World richest cat
World richest cat

தானா சம்பாதிச்ச நாலா பூனை - உலகின் 'பணக்கார பூனை'!

Published on

பணக்கார பூனை என்றதும் எதோ பெரிய பணக்காரர்களால் வளர்க்கப்படும் பூனையாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த பணக்கார பூனை தன் சொந்த சம்பாத்தியத்தில் இந்தப்  பெயரை எட்டியுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எளிதாக வீட்டில் இருந்தபடியே பிரபலமாக முடியும். வேடிக்கையான அல்லது மறக்கமுடியாத ஒன்றைச் செய்வதன் மூலம் செல்லப்பிராணிகள் சமூக ஊடங்களில் செல்வாக்கு செலுத்துபவராக மாறலாம். இதற்கு செல்லப் பிராணிகளும் விதிவிலக்கல்ல. பல செல்லப்பிராணிகள் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பிரபலங்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. இந்த செல்வாக்கின் மூலம் அவை பணம் சம்பாதிக்கவும் செய்கின்றன.

அதனடிப்படையில், சமூக ஊடங்களைப் பயன்படுத்தி உலகின் பணக்கார மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க  பூனைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பூனைதான் நாலா. நாலா என்பது இதன் செல்லப்பெயராகும்.

இதையும் படியுங்கள்:
30 ml 10 லட்சம் - 'பல கோடி அப்பு!' என்னது? பெர்ஃப்யூம் தான்..!
World richest cat

2011-ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இருந்து பூக்கி என்பவரால் பிறந்து ஆறு மாதங்களே ஆன நிலையில் நாலா தத்தெடுக்கப்பட்டது. வீட்டைச் சுற்றியுள்ள தனது செயல்பாடுகளை புடைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் தன் உரிமையாளரின் உதவியுடன் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. இந்தப் பூனையின் வேடிக்கையான செயல்கள் இன்ஸ்டாகிராமில் அதிக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது.

இதுவரை, நாலா 4.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்-க்கு தோராயமாக 15,000 டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 13 லட்சம் வரை) சம்பாதித்து வருகிறது. இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிப்பதைத் தவிர, 'லவ் நாலா' என்ற பிரீமியம் பூனை உணவு பிராண்டையும் கொண்டுள்ளது. இந்தப் பூனையின் மொத்த சொத்து மதிப்பு 836 கோடியாக உள்ளது.

2023 ஆம் ஆண்டில் ஆல் அபவுட் கேட்ஸ் (All about Cats) பின்தொடர்பவர்கள் (followers), விருப்பங்கள் (likes), பயனர்களின் ஈடுபாட்டு விகிதங்கள் (Engagement Rates) போன்ற இன்ஸ்டாகிராம் தரவைப் பயன்படுத்தி,  இன்ஸ்டாகிராமில் உள்ள  பூனைகள் ஒவ்வொன்றும் ஒரு இன்ஸ்டாகிராம்  இடுகைக்கு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றும், அவற்றில் அதிக வருமானம் ஈட்டுபவைகளை கண்டறிவதற்கும் ஆய்வு நடத்தியது. இதன் அறிக்கையின்படி,100 மில்லியன் டாலர் மதிப்புள்ள நாலா பூனை உலகின் பணக்கார மற்றும் மிகவும் செல்வாக்கு நிறைந்த பூனையாக அறிவிக்கப்பட்டது. அதோடு, இன்ஸ்டாகிராமில் அதிகப் பின்தொடர்பவர்களைக் கொண்ட பூனை என  நாலா கின்னஸ் சாதனையும் படைத்துள்ளதுள்ளதாம்!

logo
Kalki Online
kalkionline.com