கூலிப்படைகளின் அராஜகம் அதிகமாவது ஏன்?

Mercenary
Mercenary
Published on

தமிழகத்தில் அரசியல், தொழில், சாதி, மதம் ரீதியாக கொலை சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் தொடர்புடையவர்கள் தாங்கள் நேரடியாக பிரச்சனையில் ஈடுபடாமல், கொலை சம்பவத்தில் கூலிப்படையினரை அமர்த்தி கொலை சம்பவத்தை அரங்கேற்றி வருகின்றனர். இதில் சம்பவத்தில் ஈடுபடும் கூலிப்படையினர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டு, பின்னர் ஏதாவது போலீஸ் ஸ்டேஷன் அல்லது கோர்ட்டில் சரணடைவது வாடிக்கையாகி வருகிறது.

அதன் பின்னர் அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படுகிறது. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் ஜாமீனில்  வெளியே வந்து மீண்டும் கூலிப்படையாக  மாறி கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கம் போல போலீஸ் ஸ்டேஷன் சரண்டர், கோர்ட்டில் வழக்கு, ஜாமின் என்பதாக கூலிப்படையினர் சந்தோஷமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது கூலிப்படையால் கொல்லப்படும் நபர்களின் குடும்பத்தார் மட்டுமே. இது போன்ற சம்பவங்கள் 100 பேர்களுக்கு முன்னால் தைரியமாக செய்யப்படுகின்றன. அதை செய்து முடித்த பின்னர் கூலிப்படையினர் அங்கிருந்து ஏன் தப்பி ஓடுகின்றனர்? என்பது தான் தெரியவில்லை. இதற்குக் காரணம் சம்பவம் நடந்து முடிந்த பின்னர் அங்கேயே கூலிப்படையினர் நின்றிருந்தால், அங்கு வரும் இறந்து போன நபரின் ஆதரவாளர்கள் கைகளில் கூலிப்படையினர் சிக்கினால் அவ்வளவுதான். இதற்கு பயந்து கொண்டு தான் கூலிப்படையினர் அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் - வரமாக மாற்றுவோம்!
Mercenary

இப்படியாக கூலிப்படையால் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் கூலிப்படையின் நடவடிக்கையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. ஒரு கொலை செய்வதற்கு அந்த நபருக்கு ஏற்றபடி லட்சம் முதல் கோடி வரை சம்பளம் பேசப்படுகிறது. இதில் கூலிப்படை தலைவனுக்கு பெரும் பங்கு போய் சேர்கிறது. அவன் மூலமாக அனுப்பும் ஆட்களுக்கு ஆயிரக்கணக்கில் மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. இவர்களுக்கு முதலில் செய்யும் கொலை சம்பவம் மட்டுமே அதிர்ச்சிகரமாக இருக்கும். அதன் பின்னர் பழகிப் போய் விடுவதால் இவர்கள் தைரியமாக கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் செய்வதற்கு முன்னதாக ஒரு சில கூலிப்படையினர் கஞ்சா, மது என அருந்துவதும் உண்டு. ஏனெனில் வெட்டும்போது பச்சாதாபம் பார்த்து விடக் கூடாது என்பதற்காக. இவர்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் சரண்டர் ஆகும் நபர்களை போலீசார் வேறு விதமாக ட்ரீட் செய்ய வேண்டும். அப்போதுதான் எவ்வளவு பணம் கொடுத்தாலும் உயிருக்கு பயந்து மீண்டும் கூலிப்படை பணிக்கு வர பலரும் அஞ்சுவர். இதனால் பழிவாங்க வேண்டிய நபர்களும் ஆட்கள் கிடைக்காமல் வேறு வழி இன்றி அமைதியாகச் செல்ல வாய்ப்புள்ளது.

இனிமேல் கூலிப்படை சம்பவம் என்று வந்தாலே அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு தோன்றும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com