பல்வேறு நுழைவுத் தேர்வுகள்; காத்திருக்கும் வாய்ப்புகள்! DON’T MISS IT!

Entrance Exams
Entrance Exams
Published on

பல்வேறு வாய்ப்புகளை உள்ளடக்கிய நாடான இந்தியாவில், கல்வி மற்றும் தொழில்முறை வேலைகளுக்கான நுழைவாயில்களாக செயல்படும் ஏராளமான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் பங்கேற்பாளரின் தகுதி, அறிவு மற்றும் அவர்கள் ஆசைப்படும் குறிப்பிட்ட படிப்பு அல்லது வேலை பாத்திரங்களுக்கான திறன்களை மதிப்பிடுவதற்காக மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நடத்தப்படும் சில முக்கிய நுழைவுத் தேர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்:

உயர் கல்விக்கு:

பொறியியல்: Joint Entrance Examination (JEE) என்பது பொறியாளர்களுக்கான முக்கியமான நுழைவுத் தேர்வாகும். இது அவர்களை ஐஐடி(IIT) மற்றும் என்ஐடி(NIT) போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க அழைத்துச் செல்கிறது.

மருத்துவம்: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(National Eligibility cum Entrance Test) (NEET) மருத்துவ ஆர்வலர்கள் தகுந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை சார்ந்த கல்வி கற்க இந்த தேர்வு வழிவகை செய்கிறது.

மேலாண்மை (Management): பொது நுழைவுத் தேர்வு (CAT) என்பது IIMகள்(Indian Institute of Management) மற்றும் பிற சிறந்த B-பள்ளிகளில் (Top B-(Business) Schools) பயில இலக்காகக் கொண்ட வணிக நிர்வாக ஆர்வலர்களுக்கான நடத்தப்படும் தேர்வு.

சட்டம்: பொது சட்ட சேர்க்கை தேர்வு (The Common Law Admission Test) (CLAT) தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை சட்ட படிப்புகளை பயில திறந்த கதவுகள் போன்றது.

பொது நுழைவுத் தேர்வு (Common Entrance Test) (CET): அந்தந்த மாநிலங்களில் உள்ள தொழில்முறை படிப்புகளில் சேர்வதற்கான மாநிலங்கள் அளவில் நடத்தப்படும் தேர்வுகள்.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபாரின் டிரேட் (Indian Institute of Foreign Trade) (IIFT): சர்வதேச வணிக நிர்வாகத்தில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கான தேர்வு.

Joint Admission Test for M.Sc.(JAM): M.Sc. சேர்க்கைக்கு மற்றும் ஐஐடி(IIT) மற்றும் ஐஐஎஸ்சியில்(IISC) பிற முதுகலை அறிவியல் திட்டங்களில் சேர விரும்புவோருக்குக்கான தேர்வு .

NIFT நுழைவுத் தேர்வு: தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கல்லூரியில் (National Institute of Fashion Technology) சேர்வதற்கு நடத்தப்படுகிறது. இதில் வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் ஃபேஷனில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான படிப்புகளை வழங்குகிறார்கள்.

வடிவமைப்புக்கான பொதுவான நுழைவுத் தேர்வு (Common Entrance Examination for Design) CEED: ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சியில் வடிவமைப்பில்(Design) முதுகலைப் படிப்புகளில் சேர்வோர்க்கு நடத்தப்படும் தேர்வு.

ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் டெக்னாலஜிக்கான தேசிய கவுன்சில் கூட்டு நுழைவுத் தேர்வு (National Council for Hotel Management and Catering Technology Joint Entrance Examination) NCHMCT JEE: விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகத் திட்டங்களில் சேர்ந்து பணிபுரிய விரும்புவோர்க்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு.

ஆராய்ச்சி மற்றும் ஃபெல்லோஷிப்களுக்கு(For Research & Fellowships): பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு(Graduate Aptitude Test in Engineering) (கேட்): முதுகலை பொறியியல் திட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைகளுக்கு(PSU) தகுதியான ஆட்களை எடுக்கும் நுழைவாயில்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research) (CSIR) UGC NET: அறிவியல் பிரிவுகளில் ஆராய்ச்சி பெல்லோஷிப்பை(fellowships) நோக்கமாகக் கொண்டவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பாலியல் வன்முறைக்கு ஆண் குழந்தைகள் பலியாவது இல்லையா?
Entrance Exams

அரசு வேலைகளுக்கு:

சிவில் சர்வீசஸ்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(The Union Public Service Commission) (யுபிஎஸ்சி) மதிப்புமிக்க சிவில் சர்வீசஸ் தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளை நடத்துகிறது. இது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் பிற மத்திய சேவைகளுக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) (SSC): SSC CGL, SSC CHSL மற்றும் SSC MTS போன்ற அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்வார்கள்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(Railway Recruitment Board) (RRB): இந்திய ரயில்வேயில் பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகளை இதன் மூலம் நடத்தி தகுதியான ஆட்களை தேர்வு செய்கிறார்கள் .

வங்கியியல்(Banking): வங்கி பணியாளர் தேர்வாணையம் (The Institute of Banking Personnel Selection)(IBPS) மற்றும் SBI PO தேர்வுகள் இணைந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏராளமான பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை இதன் மூலம் நியமிக்கின்றன.

பாதுகாப்பு: நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி(The National Defence Academy) (என்.டி.ஏ.) தேர்வானது இந்திய ஆயுதப் படைகளில் சேர விரும்பும் இளம் ஆர்வலர்களை நியமிக்கிறது.

வெளிநாட்டு கல்விக்கு:

கிராஜுவேட் ரெக்கார்ட் தேர்வுகள்(Graduate Record Examinations ) (GRE): வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் நேரடியாக சென்று பட்டபடிப்பு படிக்க விரும்புவோருக்கான சேர்க்கை தேர்வு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com