
பெரும்பாலான இடங்களில் சிவப்பு நிறம் எச்சரிக்கை ஒளியாக பயன்படுத்தப்படுகிறது. எத்தனையோ நிறங்கள் இருந்தாலும் ஏன் சிவப்பு நிறம் மட்டும் எச்சரிக்கை ஒளியாக இருக்கிறது என்று தெரியுமா?
நம் அன்றாட வாழ்க்கையில் சிவப்பு நிறத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. சாலையில் இருக்கும் போக்குவரத்து சிக்னலில் இருந்து, ஆம்புலன்ஸ், ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த பயன்படுத்தப்படும் கொடி மற்றும் நாம் பயன்படுத்தும் அனைத்து வாகனம் என்று எல்லாவற்றிலும் சிவப்பு நிறம் இருக்கிறது. நம் நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே எச்சரிக்கை ஒளியாக பார்க்கப்படுகின்ற நிறம் சிவப்பு நிறம்.
சிவப்பு நிறம் நம் உடலில் இருக்கும் ரத்தத்துடன் தொடர்பானதாகவும் உள்ளுணர்வை அதிகரிக்க செய்வதாகவும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சிவப்பு நிறம் அபாயத்தை பெரிதும் பிரதிபலிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
சிவப்பு நிறத்தின் கோடு எந்த இடத்தையும் பிரகாசமாக்கும் ஒரு சக்திவாய்ந்த நிறம்.
இந்த சிவப்பு நிறமானது மழை, பனி, வெயில், இருள் ஆகியவைகளில் சிக்காமல் நீண்ட தூரத்திற்கு ஊடுருவி பாயும் தன்மையை கொண்டுள்ளது.
இந்த சிவப்பு நிறத்தில் அதிக அடர்த்தியான கதிர்கள் வெளிப்படுவதால் தான் இது எச்சரிக்கை ஒளியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் சிவப்பு நிறம் உணர்ச்சிகளை தூண்ட கூடிய பண்புகளை கொண்டுள்ளது.
சிவப்பு நிறத்தின் அலைநீளம் மிக அதிகம், அதிக அலைநீளம் இருப்பதால் இதன் frequeny மிக குறைவு. அதனால் இது அதிக ஒளி சிதறலுக்கு உட்படுவதில்லை. இதன் காரணமாக சிவப்பு நிறம் அதிக ஒளி சிதறலின்றி மிக தூரம் வரை பயணம் செய்கிறது.
மனிதர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியக் ஒளி எது என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மனிதர்களின் கவனத்தை ஈர்க்கும் நிறம் எது என்று ஆராய்ச்சி செய்தபோது, சிவப்பு நிற ஒளியின் அலை நீளம் 620 முதல் 750 வரை இருந்தது. இதனால் மனிதனின் கவனத்தை ஈர்க்கும் நிறம் சிவப்பு என்று சொல்லப்படுகிறது.
கைப்பேசி டவர்களில் கூட சிவப்பு நிற விளக்குகள் தான் இருக்கின்றன.
மிக தாழப் பறக்கும் ஹெலிகாப்டர் மற்றும் சிறு விமானங்கள் இரவு நேரங்களில் தொலைவில் இருந்து வரும்போது டவர்களில் சிவப்பு விளக்கு எரிவதால் சில கிலோ மீட்டர் தொலைவில் டவர் இருப்பதை உணர்ந்து விபத்து ஏற்படாமல் தவிர்க்க இது பயன்படுகிறது.
ஆம்புலன்ஸில் கூட சிவப்பு விளக்கு தான் பொருத்தப்பட்டிருக்கும். வெகு தொலைவில் வரும் போதே அதன் நிறத்தை பார்த்தும் சத்தத்தை கேட்டும் பொது மக்கள் அது செல்வதற்காக வழி விடுகிறார்கள்.
மருத்துவ மனைகளில் operation theatre-ன் நுழைவ வாயிலில் சிவப்பு விளக்கு தான் எரியும். Operation theatre தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு செயல்முறைக்கு உட்பட்டுள்ளது என்பதை ஊழியர்கள் மற்றும் பிறருக்கு எச்சரிக்கும் ஒரு காட்சி சமிக்ஞையாக சிவப்பு விளக்கு செயல்படுகிறது. அங்கீகரிக்கப்படாத நபர்கள் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைவதைத் தடுக்க சிவப்பு விளக்கு ஒரு எச்சரிக்கையாக செயல்படுகிறது.
அதிகமான அலை நீளத்தை கொண்டிருக்கும் காரணத்தால் கடற்கரை பகுதிகளில் அதிக மழை பெய்தால் சிவப்பு நேர குறியீட்டு board வைத்து எச்சரிக்கிறார்கள்.
சாலையில் no entry, way to, முதலியவைகளும் சிவப்பு நிறத்தில் தான் இருக்கின்றன. அதற்கு காரணம் சிவப்பு நிறத்தின் ஈர்ப்பு தன்மை.
மேற்கூறிய காரணங்களால் தான் சிவப்பு நிறத்தை எல்லா இடங்களிலும் எச்சரிக்கையை குறிக்கும் நிறமாக வைத்திருக்கிறார்கள்.