‘பந்து’ என்பதன் பொருள் என்ன?

‘பந்து’ என்பதன் பொருள் என்ன?

ந்த், பந்தன் - போன்ற வடமொழிச் சொற்களுக்கும், Bind, Band, Bandage, Bond, Bondage, Bonded, Bundle, Husband போன்ற  எண்ணற்ற ஆங்கிலச் சொற்களுக்கும்  - நம் தமிழ்மொழிக்கும் இடையில் உள்ள 'பந்தம்' என்னவென்று இன்றையப் பதிவில் பார்ப்போம்!, பந்தன் - போன்ற வடமொழிச் சொற்களுக்கும், Bind, Band, Bandage, Bond, Bondage, Bonded, Bundle, Husband போன்ற  எண்ணற்ற ஆங்கிலச் சொற்களுக்கும்  - நம் தமிழ்மொழிக்கும் இடையில் உள்ள 'பந்தம்' என்னவென்று இன்றையப் பதிவில் பார்ப்போம்!


ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டு வணிகத் தலங்களின் கதவை இழுத்து மூடுவதை 'பந்த்' (Bandh) எனும் இந்திச் சொல் குறிக்கிறது. சரியாகச் சொல்வதென்றால் கதவை இழுத்துக் கட்டப்படுவதே இச்சொல்லின் பொருள். இதனை தமிழ் மொழியில் 'கடையடைப்பு' என்று சொல்கிறோம்!


எங்கிருந்து சென்றது இந்த... ‘பந்த்’ என்ற சொல் ?
தமிழர்களின் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்று பந்து விளையாட்டு!


நீண்ட மெல்லிய துணியை  மென்மேலும் நெருக்கமாகச்  சுற்றிக்கட்டி - உருண்டை வடிவமாக உருட்டிச் செய்து  விளையாட்டுக்குப் பயன்படுத்திய பொருளையே  'பந்து' என்று பெயரிட்டழைத்தனர். (இந்த வகைப் பந்துகளோடு ஒப்பிடுகையில், இரப்பர் பந்துகள் மிகச் சமீபத்திய கண்டுபிடிப்பு ஆகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.)

பந்து - என்றால் கட்டு, முடிச்சு, கட்டப்பட்டது என்பது பொருள்.  இன்றைக்கும் நூல் பந்து, சணல் பந்து, மலர்ப்பந்து போன்ற சொற்களை வழக்கில் காணலாம்.

புல் - என்ற மூலத்திலிருந்து பிறந்த சொல்லே பந்து. புல் > புல்லுதல் - என்பது பற்றுதல், பொருந்துதல், சேர்தல், தழுவுதல்... போன்ற கூட்டக் கருத்தைக் குறிக்கும் வேர்ச்சொல் ஆகும்.
புல் > பல் > பல்குதல், பல்கிப் பலவாக மாறுதல்.
பல் > பல > பன்மை.
பல் + து = பத்து (10 எனும் எண்).
பல > பன் + து = பந்து. பல்கக் கட்டப்பட்டதே பந்து!
பற்று = பந்து. பற்று கொண்ட உறவு, பிணைக்கப்பட்டது, கட்டப்பட்டது.
பந்து > பந்தம் = பொருத்தமாக இணைந்து கட்டப்பட்ட உறவு.
பந்து > பந்துக்கள் = உறவு, உறவினர்கள்.
பந்தல் = கட்டப்பட்ட கொட்டகை.
பந்தயம் = போட்டியில் கட்டப்படும் தொகை (பந்தயம் கட்டுதல், bet கட்டுதல் எனச் சொல்வதை நோக்குக !! ).
பந்தம் ( தீப்பந்தம்) = துணியை பந்தாகச் சுற்றிக் கட்டப்பட்டு - ஏற்றப்பட்ட தீ!
கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டு உருவானதே = ஒப்பந்தம்.
பந்தனம் = கட்டும் கயிறு. காப்புக்கயிறு கட்டுவதே 'இரக்ஷாபந்தன்'.
சேது பந்தனம் = அணைக்கட்டு.
அஷ்டபந்தனம் = எட்டு மூலிகைகளைக் கொண்டு கட்டி வைத்தல், கட்டுக்குள் வைத்தல். கோயில் கும்பாபிஷேகத்தின்போது அஷ்டபந்தனம் என்று சொல்லப்படும் எட்டு வகையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 'கட்டுமருந்தைக்' கொண்டு சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். இதற்கு 'அஷ்டபந்தன' மஹா கும்பாபிஷேகம் என்று பெயர்.

இதையும் படியுங்கள்:
ஜம்மு-காஷ்மீர் போறீங்களா? இந்த 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
‘பந்து’ என்பதன் பொருள் என்ன?

அடுத்து, ஆங்கில மொழியில் வழக்கிலிருக்கும் இதன் உறவுச் சொற்கள் சிலவற்றையும் பார்ப்போம்!
* Bind ( to tie or wrap) - என்றால் கட்டு.( Binding wire, Book Binding).
* Bond =  பிணைப்பு, பந்தம் (relationship).
* Bonded = பிணைக்கப்பட்ட.(Bonded Labour, Bond paper).
* Bondage = கட்டுப்பாடு, அடிமைத்தனம்.
* Bundle = மூட்டையாகக் கட்டப்பட்ட, முடி போட்டுக் கட்டப்பட்டது.
* Band / Bandage = கட்டு, துணிக்கட்டு.
* Husband = கணவன். Hus என்றால் house (வீடு)
Band என்றால் பந்தம் கொண்டவன்/ பற்று மிக்கவன் என்று பொருள் .
* Bund = அணைக்கட்டு, வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காக மண்ணால் நதி அல்லது ஓடை மீது எழுப்பப்படும் செய்கரை; அணைகரை.
* Abandon = தனது பொறுப்பில் உள்ள ஒருவரை/ஒன்றை பெரும்பாலும் நிரந்தரமாகக் கைவிடு; துற.(கட்டவிழ்த்து விடு).
*Abundant / Abundance = கட்டற்ற / கட்டுக்குள் அடங்காத/ மிகுதி /ஏராளம்/பேரளவு.

'கட்டுதல்' என்ற அடிக்கருத்தில் அமைந்த இத்தனை சொற்களின் மூலம் தமிழ்மொழியே என்பது இப்போது விளங்கியதா நண்பர்களே?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com