

கம்யூனிசம் பற்றிய விமர்சனங்களை பின்னர் பார்ப்போம். இப்போது கம்யூனிச சமுதாயம் எப்படி இருக்கும் என்று மட்டுமே பார்ப்போம்.
முதலில் தேவைக்கான உற்பத்தி தான் இருக்கும்.
தொழிலாளி சம உரிமை பெற்று இருப்பான். பெண்கள் மிகுந்த முன்னேற்றம் அடைந்து இருப்பார்கள். விமான மற்றும் கப்பல் ஓட்டிகளாகவும் இருப்பார்கள். திறமை, தகுதிக்கு ஏற்ப எல்லோருக்கும் வேலை நிச்சயம். ராணுவம் போலீஸ் இருக்காது. நாடுகளுக்கு இடையே எல்லைக்கோடு இருக்காது.
ஆம்..! பாஸ் போர்ட் தேவை இல்லை.
உற்பத்தியில் தரகர், சந்தை எல்லாம் இருக்காது.
"அவரவர் திறமைக்கேற்ற உழைப்பு; அவரவர் தேவைக்கேற்ற பகிர்வு" இருக்கும்.
பாரளுமன்ற, சட்ட மன்றங்கள் இருக்காது.
உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒருங்கிணைக்க ஒரு 'நிர்வாக அமைப்பு' (Administrative body) இருக்கும். அது அடக்குமுறை செய்யும் அரசாங்கமாக இல்லாமல், சேவைகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக இருக்கும்.
கல்வி நடைமுறை செயல்பாட்டுடன் இருக்கும். முதலாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி வரை எல்லோருக்கும் இலவசம்.
கல்வி நிறுவனங்கள் சமூக உடைமைகளாக இருக்கும்.
அதேபோல் பல்நோக்கு மருத்துவமனைகளும் சமூக உடைமையாக இருக்கும்.
பல் பிடுங்குவதிலிருந்து உயர்தர அறுவை சிகிச்சை வரை எல்லோருக்கும் இலவசம்.
எல்லோருக்கும் இலவச கல்வி, சிகிச்சை... இது போதாதா…?
பெரும்பாலும் வானவியல் ஆராய்ச்சி செவ்வன நடக்கும்.
புதிய விண்வெளி திட்டங்கள் வரும்.
விவசாய வேளாண்மை ஆராய்ச்சி அதிகரிக்கும்.
மக்கள் தங்களுக்குள் சச்சரவு செய்யாமல் அவரவர் கடமையை செய்வார்கள்.
விவசாயம் சமூக கூட்டுறவு முறையில் நடைபெறும்.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை. மற்ற தினங்களில் 6 மணி நேர வேலை மட்டுமே.
மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் சினிமா, இசை, இலக்கியம், சரித்திரம் போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்கள்.
ஆம்...! ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்கப்படும்.
விளையாட்டு ஒரு முக்கிய பொழுது போக்கு.
ஒலிம்பிக்ஸ் நடைபெறும்.
நாடு வாரியாக இல்லாமல் 'பிராந்திய வாரியான' போட்டிகள் நடக்கும்.
உலகில் குற்றங்கள் இல்லாமல் போகும். ஆதலால் போலீஸ், காவல் துறை மற்றும் நீதி மன்றத்திற்கு அவசியம் நிச்சயமாக இருக்காது.
அனைத்து மத, இன, வேறுபாடுகள் இருக்காது. மத நிறுவனங்கள் இருக்காது. ஆனால் மக்கள் தங்கள் நம்பிக்கைகளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவார்கள். அறிவியல் பூர்வமாக வாழ்வார்கள்.
எல்லோரும் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவார்கள்.
இட ஒதுக்கீடு இருக்காது. அதற்கு அவசியமும் இருக்காது. அதான் எல்லோருக்கும் கல்வி, சிகிச்சை இலவசம் ஆகி விட்டதே…?
மிகவும் முக்கியமாக லஞ்சம், ஊழல் இருக்காது.
குற்றங்கள் மறைந்ததால் நீதி மன்றமும் அவசியம் இல்லை.
விபச்சாரம் இருக்கவே இருக்காது.
மேலும், ரயில் நிலையம், பேருந்து நிலையம், நடைபாதை, கோவில், மசூதி மற்றும் சர்ச் வாசல்களில் பிச்சைக்காரர்கள் இருக்க மாட்டார்கள்.
பூமி செழித்து ஓங்கும்.
மனிதனின் கடைசி கட்டம் தான் கம்யூனிசம்.
எந்த வித பிரச்னையும் இல்லாமல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆராய்ச்சி செய்யலாம்.
ஆனால் இயற்கையை ஆராய்ச்சி செய்வது தான் மிகவும் முக்கியமானது.
அணு முதல் அண்டம் வரை ஆராய்ச்சி செய்து இயற்கையை தனது வசம் மனிதன் வைத்து இருப்பான்.
மொத்தத்தில் அது ஒரு பூலோக சொர்க்கம்.
பலர் காணும் கனவு. கனவு நினைவாக வேண்டும். விஞ்ஞான சோஷலிசம் தந்த காரல் மார்க்ஸ் கட்சி அறிக்கையின் இறுதியில்…
“நாம் இழக்க ஒன்றும் இல்லை. ஆனால் நம் எதிரே ஒரு பொன்னுலகம் காத்துக் கொண்டு இருக்கிறது…! “ என்று முடித்தார்.
ஆம்.. அந்த பொன்னுலகைக் காண நாம் நிச்சயமாக ஆவலோடு இருக்க வேண்டும்…
ஒரு கருத்தியலாக இது ஒரு அழகான கனவு. இதனை நனவாக்க நாம் பயணிக்க வேண்டிய பாதை என்ன?