வெனிசுலாவை அமெரிக்கா குறி வைப்பது ஏன்? திடுக்கிடும் தகவல்...

வெனிசுலா அதிபர் நிக்கோலஸை அமெரிக்கா கைது செய்து அந்த நாட்டில் உள்ள எண்ணெய் வளத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதன் பின்னணி என்ன? விளைவு என்ன?
 US targeting Venezuela
Crude oil Venezuela and Donald Trump
Published on
Kalki Strip
Kalki Strip

வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தை கொண்ட நாடு. பெரும்பாலும் ஓடினோகா பெல்ட் பகுதியில் இந்த எண்ணெய் வளம் காணப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்கா தடைகளால் இதன் உற்பத்தியில் மற்றும் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய பகுதிகளில் எண்ணெய் அதிக அளவில் கையிருப்பில் உள்ளது. வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில் மிகக் கடினமான கச்சா எண்ணெய்கள் அதிக அளவில் உள்ளன. வெனிசுலா பொருளாதாரம் பெட்ரோலியத்தை மட்டுமே நம்பி உள்ளது.

1990களில் ஒரு நாளைக்கு 35 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது உற்பத்தியில் குறைவாக நடக்கிறது. அரசியல் நெருக்கடி, பொருளாதார தடை இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெனிசுலா. தற்போது இந்த எண்ணெய் வளம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெனிசுலாவில் 30 ஆயிரம் கோடி பீப்பாய் எண்ணெய் வளம் உள்ளது. இது இன்னும் துல்லியமாக தெரியவில்லை.

மொத்த கச்சா எண்ணெயில் உலக அளவில் 20% இந்த நாட்டில் உள்ளது. இது ஒரு சிறிய பகுதி தான். முன்பு எண்ணெய் உற்பத்தியில் 10 நாடுகள் முதலிடம் வகித்து வந்தன. அமெரிக்கா வெனிசுலா நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் முதலீடு செய்து வெனிசுலாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
இந்த 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்… அமெரிக்கா எச்சரிக்கை!
 US targeting Venezuela

கச்சா எண்ணெய் உற்பத்தியில் வெனிசுலா 33 பில்லியன் பேரல்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க நடவடிக்கைகளால் 2025-ல் வட அமெரிக்க பிராந்தியமாக மாறி உள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா உலக சந்தையில் முன்னிலை வகிக்கிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் நான்கு நாடுகள் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

அதில் முதலிடத்தை வெனிசுலா பெறுகிறது.

இரண்டாவது சவுதி அரேபியா 267 பில்லியன் பேரல் உள்ளது.

மூன்றாவது இடத்தில் ஈரான் 209 பில்லியன் பேரல் உள்ளது.

கனடா நான்காவது இடத்திலும், ஈராக் ஐந்தாவது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் ஆறாவது இடத்திலும் உள்ளன.

அமெரிக்கா இதனை கைப்பற்றி தினசரி 31 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளால் உலக சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸை அமெரிக்கா கைது செய்து அந்த நாட்டில் உள்ள எண்ணெய் வளத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. எஞ்சியுள்ள எண்ணெய் வளத்தை வெனிசுலா விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது.

இந்த எண்ணெய் உற்பத்தியில் வெனிசுலா 50 மில்லியன் பீப்பாய்களை அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. வெனிசுலா எண்ணெய் வளம் அந்த நாட்டிற்கு முதுகெலும்பாக உள்ளது.

இப்போதைய நிலவரப்படி 3030 கோடி பேரல்கள் அதனிடம் உள்ளது. இதன் இன்றைய மதிப்பு இந்திய ரூபாயில் 1400 லட்சம் கோடி மதிப்பு பெறும்.

வெனிசுலா எண்ணெய் வளம் தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை. ரகசியம் காக்கிறது. வெனிசுலாவுக்கு தடை ஏற்படுத்தும் முன்பே அமெரிக்கா அதன் முக்கிய இறக்குமதி நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி தொழில்நுட்பத்தை தான் இந்தியாவும் பயன்படுத்துகிறது.

2025-க்கு பிறகு வெனிசுலாவில் இருந்து வந்த எண்ணெயின் அளவு O.3 சதவிகிதம் மட்டுமே. இந்தியா ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் வெனிசுலாவில் கூட்டாக இயங்கி வந்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு நேரடி நன்மை கிடைப்பது கடினம். வெனிசுலா நாட்டில் அமெரிக்கா சுத்திகரிப்பு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவை தவிர வெனிசுலாவில் இயற்கை எரிவாயு, தங்கம் மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. இவற்றின் மீதும் அமெரிக்கா ஒரு கண் வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வெனிசுலா அதிபரைக் கைது செய்ய 50 மில்லியன் டாலர் பரிசு:அமெரிக்கா ஏன் இவரைப் பிடிக்கத் துடிக்கிறது?
 US targeting Venezuela

இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதத்தை இறக்குமதி மூலம் செய்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகளால் இனி உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகள் எண்ணெய் தேவைக்கு அமெரிக்காவிடம் கையேந்தும் சூழ்நிலை உருவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com