கள்ளச்சாராயத்தை ஒழிக்கணுமா? இத முதல்ல தடை செய்யுங்க பாஸ்!

Eradication of kalla sarayam
Eradication of kalla sarayam

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 60 தாண்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் டாஸ்மாக் மது விலை அதிகமாக இருப்பதால், குடிமகன்கள் மலிவாக கிடைக்கும் சாராயத்தை நாடி சென்று தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர்.

இதில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது என்பது நகரப் பகுதியில் நடக்க வாய்ப்பில்லை. எங்கெல்லாம் மலைகள் மற்றும் மலை கிராமங்கள் உள்ளனவோ அந்தப் பகுதிகளிலேயே கள்ளச்சாராயம் ஊறல் போடப்பட்டு, காய்ச்சப்பட்டு, நகரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு அவை பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு நாற்பது ரூபாய் முதல் 60 ரூபாய் வரை என விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுப்பதற்கு என மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்குகின்றனர். ஆனாலும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்திய பாடில்லை.

கடந்த ஆண்டு மரக்காணம் சம்பவத்திற்கு பின்னர் போலீசார் தீவிரமடைந்து, கள்ளச்சாராய வியாபாரிகள் மேல் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்தனர். சிலர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பிரயோகிக்கப்பட்டது.அதன் பின்னர் அந்த சம்பவத்தை அனைவரும் மறக்க தொடங்கிய நிலையில், போலீசார் தங்கள் நடவடிக்கைகளை தளர்த்திக் கொண்டனர். இப்போது கருணாபுரம் சம்பவத்திற்கு பின்னர் போலீசார் மீண்டும் முனைப்பு காட்ட தொடங்கியுள்ளனர்.

Kalla Sarayam
Kalla Sarayam

Kalla Sarayamஇதில் பலருக்கும் வரும் சந்தேகம், கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்பவா்கள் மீது காட்டும் வேகத்தை, காய்ச்சும் நபர்கள் மீது ஏன் போலீசார் காட்டுவதில்லை? என்பதே ஆகும். இதற்கு முக்கிய காரணம் சாராயம் காய்ச்சும் நபர்கள் பெரும்பாலானவர்கள் மலை கிராமங்களை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மலைப்பகுதி அத்துபடியாக இருக்கும். போலீசருக்கும் வனப்பகுதி தெரிந்திருந்தாலும், அவர்கள் அளவுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனாலேயே சாராயம் விற்பவர்களைத்தான் பெரும்பாலும் கைது செய்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
காது கொடுத்துக் கேளுங்களேன்..!
Eradication of kalla sarayam

இதனால் தான் எத்தனை பேரை கைது செய்தாலும் மீண்டும் மீண்டும் புது புதிதாக கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் வந்து கொண்டே உள்ளனர். இதனால் ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராய பலிகள் வந்த பின்னர் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பதும் அதன் பின்னர் மறந்து போவதும் மீண்டும் ஏதாவது உயிர் பலி ஏற்படுவதும் என கள்ளச்சாராய கலாச்சாரம் தொடர் கதையாக நீண்டு கொண்டே செல்கிறது.

இதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றால் சாராயம் காய்ச்சும் கும்பலை கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். சிறையில் இருந்து அவர்கள் விடுதலையான பின்னர்  வாழ்வாதாரத்துக்காக ஏதாவது ஒரு தொழில் தொடங்க உதவி செய்யலாம். அதே நேரம் அவர்கள் மீண்டும் கள்ளச்சாராய தொழிலுக்கு செல்கிறார்களா? என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

இதில் குறிப்பிட் சொல்ல வேண்டியது, கள்ளச்சாராய ஊறலுக்கு தேவையான முக்கியமான பொருள் வெல்லம். இது நகர் பகுதியில் இருந்து தான் கண்டிப்பாக மலை கிராமங்களுக்கு செல்லும். அதை கடுமையாக நடவடிக்கை எடுத்து ,அதிகப்படியாக வெல்லம் வாங்கும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே பாதி அளவிலான கள்ளச்சாராயம் ஒழிந்து போகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com