அரசியல் அலசல்: மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி!

ராஜபாட்டை ரகசியம்!
Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam ஓவியம் பிள்ளை
Published on
Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam

''சபாஷ்… ராஜதானி ராஜப்பா! நீ மூணு வாரங்களுக்கு முன்பு சொன்ன ரகசியம் உண்மையாவே போச்சே'' வாய் நிறைய பாராட்டுகளோடு வரவேற்றேன்.

''கார்கே விஷயத்தைத்தானே சொல்றீங்க! இப்ப எல்லா I.N.D.I.A எதிர்க்கட்சி கூட்டணியோட பல தலைவர்களும் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவிச்சு இருக்காங்க. சோனியாவே இதை எதிர்பார்க்கல. மம்தா பானர்ஜி கூட கார்கேதான் பிரதமர் வேட்பாளரா இருக்கணும்னு அடிச்சுச் சொல்லிட்டாங்க.

இதனால பிற்படுத்தப்பட்டோர், தலித் வாக்குகளை எல்லாம் அள்ள முடியும்னு அவங்க சொல்றாங்க. ஆனா, நிதிஷ்குமார்தான் இன்னமும் தன்னோட முடிவை சொல்லாம இருக்கார். அதுமட்டுமில்ல, கட்சியிலேயேகூட கார்கேவுக்கு ஆதரவு பெருகிக்கிட்டு வருது. இதனால கர்நாடகா காங்கிரஸ் கூட கொஞ்சம் சுறுசுறுப்பு அடைஞ்சிருக்கு. மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடியாம்'' ரா.ரா. சொன்னார்.

‘'அதென்ன மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி?'’ வியப்புடன் கேட்டேன்.

“திமுக மேல சோனியா செம கடுப்புல இருக்காங்க என்பதற்கு ரெண்டு, மூணு சம்பவங்களை வைச்சுப் புரிஞ்சுக்கலாம். தில்லியில நடந்த I.N.D.I.A மீட்டிங்கில, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் எல்லோர்கிட்டேயும் தன்னோட இடத்துல இருந்து எழுந்து போய் பேசிக்கிட்டு இருந்த சோனியா, பக்கத்துலயே உட்கார்ந்திருந்த ஸ்டாலினையும், டி.ஆர்.பாலுவையும் கண்டுக்கவே இல்லையாம். இதை விட இன்னொரு பெரிய விஷயமும் நடந்திருக்கு.

Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam

கர்நாடகாவுல விதியை மீறி கல்குவாரி நடத்தறவங்களைப் பற்றி ஆய்வுகள் நடத்திய மாநில அரசின் லோக் ஆயுக்தா அதில், திமுகவின் முக்கிய புள்ளியும் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டுபிடிச்சிருக்காங்க. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு இந்தத் தகவல் போக, அவரு சோனியாகாந்திகிட்டே, ‘என்ன செய்யறது’ன்னு கேட்டிருக்கார். அதுமட்டுமில்லாம, ‘திமுக கூட்டணி கட்சியா இருக்கே. எப்படி நடவடிக்கை எடுப்பது?’ என்றும் கேட்டிருக்கார்.

''யாரா இருந்தாலும் நடவடிக்கை எடுங்க!'' என்று சோனியா பச்சைக் கொடி காட்ட, கர்நாடகா லோக் ஆயுக்தா உடனே, திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனும், திமுக மாநில விளையாட்டு அணிச் செயலாளர் பைந்தமிழ் பாரியின் வீட்டில் சோதனை போட்டு இருக்காங்க. கூட்டணி காங்கிரஸ் ஆட்சிதானே நடக்குதுன்னு அசால்டா இருந்த பைந்தமிழ் பாரிக்கு பெரும் அதிர்ச்சியாம்'' ரா.ரா. சொல்லி முடித்தார்.

''சரி, திமுக மத்தளத்துக்கு இன்னொரு பக்கம் என்ன அடி?''

“தில்லிக்கு போன முதல்வர், அங்கு சமாதான கொடியை தானே பறக்க விட்டாராம். காங்கிரஸும் பாராமுகமா இருக்கிறதால, மகனோட நண்பரான கிரிக்கெட் பிரமுகரின் மத்திய அமைச்சர் அப்பாவுக்கு தூது விட்டிருக்கார், ''நாம இணக்கமாக போய்டலாம்”னு.

''டூ லேட்! அதுக்கெல்லாம் ஒத்துக்க முடியாது” என்று அவர் உறுதியாகச் சொல்லிட்டாராம்!

''ஆக, முதல்வரோட டெல்லி பயணம் தோல்வின்னு சொல்லுங்க!'' சீவர சிந்தாமணியை பார்த்தபடி சொன்னேன்.

சீவர சிந்தாமணி தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தாள். “பொன்முடிக்கும் அவரோட மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை, தலா ஐம்பது லட்ச ரூபாய் அபராதம்னு சொன்ன உடனேயே, பொன்முடி மனைவி விசாலாட்சி அழ ஆரம்பிச்சுட்டாங்க. வீட்டுக்குப் போகும்போது வேற புலம்பிக்கிட்டே போனாங்களாம்.

''அந்தத் திரௌபதி அம்மன்கிட்ட வச்சுக்காதீங்கனு சொன்னேனே. நீங்கதான் கேட்கலை'' என்றாராம். விழுப்புரம், மேல்பதி கிராமத்துல இருக்கிற தர்மராஜா - திரௌபதி அம்மன் கோவில், சாதி சண்டையால, ஜூன் மாதம் ஏழாம் தேதி முதல் பூட்டிக் கிடக்கு. அந்த அம்மன் ரொம்பவும் உக்ரமானவள். அவளோட கோயிலை பூட்டி வச்சது தப்பு அப்படின்னு கிராமத்து பெரியவர்கள் சொல்லியும், பொன்முடி கேட்கலையாம். அவரோட சிறை தண்டனைக்கு அதுதான் காரணம்னு ஊர் மக்கள் சொல்றாங்களாம்.''

Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam ஓவியம் பிள்ளை

சிந்தாமணி தொடர்ந்தாள்.

''திமுக ஆட்சியில தவறுகள் நடந்தாலும், கலைஞர் கருணாநிதி அதை மிகவும் சாமர்த்தியமா பூசி மொழுகிடுவார். ஆனா, அவரோட மகனுக்கு ஒண்ணுமே தெரியலை. அதனால வரிசையா எல்லோரும் மாட்டாறோம்னு மூத்த தலைவருங்க சில பேரு சொல்றாங்க. துரைமுருகன் கூட அப்பல்லோவுல போய் படுத்துக்கிட்டார். அடுத்த குறி நாமளாத்தான் இருப்போமோ அப்படின்னு பயம்'' சீவர சிந்தாமணி சொன்னாள்.

இதையும் படியுங்கள்:
அரசியல் அலசல்:தயார் ஆகுது ஒரு சேலை படை!
Rajapattai Ragasiyam

இது பத்தாதுன்னு வெள்ள நிவாரணத்துல ஆளும் கட்சி மேல ரொம்பவே அதிருப்தியில இருக்காங்க, திருநெல்வேலிக்காரங்க. தூத்துக்குடியில கனிமொழிய எதிர்த்து மக்கள் கோபத்தோட கேள்வி கேட்டாங்க. திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையே பேரிடர் குழுதான் அவரோட வீட்டுலே இருந்து காப்பாத்தினாங்கன்னா, அரசு எந்த லட்சணத்துல வேலை பாக்குதுன்னு புரிஞ்சுக்குங்கன்னு மக்கள் பேசறாங்க.''

''தமிழ்நாட்டுல கூட கூட்டணி அளவுல பெரிய மாற்றங்கள் வரப்போகுதாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அடுத்த வாரம் எல்லோரும் தேர்தல் மூடுக்கு போயிடுவாங்க'' என்றபடி, சீவர சிந்தாமணி அங்கிருந்து எழுந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com