
அமெரிக்க டாலருக்கு நிகராக நம் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருந்தாலும், இங்கு ஏற்பட்டுள்ள பலதரப்பட்ட முன்னேற்றங்கள் அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு ஆச்சரியத்தையும், லைட்டா பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி எந்தெந்த வழிகளில் இந்தியா ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது? வாருங்கள் தெரிந்துகொள்வோம்:
பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்:
இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வலிமை உலகின் பலரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (Barack Obama), தன்னுடைய இந்தியப் பயணத்தின்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பாராட்டினார். புதுமை (Innovation) மற்றும் தொழில்நுட்பத்தில் (Technology) உலக அளவில் பேசும் பொருளாக இருக்கும் என்று இந்தியாவின் திறனை அவர் அப்போதே கணித்தார்.
விண்வெளி ஆய்வு:
விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனைகள் சர்வதேச அளவில் பல பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) செவ்வாய் கிரக சுற்றுப் பாதை மிஷன் (Mangalyaan) மற்றும் சந்திரனுக்கான (Chandrayaan 1 & 3) பணிகள் உட்பட ஏராளமான செயற்கைக்கோள்கள் மற்றும் அதற்கான விண்வெளி பயணங்களை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் டெஸ்லாவின் (Tesla) தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் (Elon Musk), விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனைகளைப் பாராட்டியதோடு, இஸ்ரோவுடன் சேர்ந்து வருங்கால விண்வெளி திட்டங்களை செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கலாச்சார செல்வாக்கு:
இசை, நடனம், சினிமா மற்றும் உணவு வகைகள் உட்பட இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் உலகளவில் பலரை பார்வையாளர்களாக மாற்றி அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தியத் திரைப்படத் துறையான Bollywood, Tollywood, Kollywood என தனித்தனியே உலக அளவில் பெரும் ரசிகர்களை இப்போது கொண்டுள்ளது. வில் ஸ்மித் (Will Smith) மற்றும் ஹக் ஜேக்மேன் (Hugh Jackman) போன்ற சர்வதேச பிரபலங்கள் இந்திய சினிமாவின் அதன் துடிப்பான கதைக்களத்தின் மீது தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதுபோல, இந்திய உணவு வகைகள் அதன் பன்முகத்தன்மை மற்றும் சுவைகளுக்காக பலராலும் உலகெங்கும் அறியப்படுகிறது. கோர்டன் ராம்சே (Gordon Ramsay) போன்ற சமையல்காரர்கள் இந்தியாவின் உணவு வகைகளின் தன்மைக்கும் அதன் செழுமை (richness) மற்றும் சுவைக்கும் தன் பாராட்டை தெரிவித்துள்ளார்.
ஹெல்த்கேர் (Healthcare):
ஹெல்த்கேர் மற்றும் மருந்துத் துறையில் இந்தியாவின் முன்னேற்றங்கள் உலகெங்கும் பேசும் பொருளாக இருக்கிறது. மலிவு விலையில் ஜெனரிக் மருந்துகள் (Generic Medicines) மற்றும் தடுப்பூசிகள் (Vaccines) தயாரிப்பதில் இந்தியா உலகெங்கும் சிறந்து விளங்குகிறது.
மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் (Bill Gates), சுகாதாரப் பாதுகாப்பில் இந்தியாவின் முயற்சிகளையும், உலகிற்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதில் அதன் பங்கையும் பாராட்டியுள்ளார். இதோடு போலியோ (Polio) போன்ற நோய்களை ஒழித்ததில் இந்தியாவின் முயற்சியையும் அவர் பாராட்டியுள்ளார்.
இன்று உலகின் முக்கியமான நாடாக பார்க்கப்படும் இந்தியா, பல நாடுகள் பொறாமை படக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளது. அதற்கு காரணமாக பல பேர் இருந்தாலும் அதில் முக்கியமாக பார்க்கப்படுவது நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளத்தின் பலமே. காரணம், பல நாடுகளில் பல்வேறு செல்வச்செழிப்புகள் நிறைந்த பொருளாதாரம் இருந்தாலும், அங்குள்ள இளைஞர்களின் பலம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, சற்று குறைவே.