வித்தியாசமான 10 பருப்பு ரெசிபிகள்! -பிப்ரவரி 10 உலக பருப்பு தினம்!

பருப்பு வகைகள்...
பருப்பு வகைகள்...

நம் உடலை சீராக கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில்  பெரும் பங்கு வகிப்பது பருப்புகளே. வித்தியாசமான 10 பருப்பு ரெசிபிகளை செய்து "உலக பருப்பு தின"த்தை சந்தோஷமாக கொண்டாடலாம். பருப்புடன் ஆன உறவு இனிப்புடன் தொடரட்டும்... தொடங்கட்டும்.

1.உளுத்தம் பருப்பு பர்ஃபி

தேவையான பொருட்கள்: 

உளுத்தம் பருப்பு -முக்கால் கப் பாசிப்பருப்பு -கால் கப்

 பொடித்த வெல்லம் -ஒரு கப்

 நெய்- தேவையான அளவு

உளுத்தம் பருப்பு பர்ஃபி
உளுத்தம் பருப்பு பர்ஃபிwww.youtube.com

செய்முறை:

உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் நன்கு வாசம் வரும் வரை சிவக்க வறுத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் நைசாக அமைத்துக் கொள்ளவும். பொடித்த வெல்லத்தை மாவுடன் சேர்க்கவும்.(பொடித்த வெல்லத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி ,சூடான நெய்யையும் வெல்ல நீரையும் சிறிது சிறிதாக மாவில் ஊற்றி உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். அல்லது ஏதேனும் அச்சுகள் இருந்தால் மாவை அதில் அடைத்து ஒரு டிரேயில் தட்டி பர்ஃபிகளாக  எடுக்கவும் . சுவையில் அசத்தும் இந்த பர்பி.

2. பாசிப்பருப்பு கிரிஸ்பி முறுக்கு

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு -இரண்டு கப் (பச்சரிசியை நன்கு கழுவி ,நிழலில் உலர்த்தி, லேசான ஈரம் இருக்கும் போதே மெஷினில் கொடுத்து அரைத்து பிறகு சலித்து வாணலியில் லேசாக வறுத்து ஒரு தட்டில்  உலர்த்தி வைத்துக் கொள்ளவும்).

பாசிப்பருப்பு கிரிஸ்பி முறுக்கு
பாசிப்பருப்பு கிரிஸ்பி முறுக்குwww.youtube.com

பொட்டுக்கடலை பொடி- அரைக்கப் பாசிப்பருப்பு மாவு- (வறுத்து அரைத்தது) கால் கப்

சர்க்கரை தூள்_ ஒரு கப் 

வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் 

உப்பு- ஒரு சிட்டிகை 

எண்ணெய் -தேவையான அளவு

அரிசி பருப்பு, பொட்டுக்கடலை மாவுகளுடன் வெண்ணெய், சிட்டிகை உப்பு, சர்க்கரை சேர்த்து கெட்டியாக பிசைந்து  முறுக்கு அச்சுகளில் வைத்து எண்ணெயில் பிழிந்து வேக விடவும் .(தீ ஒரே சீராக எறிவது அவசியம் சர்க்கரை சேர்த்து இருப்பதால் முறுக்கு சில நேரங்களில் கருப்பாகிவிடும்)  (விருப்பப்பட்டால் கைமுறுக்காகக் கூட சுற்றலாம்)

பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர்.

3. துவரம் பருப்பு சாலட்

தேவையான பொருட்கள்:

 துவரம் பருப்பு- அரை கப் 

கேரட் ,வெள்ளரிக்காய் ,மாங்காய், தக்காளி, பெரிய வெங்காயம் ,-தலா ஒன்று 

பொடியாக நறுக்கிய மல்லித்தழை- சிறிதளவு 

எலுமிச்சம் பழச்சாறு- ஒரு டேபிள் ஸ்பூன்

 மிளகுத்தூள்- அரை டீஸ்பூன்

 உப்பு- தேவையான அளவு.

துவரம் பருப்பு ...
துவரம் பருப்பு ...

துவரம் பருப்புடன் சிறிதளவு உப்பு சேர்த்து குழைந்து விடாமல் (நெத்து பதத்தில்) வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

காய்கறிகளை மிகவும் பொடியாக நிற்கவும் அழகிய கிண்ணத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பரிமாறவும் .சுவையான சாலட் இது.

4. முந்திரிப் பருப்பு க்ரிஸ்பி பக்கோடா

முந்திரிப் பருப்பு- ஒரு கப் 

கடலைமாவு -2 டேபிள் ஸ்பூன்

 அரிசி மாவு -2 டீஸ்பூன் 

கார்ன்ஃப்ளார் _2 டீஸ்பூன்

 பச்சை மிளகாய் இஞ்சி விழுது_ இரண்டு டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் _அரை டீஸ்பூன் உப்பு எண்ணெய் தேவையான அளவு.

முந்திரிப் பருப்பு க்ரிஸ்பி பக்கோடா
முந்திரிப் பருப்பு க்ரிஸ்பி பக்கோடாwww.youtube.com

எண்ணெய் நீங்கலாக ,மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சிறிதளவு நீர் தெளித்து நன்கு பிசறி கொள்ளவும் .

(மாவுக் கலவை முந்திரி பருப்பில் நன்கு ஒட்டுமாறு பிசற வேண்டியது அவசியம்) வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் முந்திரிக் கலவையை உதிர்த்தாற் போல் போட்டு நன்கு மொறு மொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

5. இனிப்பு புட்டு

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு -தலா அரைக்கப் 

வெல்லத்தூள் -ஒரு கப் 

ஏலக்காய் தூள் -அரை டீஸ்பூன் தேங்காய் துருவல் -அரை கப்,  நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்.

இனிப்பு புட்டு
இனிப்பு புட்டுwww.youtube.com

பருப்புகள் இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து சற்று கரகரப்பாக அமைத்துக் கொள்ளவும் இட்லி பாத்திரத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்து ஆற வைத்து நன்கு உதிர்த்துக் கொள்ளவும் . வெல்லத்துடன் 1/4 கப் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிட்டு நெய் ,தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் வேக வைத்து உதிர்த்த பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்க  சுவையில் அசத்தும் இந்த புட்டு.

6. மசூர் பருப்பு க்ரிஸ்பி ரோல்

மசூர் பருப்பு -அரைக்கப் உருளைக்கிழங்கு -2 

கார்ன்ஃப்ளார்- கால் கப் 

எலுமிச்சம் பழச்சாறு -ஒரு டேபிள் ஸ்பூன்

 பொடியாக நறுக்கிய மல்லித்தழை  -சிறிதளவு

 கரம் மசாலாத்தூள் -சிட்டிகை

 உப்பு எண்ணெய் -தேவையான அளவு அரைக்க

 இஞ்சி ஒரு துண்டு, பூண்டு அஞ்சு பல், பச்சை மிளகாய் 3 ,முந்திரி பருப்பு ஆறு.

மசூர் பருப்பு க்ரிஸ்பி ரோல்
மசூர் பருப்பு க்ரிஸ்பி ரோல்www.youtube.com

பருப்பை நன்கு மலர வேகவைத்து நீரை வடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும் .அத்துடன் வேகவைத்த பருப்பு, கார்ன்ஃப்ளார் எலுமிச்சம்பழச்சாறு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கரம் மசாலாத்தூள் ,தேவையான உப்பு அரைத்த விழுது சேர்த்து நன்கு பிசையவும்.பிசைந்த கலவையிலிருந்து சிறிது எடுத்து விரும்பிய வடிவத்தில் உருட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

தக்காளி சாஸ் உடன் பரிமாற சுவையில் அசத்தும் .

இதையும் படியுங்கள்:
வட இந்தியா ஸ்பெஷல் Dal Makhani செய்யலாம் வாங்க!
பருப்பு வகைகள்...

7. வேர்க்கடலைப் பொடி

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை_ இரண்டு கப் 

காய்ந்த மிளகாய் -ஒண்ணேகால் கப்

மலைபூண்டு -இரண்டு

 உப்பு தேவையான அளவு

வேர்க்கடலைப் பொடி
வேர்க்கடலைப் பொடிwww.youtube.com

காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் மிதமான தீயில் நன்கு வறுக்கவும்.ஆறியதும் அதனுடன் மற்ற பொருட்களை எல்லாம் கலந்து நைசாக அரைக்கவும்.

 இந்த வேர்க்கடலைப் பொடியில் நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து சோறு, இட்லி ,தோசை போன்றவற்றுக்கு தொட்டுக் கொண்டால் சுவையாக இருக்கும்.

8. தால்  தோசை

துவரம் பருப்பு ,கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ,பாசிப்பருப்பு -தலா கால் கப்

பச்சரிசி -அரை கப்

சின்ன வெங்காயம்- 15

காய்ந்த மிளகாய் -ஆறு, 

தேங்காய் துருவல்- இரண்டு டேபிள் ஸ்பூன்

 பெருஞ்சீரகம் -ஒரு டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு 

உப்பு எண்ணெய்- தேவையான அளவு

தால்  தோசை
தால் தோசைwww.youtube.com

அரிசி மற்றும் பருப்புகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்து மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

9. மூங்தால் பக்கோடா

பாசிப்பருப்பு -ஒரு கப் 

பெரிய வெங்காயம்- இரண்டு 

பச்சை மிளகாய்- 2 

இஞ்சி -சிறு துண்டு 

பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு 

ஒன்றிரண்டாக உடைத்த தனியா_ இரண்டு டீஸ்பூன் 

உப்பு எண்ணை தேவையான அளவு

வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலையை மிகவும் பொடியாக நறுக்கவும்.

மூங்தால் பக்கோடா
மூங்தால் பக்கோடாwww.youtube.com

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற விட்டு இஞ்சி தேவையான உப்பு தனியா சேர்த்து சற்று கரகரப்பாக அமைத்து எடுக்கவும்.

 நறுக்கிய எல்லாவற்றையும் அரைத்த பருப்பு கலவையில் சேர்த்து நன்கு பிசைந்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்ன சின்ன பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.( வெங்காய சாம்பாருக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்).

10. இனிப்பு சீயம்

பச்சரிசி அரை கப் 

உளுத்தம்பருப்பு அரை கப்

 உப்பு ஒரு சிட்டிகை 

எண்ணெய் தேவையான அளவு

பூரணத்துக்கு

பாசிப்பருப்பு ஒரு கப் 

தேங்காய் துருவல் அரை கப்

 சர்க்கரை ஒரு கப் 

ஏலக்காய் தூள் சிட்டிகை 

நெய் 2 டீஸ்பூன்

இனிப்பு சீயம்
இனிப்பு சீயம்www.youtube.com

அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஒன்றாக ஊறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

பாசிப்பருப்பை மலர வேக வைக்கவும் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சேர்ந்தாற் போல் வந்ததும் ஏலக்காய் தூள் நெய் சேர்த்து கிளறவும். இந்த பூரணத்தை நன்கு ஆற வைத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி,  அரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையில் அசத்தும் இந்த இனிப்பு சீயம்.

இப்படி வித விதமாக ரெசிபிகள் செய்து குடும்பத்தினரை மகிழ்விக்கவும்.  ஊறவைத்து சுண்டலாகவோ அரைத்து அடைகளாகவோ, பக்கோடாகளாகவோ செய்து சாப்பிட்டு உலக பருப்பு தினத்தை மகிழ்ச்சியுடன்கொண்டாடவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com