சாதுவா தெரியும், சீண்டினால் போச்சு ... உலகின் மிகவும் ஆபத்தான 8 நாய் இனங்கள்!

Dogs
Dogs
1.

செல்லப்பிராணிகள் என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது நாய்தான். மற்ற விலங்குகளை காட்டிலும் நாய்கள் மனிதர்களிடம் மிகுந்த நட்பு பாராட்டி அவர்களின் அன்பை பெற்றுள்ளன. உலகம் முழுக்க மனிதர்களின் விருப்பமான செல்லப் பிராணிகளாக நாய்கள் திகழ்கின்றன. நாய்களில் பல்வேறு இனங்கள் உண்டு.

உங்கள் செல்லப்பிராணியின் குணாதிசயங்கள், ஆளுமைப் பண்புகள் மற்றும் பின்னணி வரலாறு ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது இன்னும் முக்கியமானது. எந்த நாய் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், இனங்கள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கவும், அல்லது ஒரு நாய் பயிற்சியாளரை அணுகவும்.

சில நாய்கள் அவற்றின் வலிமை மற்றும் ஆக்கிரமிப்பு இயல்புக்கு பெயர் பெற்றவை. அவை முறையாகப் பயிற்சி அளிக்காவிட்டால் அவை ஆபத்தானவை. இத்தகைய நாய்களை அனுபவம் வாய்ந்த நாய் வளர்ப்பாளர்களால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும். உலகளவில் மிகவும் ஆபத்தான நாய் இனங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2. 1. ராட்வீலர் (Rottweiler):

Rottweiler
Rottweiler

முதலில் கால்நடைகளை மேய்ப்பதற்காக வளர்க்கப்பட்ட ராட்வீலர், ஆக்ரோஷமான காவல் நாயாகும். இவை பெரும்பாலும் உரிமையாளர்களுக்கு ஏற்ற, புத்திசாலித்தனமான மற்றும் விளையாட்டுத்தனமான இனமாகும். இந்த நாயின் உடல் தடிமனாகவும், தாடைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். இந்த இனத்தின் நாய்களுக்கு மற்ற நாய்களை பிடிக்கவே பிடிக்காது. இவை சிறிய ஆபத்தை உணர்ந்தாலும், தாக்குவதற்கு ஆரம்பித்துவிடும். கோபம் வந்துவிட்டால், யாரையும் தாக்குவதற்கு துளியும் தயங்காது. சரியான வளர்ப்புடன் இருப்பின், அவை ஆபத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், திறமையற்ற கைகளில், ராட்வீலர் ஆக்கிரமிப்பு மற்றும் ஆபத்தானதாக மாறலாம்.

3. 2. ப்ரெசா கனாரியோ (Presa Canario):

Presa Canario
Presa Canario

ப்ரெசா கனாரியோ என்பது மாஸ்டிஃப் அல்லது கேட்ச் வகை நாய்களின் ஸ்பானிஷ் இனமாகும். உலகில் உள்ள நாய்களில் மிகவும் ஆபத்தான இனங்களில் ப்ரெசா கனாரியோவும் ஒன்று. இது அதன் உரிமையாளர்களுக்கு ஒரு தைரியமான பாதுகாப்பு அளிக்கும் உண்மையுள்ள நாய். இது மிகவும் வலிமையான, சுறுசுறுப்பான மற்றும் புத்திசாலித்தனமான பிராணி .ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வகை நாய்களின் எடை மனிதர்களின் எடைக்கு சமமான எடையை கொண்டிருக்கும். இவை மிகவும் ஆபத்தானவை. இவை யாரையாவது தாக்கினால், தப்பிப்பது மிகவும் கடினம். கதையை முடித்துவிட்டு தான் விடும்.

4. 3. பிட்புல் (Pit bull):

Pit bull
Pit bull

உலகிலேயே ஆபத்தான நாய்களில் இரண்டாமிடம் பிடிப்பது பிட்புல் ரக நாய்களே ஆகும். பிட்புல் இன நாய்கள் மிகவும் ஆபத்தானவை. இந்த இன நாய்களை நம்புவது சரியல்ல. எப்போது தாக்கும் என்றெல்லாம் கூறவே முடியாது. இந்த இன நாய், காளை மற்றும் கரடி வேட்டைக்காக வளர்க்கப்பட்டது.

இவை பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கத்தனமாக இருந்தாலும், எஜமானரின் குடும்பத்தையும், வீட்டையும் துணிச்சலாக பாதுகாக்கும் காவலாளியாகவும் இருக்கும். இருப்பினும் சண்டை போடுவதில் வல்லவர்கள். அதுமட்டுமல்ல எதிரிகளை வீழ்த்த இவற்றின் ஒரு கடியே போதுமானது. ஏனெனில் இவற்றின் தாடைகள் அவ்வளவு வலிமை மிக்கதாகும்.

5. 4. அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர் (AmStaffs):

AmStaffs
AmStaffs

இந்த இனம் பெரும்பாலும் ஊடகங்களில் மிகவும் ஆபத்தான நாய் மற்றும் இரத்தவெறி கொண்ட கொலையாளி என்று விவரிக்கப்படுகிறது. ஆம்ஸ்டாஃப் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று நம்பப்படுகிறது. முறையான கையாளுதல் மற்றும் பயிற்சி தேவை. அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர் மிகவும் நேசமானது, அதன் உரிமையாளருக்கு விசுவாசமானது மற்றும் உரிமையாளரை பாதுகாக்க எதையும் செய்யும். இருப்பினும், ஒரு பொறுப்பற்ற உரிமையாளரின் கைகளில், இந்த நாய் ஒரு கொலை இயந்திரமாக மாறும்.

6. 5. ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd):

German Shepherd
German Shepherd

பெரும்பாலான மக்கள் ஜெர்மன் ஷெப்பர்டை விரும்புகிறார்கள். இந்த இனத்தின் நாய்கள் தங்கள் வலிமை மற்றும் அச்சமின்மைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. அவை சிறிய ஆபத்தைக் உணர்ந்தாலும் தாக்க ஆரம்பித்துவிடும். மிகவும் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் இருக்கும்.

இந்த நாய் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருந்தாலும், இது மிகவும் க்யூட்டாக, நாயின் சொந்தக்காரர் நினைத்தவாறு நடந்து கொள்ளும். இந்த நாயின் வயிறு மிகவும் சென்சிடிவ்வானது. ஆகவே இதற்கு கொடுக்கும் உணவில் மிகவும் கவனம் வேண்டும்.

7. 6. சவ்-சவ் நாய்கள் (chow chow):

chow chow.
chow chow.

சீனாவில் காணப்படும் சவ்-சவ் நாய்கள் தோற்றத்தில் மிகவும் அமைதியானவை. சவ்-சவ் நாய்கள், பண்டைய சீனாவில் வேட்டையாடவும் மற்றும் காவலுக்காகவும் வளர்க்கப்பட்டவை. இந்த நாய்களின் தோற்றம், கரடி போன்றது. இதன் விலை ஒன்றரை லட்ச ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை இருக்கும். தோற்றத்தில் மிகவும் அழகாகவும் அமைதியானவை போலும் இருக்கும். ஆனால் இந்த இனத்தின் நாய்கள் மிகவும் ஆபத்தானவை.

அவற்றின் சம்மதமின்றி யாரும் அருகில் செல்ல முடியாது. இதுவும் உலகின் மிகவும் ஆபத்தான நாய்களில் ஒன்றாகும். மீறினால் உங்கள் நிலைமை கஷ்டம் தான். இவற்றிடம் விளையாடி பார்க்க மட்டும் நினைக்காதீர்கள். விளைவு மோசமாக இருக்கும். சுதந்திரமானவை ஆனால் மிகவும் விசுவாசமானவை.

8. 7. காகசியன் ஷெப்பர்ட் நாய் (Caucasian Shepherd Dog):

Caucasian Shepherd Dog
Caucasian Shepherd Dog

காகசியன் ஷெப்பர்ட் நாய் சோவியத் ஒன்றியத்தில் வளர்க்கப்பட்டது. இது மிகவும் ஆக்ரோஷமான நாய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 'காகசியன்' மிகவும் வலிமையானது. இதனால் ஒரு ஓநாயை தனியாக கையாள முடியும். பெரிய தோற்றத்தில் 75 செமீ உயரத்துடன் காணப்படும் இந்த நாய், உலகின் மிகவும் ஆபத்தான நாய் இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

9. 8. கங்கல் (அனடோலியன் ஷெப்பர்ட்) (kangal anatolian shepherd):

kangal anatolian shepherd
kangal anatolian shepherd

அனடோலியன் ஷெப்பர்ட் நாய் துருக்கியில் இருந்து வந்த ஒரு பெரிய மேய்க்கும் நாய். கங்கல் சிறந்த காவல் நாய். இது மிகவும் அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகள் மீது விசுவாசத்தை காட்டும். ஆனால் இந்த நாய் அணைப்புக்கு ஏற்றது அல்ல.

இதையும் படியுங்கள்:
இந்த வார டிஆர்பியில் முதல் இடத்திற்கு முன்னேறிய சீரியல்!
Dogs

உலகிலேயே மிகவும் ஆபத்தான நாய்களில் ஒன்று கங்கல். குறிப்பாக மற்ற நாய்கள் ஒப்பிடுகையில், அனடோலியன் மேய்ப்பன் ஆக்கிரமிப்பு காட்டுகிறது மற்றும் எப்போதும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது.

துருக்கிய கங்கல் ஒரு குடியிருப்பில் வளர்க்கக்கூடிய குடும்ப நாய் அல்ல. இந்த இனத்திற்கு ஒரு விசாலமான இடம் தேவை. இந்த நாயின் பயிற்சிக்கு போதுமான முயற்சியையும் நேரத்தையும் செலவிட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com