிட்டர் N.R.K. தலைமையில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் மகாகவி பாரதியார் படத்தினை திறந்து வைத்தார்.

சென்னை சாஸ்திரா இயக்குநரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவருமான பேராசிரியை Dr.சுதா சேஷய்யன் அவர்கள் 11-ம் ஆண்டு பாரதி உலா இலச்சினையை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு அளிக்கப்பட இருக்கும் பாரதி உலா சிறப்பு சான்றிதழ், அதற்கான பதாகை, நினைவுப் பரிசு போன்றவை வெளியிடப்பட்டன.

மேலும் இந்த விழாவில், சாவித்திரி பவுண்டேஷன் நிறுவனர் ஆடிட்டர் ஜே. பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், சென்னை சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் முனைவர் திரு.பஞ்சாபகேசன், தபம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மேகநாதன், எழுத்தாளர் தேவிபாலா, டெக்னோ ப்ராடக்ட்ஸ்‌ நிறுவனரும்‌ திரைப்பட நடிகருமான முரளி ஸ்ரீனிவாசன், திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்:
உரத்த சிந்தனையின் பாரதி உலா நிறைவுவிழா!
Bharathi ula 11th year Opening ceremony

உரத்த சிந்தனை தலைவர் பத்மினி பட்டாபிராமன், செயலாளர் உதயம்ராம் ஆகியோர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com