தலையணையில் தொடங்கும் பயணம் எங்கு சென்று முடியும்?

Cool Lip
Cool Lip

- தா.சரவணா

இப்போது ஒரு குடும்பத்தில் இருவரும் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், தங்களின் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்பதே. இக்காரணத்துக்காக பெற்றோர்கள், பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கும் நிலையில், தங்களின் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மறந்து விடுகின்றனர். குறிப்பாக அவர்கள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும். நம் கடமை முடிந்து விட்டதாக நினைக்கின்றனர். இதனால் பாதிப்பு அவர்களுக்குத்தான் எனத் தெரிவதில்லை.

இப்போது பள்ளி மாணவர்கள் தொடங்கி, கல்லூரி மாணவர்கள் வரையில், பலரும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக அதிகமான பள்ளி மாணவர்கள் புகையிலை தொடர்பான போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். வீடுகளில் பெற்றவர்கள் மிகுந்த கட்டுப்பாடாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குத் தெரியாமல் போதையைச் சுவைப்பது எப்படி என்பது மாணவர்களுக்குத் தெரிந்து இருக்கிறது.

இப்போது பள்ளி மாணவர்களிடையே தலையணை எனப்படும் ஒரு போதை வஸ்துதான் பிரபலம். இது மினியேச்சர் தலையணை வடிவில் இருக்கிறது. இதன் உள்ளே புகையிலை வைத்து, அத்துடன் மென்த்தால் பிளேவரில் விற்பனைக்கு வைத்துள்ளனர். இதை உதட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டால், அந்த புகையிலை சாறு வரும் வரை மிதமான போதையில் மிதக்கின்றனர். இது எந்தவித வாசமும் வராது என்பதால் வகுப்பறைகளில்கூட மாணவர்கள் இதை உதட்டின் அடியில் வைத்தபடி காணப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பாகுபாட்டுக்கு ஆளாகும் பெண்கள்: நவீன உலகில் சமத்துவம் நிலைக்குமா?
Cool Lip

இதை வாயில் வைத்துக்கொண்டால், பாடத்தை நன்கு கவனிக்க முடியும். நன்றாக படிக்கலாம் என்பதாக நல்ல மாணவர்களுக்குப் போதை போதிக்கப்படுகிறது. அதன்பின்னர் சற்று வளர்ந்ததும், வேறு, வேறு போதைப் பொருட்களைத் தேடி செல்லத் தொடங்குகின்றனர்.

இது போன்ற மாணவர்கள் மிகவும் அமைதியாக, தனிமை விரும்பிகளாக இருப்பர். பெற்றோர்களும், தங்கள் பிள்ளை மிகவும் அமைதியாவன். எப்போதும் வீட்டில் அவன் அறையில் படித்துக்கொண்டுதான் இருப்பான் என்பதாக உறவினர்களிடம் பெருமை பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், அந்த மாணவனோ, பூட்டிய அறைக்குள் கட்டுண்டு இருப்பான். அதனால், பெற்றோர்கள், தங்கள் மாணவர்களை குறிப்பாக 6ம் வகுப்பில் இருந்தே அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிக்க வேண்டும். அவனது நண்பர்கள் யார். யார்? அவர்களின் பழக்க வழக்கங்கள்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? அவர்களின் குடும்பச் சூழல் போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் நம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிட்டும். இல்லையென்றால் தலையணையில் தொடங்கும் அவர்களது போதைப் பயணம், சிறை சென்றுதான் முடிவடையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com