ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) பெயர் காரணம் என்ன?

ரோல்ஸ் ராய்ஸ்...
ரோல்ஸ் ராய்ஸ்...

லகிலேயே மிகவும் விலை உயர்ந்த கார் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம்தான். பழமை வாய்ந்த இந்தக் கார் நிறுவனம்தான் இப்பொது உலகில் மிகவும் அதிக விலை கொண்ட கார்களை வடிவமைத்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் Sweptail, Boat tail மற்றும் Drop Tail என்ற மூன்று வெவ்வேறு வகை கார்களை விற்பனை செய்துவருகின்றது.

பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், அதன் சமீபத்திய தலைசிறந்த படைப்பான La Rose Noire Droptailஐ அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

$30 மில்லியன் (தோராயமாக ரூ. 211 கோடி) என்ற அதிர்ச்சியூட்டும் விலைக் குறியுடன், இந்த வாகனம் கலிபோர்னியாவின் பெப்பிள் பீச் அருகே ஒரு பிரத்யேக நிகழ்வில் அறிமுகமாகி, உலகின் மிக விலையுயர்ந்த கார் என்ற இடத்தைப் பிடித்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ்...
ரோல்ஸ் ராய்ஸ்...

ரோல்ஸ் ராய்ஸ் என்பதன் பெயர்க் காரணமும், இந்தக் கார்கள் ஒரு எளிய மனிதரால் உருவான பிரம்மாண்டமான படைப்பு என்பதும் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இப்பதிப்பில் பார்ப்போம்:

ங்கிலாந்து நாட்டின் ஜேம்ஸ் ராய்ஸ், மேரி தம்பதிகளுக்கு 1863 மார்ச் 27ம் தேதி பிறந்தார் ஹென்றி ராய்ஸ். இரண்டே வருடங்கள்தான் பள்ளியில் படித்தார். 10 வயதில் தந்தையை இழந்தார். குடும்ப சுமை அவர் மீது வந்தது. தெருத்தெருவாக பத்திரிகை விற்றார். அதோடு தந்தி சேவகனாகவும் வேலை செய்தார். போதுமான ஊதியம் கிடைக்கவில்லை. நல்ல அனுபவம் கிடைத்தது. தானே சொந்தமாக ஒரு தொழில் செய்ய விரும்பி ரயில்வே தொழில்கூடத்தில் தொழிற் கல்வி பயின்றார். பின்னர் முன்னேற்றம் காண விரும்பி லண்டன் சென்றார்.

லண்டனில் மின் விசை நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அதோடு தனது கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள மாலை நேர வகுப்பில் சேர்ந்தார். தொழிற் கல்வியின் பயனாக சிறுசிறு கருவிகளை செய்து பழகினார். இவரது ஆர்வத்தை கண்ட நண்பர் ஒருவர், தான் தொடங்க இருக்கும் தொழிற்சாலைக்கு ராய்ஸின் ஆலோசனைகள் கேட்டார். ராய்ஸ் உற்சாகமடைந்தார்.

இதையும் படியுங்கள்:
காதலிப்பதும் ஒரு ரசனை தான்!
ரோல்ஸ் ராய்ஸ்...

1884ம் ஆண்டு ‘ராய்ஸ் அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் மான்செஸ்டர் நகரில் மின் கூறுகளைத் தயாரிப்பதற்காக ராய்ஸ் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். நல்ல பெயரும், பணமும் கிடைத்தது. தனது தொழிற் சாலைக்குச் சென்று வர கார் ஒன்றை வாங்கினார். அது அவரை படாய்ப்படுத்தியது. அந்தக் காரை அடித்து நொறுக்கி வீசிவிட்டு தனது பிரயாணத்திற்குத் தானே ஒரு காரை உருவாக்கினர் ராய்ஸ். அது சொகுசாய், அழகாய் இருந்தது. மற்ற கார்களைவிட பத்து மடங்கு விலை அதிகமாக இருந்தது. ஆனால், வசதியும், பிரயாண சுகமும் திருப்தியாக இருந்ததால் மேலும், சில கார்களை உற்பத்தி செய்தார்.

ராய்ஸ் உருவாக்கிய கார்களை வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். இதனால் ராய்ஸின் புகழ் பரவியது. 1904ம் ஆண்டு சார்லஸ் ரோல்ஸ் என்ற தொழில் அதிபர் ராய்ஸ்யை நாடி வந்து பேசினார். சார்லஸ் ரோல்ஸ் ஒரு பிரிட்டிஷ் பிரபு மற்றும் மோட்டார் ஆர்வலர் ஆவார், அவர் ஏற்கனவே லண்டனில் ஒரு வெற்றிகரமான கார் டீலரை நிறுவியிருந்தார்.

1904ஆம் ஆண்டில், ரோல்ஸ் மற்றும் ராய்ஸ் இருவரும் சந்தித்ததன் விளைவாக, ‘ரோல்ஸ் ராய்ஸ்’ என்ற பெயரில் சொகுசு கார்களைத் தயாரிப்பதற்காக ஒரு கூட்டாண்மையை உருவாக்கினர். அவர்களின் முதல் கார், ரோல்ஸ் ராய்ஸ் 10 ஹெச்பி, 1904இல் அறிமுகப் படுத்தப்பட்டது  அதன் சிறந்த தரம் மற்றும் தொழில் நுட்பத் திறனுக்காக விரைவாக அங்கீகரிக்கப்பட்டது. இங்கிலாந்தில் 1905ம் ஆண்டு முதலில்  தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், ஒரு பந்தயத்தில் கலந்துகொண்டதன் மூலம் உலகளவில் பிரபலமாயின. 1906ம் ஆண்டில் காரின் முகப்பில் ஆர். ஆர் என்று பொறிக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வெளிவந்து விற்பனையாயின.

பல ஆண்டுகளாக, ரோல்ஸ் ராய்ஸ், பாண்டம், சில்வர் கோஸ்ட் மற்றும் கார்னிச் உள்ளிட்ட உலகின் மிகச் சிறந்த மற்றும் ஆடம்பரமான கார்களில் சிலவற்றைத் தொடர்ந்து உருவாக்கியது. பிராண்ட் ஆடம்பர மற்றும் பிரத்தியேகத்திற்கு ஏற்றதாக மாறியது மற்றும் உலகெங்கிலும் உள்ள செல்வந்தர்கள், பிரபலங்கள் மற்றும் வணிக அதிபர்களால் விரும்பப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் ஒரு ஆடம்பர கார் பிராண்டாகும், இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தரம், கைவினைத்திறன் மற்றும் பிரத்தியேகத்தன்மைக்குச் சான்றாக விளங்குகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அவற்றின் நேர்த்தி, செயல்திறன் மற்றும் காரின் ஒவ்வொரு  பகுதிகளுக்கும் கவனம் செலுத்துவதற்காகப் பேசப்படுகின்றன. இதன் காரணமாக அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

1910ம் ஆண்டு ராய்ஸின் பங்குதாரான ரோல்ஸ் விமான விபத்தில் சிக்கி இறந்தார். அவரின் நினைவாகவே இருந்தார் ராய்ஸ். கார்களின் முகப்பில் இருந்த  சிகப்பு நிற ‘ஆர். ஆர்’ என்ற எழுத்துகளை கருப்பு நிறத்திற்கு துக்கம் காரணமாக மாற்றினார். சில நாட்களில் ராய்ஸின் உடல் நலமும் குன்றியது. 1933ம் ஆண்டு ஏப்ரல் 22 ராய்ஸ் நோய்வாய்ப்பட்டு காலமானார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com