இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எந்தெந்த நாடுகள், ஏன் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது என்று பார்ப்போம்.
உலக நாடுகளில் போர் போன்ற மனிதர்கள் அச்சுறுத்தலும், நிலநடுக்கம் போன்ற இயற்கை அச்சுறுத்தல்களும் அதிகமாகி உள்ளன. இன்னும் சில நாடுகளில் பெண்கள் தனியே செல்வதற்கும் இரவில் செல்வதற்கும் பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் கூறப்படுகிறது. அதேபோல், சில நாடுகளின் அரசின் சர்வாதிகாரம் அந்த நாட்டு மக்களையே பெரிதளவு பாதிக்கிறது.
இதனால் பிற நாட்டு மக்கள் அங்கு செல்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான சூழலில் அமெரிக்கா ஒரு 20 நாடுகளை பட்டியலிட்டு அங்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறது.
அந்தவகையில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயம் கொண்ட நாடுகளின் பட்டியலில், ரஷ்யா , வட கொரியா, ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட 20 நாடுகள் உள்ளன.
உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் சிரியா உள்நாட்டு போர் காரணமாக அங்கு செல்ல வேண்டாம் என்றும், சோமாலியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்றும், பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் என்றும், வட கொரியாவில் வெளி நாட்டவர்களுக்கு கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன என்றும் அமெரிக்கா விளக்கம் தந்துள்ளது.
இதனால், இந்த நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
சில நாடுகள் சுற்றுலா துறையின் வருவாயை நம்பியே இருக்கிறது. ஆனால், போர் பதற்றம், அரசியல் நெருக்கடிகள் காரணமாக வெளிநாடு சுற்றுலா வாசிகள் அந்த இடங்களுக்கு செல்லாமல் இருப்பதே நல்லது. இருந்தாலும் அந்த நாடுகளின் வருமானம் கனிசமாக குறைந்து வருகிறது. இப்படியான நிலையில், ஒரு சில நாடுகள், போர், சுற்றுலா பயணிகளை எந்தவிதத்திலும் பாதிக்காது, நம்பி எங்கள் நாட்டிற்கு வரலாம் என்றும் கூறுகிறது. சமீபத்தில் ஈரான் இப்படி கூறியது குறிப்பிடத்தக்கது.