'Perfect February'ன்னா என்ன தெரியுமா?

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் வரும் பிப்ரவரி மாதத்தை விட இந்த வருட (2026) பிப்ரவரி மாதம் சற்று வித்தியாசமாக உள்ளதை நீங்கள் கவனித்தீர்களா?
February calendar 2026
February calendar 2026
Updated on
Kalki Strip
Kalki Strip

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் வரும் பிப்ரவரி மாதத்தை விட இந்த வருட (2026) பிப்ரவரி மாதம் சற்று வித்தியாசமாக உள்ளதை நீங்கள் கவனித்தீர்களா? ஆம். இந்த வருட பிப்ரவரி மாதத்தில் ஒரு தனிச்சிறப்புள்ளது. இது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

பொதுவாக பிப்ரவரி மாதம் என்றாலே 28 நாட்களும், லீப் வருட பிப்ரவரியில் 29 நாட்களும் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தாண்டு (2026) பிப்ரவரி மாதம் கொஞ்சம் வித்தியாசமானது என்பதால் சமூக வலைத்தளங்களில் தற்போது ‘பெர்பெக்ட் பிப்ரவரி’ (Perfect February) என்ற பெயரில் வைரலாகி மக்களிடைய பேசுபொருளாகி உள்ளது. இதற்கு காரணம், நீங்கள் உங்கள் வீட்டு காலண்டரை சரியாக பார்க்கவில்லை என்றால் இந்த வித்தியாசம் உங்களுக்கு தெரியாது. அது, காலண்டரில் அமைந்துள்ள ஒரு அபூர்வமான மற்றும் கனகச்சிதமான ஒழுங்கு முறையாகும்.

காலண்டர் நிபுணர்களின் கூற்றுப்படி, இப்படிப்பட்ட பிப்ரவரி மாத அமைப்பு என்பது ஒவ்வொரு 6 அல்லது 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அபூர்வமான நிகழ்வு என்று கூறுகின்றனர்.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் லீப் ஆண்டு அல்ல. அதனால், பிப்ரவரி மாதத்தில் வழக்கம்போல் 28 நாட்கள் இருக்கும். இந்த 28 என்ற எண் 7-ல் சரியாக வகுபடக்கூடியது. அதனால் பிப்ரவரி மாதம் முழுமையாக நான்கு வாரங்களாக, ஒவ்வொரு கிழமையும் தலா 4 முறை அமைகிறது.

முக்கியமாக 2026 பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்று கிழமை தொடங்கியது. மாதத்தின் கடைசி நாளான 28-ம்தேதி சனிக்கிழமையுடன் முடிகிறது. அதாவது, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பிப்ரவரி 28 சனிக்கிழமையுடன், சரியாக 4 வாரங்களில் (28 நாட்கள்) முடிகிறது. காலண்டரை நேரில் பார்த்தால், இந்த மாதம் எந்தவித இடையூறும் இன்றி ஒரு சுத்தமான 4x7 செவ்வக வடிவத்தில் அழகாக அமைந்திருப்பதை காணலாம்.

எந்த ஒரு நாளும் அடுத்த வாரத்திற்கு தள்ளப்படாமல், நான்கு வரிசைகளில் சரியாக பொருந்தி இருப்பதே இதன் தனிச்சிறப்பாகும். இதுவரை எந்த மாதத்திலும் இப்படியொரு சிறப்பு அமைந்ததில்லை என்பது தான் இதன் சிறப்பு அம்சமாகும்.

இதையும் படியுங்கள்:
பிப்ரவரி 30 ஆம் தேதி... இது என்ன புதுசா இருக்கே!
February calendar 2026

இந்த மாதத்தில் ஞாயிறு-சனி வரை உள்ள அனைத்து கிழமைகளும் தலா, நான்கு முறை மட்டுமே வருகின்றன. அதாவது, 4 ஞாயிறு, 4 திங்கள், 4 செவ்வாய், 4 புதன், 4 வியாழன், 4 வெள்ளி, 4 சனி எனச் சரியாக 28 நாட்கள் வருகின்றன. எந்த கிழமையும் ஐந்து முறை வராததால் இது ‘பெர்பெக்ட்’ (Perfect) என அழைக்கப்படுகிறது.

இந்த வகை ‘நிச்சயமான’ (Oddly satisfying) காலண்டர் அமைப்பு அடிக்கடி வராது, இதற்கு முன்னதாக 2015-ம் ஆண்டு இதேபோன்று ஒரு ‘பெர்பெக்ட் பிப்ரவரி’ அமைந்தது. அதன் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தாண்டு (2026-ல்) மீண்டும் இந்த அபூர்வமான காலண்டர் ஒழுங்குமுறை ஏற்பட்டுள்ளது. இந்த தனித்துவ அமைப்பால், இவ்வருட பிப்ரவரி மாதம் ஒரு சிறப்பு மாதமாக கருதப்படுகிறது.

மீண்டும் 2037, 2043-ம் ஆண்டில் தான் இதுபோன்ற ‘பெர்பெக்ட் பிப்ரவரி’ அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்புவரை உங்கள் வீட்டில் உள்ள காலண்டதில் பிப்ரவரி மாத சிறப்பை பார்க்காதவர் இதை படித்த பிறகாவது அந்த அதிசயத்தை பார்த்து ரசியுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com