பாலூட்டும் தாய்மார்களுக்கு பல(ம்)ன் தரும் பத்து உணவுகள்...!

தாய்ப்பால் தினம்!
தாய்ப்பால் தினம்!
Published on

பிறந்த குழந்தைகளுக்கு தாய்பாலை  மிஞ்சிய சத்தான உணவு  இல்லை என்பது பொதுவான உண்மை. அதனால் தான் பிறந்த குழந்தைக்கு குறைந்தது ஆறு மாதமாவது தாய்ப்பால் கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். பிறந்த குழந்தை 60 முதல் 100 மி.கி தாய்ப்பாலை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்துகிறது. தாய்ப்பால் உற்பத்தியாக தாய்க்கு தினமும் 600 கலோரி அதிக சக்தி தேவைப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, சில பெண்களுக்கு  போதிய தாய்ப்பால் சுரக்காமல்  சிரமப்படுவார்கள்.  அவர்கள் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள் வேண்டும் அப்படிப்பட்ட உணவுகளில் சில... 

1. ஓட்ஸ் மற்றும் பார்லி போன்ற தானிய உணவுகளில் அதிகமாக இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் இணைந்த கார்போஹைட்ரேட் சத்துக்கள் இருப்பதால் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் களாகவும், பிரிரேடிக்கல் அதிகம் சுரக்கும் தன்மையாலும் இவைகள்  தாய்ப்பால் சுரப்பு மருந்துகளாக செயல்படுகிறது என்கிறார்கள்.

2. தாய்ப்பால் நன்கு சுரக்கவும், பிரசவத்திற்கு பின் உடல் தேறவும்  வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை  நன்கு உதவுகிறது. காரணம் இதிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென்ஸ்  பண்பு இது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் போன்று செயல்பட்டு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவுகிறது. எனவே அன்றாட உணவில் வெந்தயம் அவசியம் சேர்த்து வாருங்கள்.

3. வெள்ளைப்பூண்டு பால் உணர்வு நாளங்களின் பணிகளை ஊக்குவித்து பால் சுரப்பை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் வைக்க உதவுகிறது. மேலும் பாலின் சுவையை அதிகரிக்கும். இதிலுள்ள "அலிஸின்" எந்த விதமான நோய் கிருமிகளையும் உடலில் சேராமல் தடுத்து பாதுகாக்கிறது. வெள்ளைப்பூண்டை நேரடியாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது பாலில் போட்டு காய்ச்சி வடிகட்டி பருகலாம். இது பால் கட்டி சேர்வதையும் தடுக்கும்.

4. காரட் சாறு எடுத்து பாலூட்டும் பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு பால் அதிகம் ஊரும் மற்றும் பாலின் சத்தும் கூடும் காரணம் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்களான ஏ, சி, கே இருப்பதுதான். இது வளரும் குழந்தைகளுக்கு நல்லது. குறைவாக தாய்ப்பால் உள்ள பெண்களுக்கு கேரட் ஒரு கண்கண்ட மருந்து.

5. பாலூட்டும் பெண்கள் பசலைக்கீரையை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம் தாய்ப்பாலை அதிகம் சுரக்க உதவும் "பைட்டோ ஜோன்ஸ்" இதில் உள்ளது. அதோடு பசலைக்கீரையில் அதிகளவு இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஃபோலேட் சத்தும் உள்ளது.

6. சோம்பு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் நறுமணப்பொருள் . இதிலுள்ள "அனெத்தோல்" எனும் சத்து  பாலூட்டும் பெண்களுக்கு பால் உற்பத்தியை தூண்டும் என்கிறார்கள். சோம்பை சாலட்களில், சூப்பில் சேர்த்து சாப்பிடலாம், சோம்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல சாப்பிடலாம் இதனால் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

7. பாதாம் பருப்பில் உள்ள லேக்டோஜெனிக் பண்புகள் தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவுகிறது. மேலும் பாதாம் பருப்பில் மெக்னீசியம், இரும்புச்சத்து, புரதம் மற்றும்  லிப்பிடுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்தக்கள் இருப்பதால் பாலூட்டும் பெண்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முக தாட்சண்யம் பார்ப்பவரா நீங்கள்?
தாய்ப்பால் தினம்!

8. வாரத்திற்கு குறைந்தது 3 முறையாவது மீன் சாப்பிட வேண்டும். குறிப்பாக சல்மான் மீன், பால் சுறா மீன். இதிலுள்ள ஒமேகா 3 , புரோட்டீன் மற்றும் வைட்டமின்" டி"யும் தாய்ப்பால் சுரப்பிற்கு உதவுகிறது. மேலும் குழந்தைகள் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பலப்பட உதவும் டிஎச்ஏ எனும் சத்து இதில் அதிகளவில் உள்ளது.

9. பாலூட்டும் தாய்மார்கள் அன்றாட உணவில் இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம் பழம் மற்றும் முருங்கைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கை அல்லது  அகத்திக் கீரையின் கொழுந்து இலையை பருப்புடன் வேகவைத்து வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர தாய்ப்பால் ஒரு ஆண்டு வரை கிடைக்குமாம்.

10. பாலூட்டும் பெண்கள் தங்களது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் அதிகம் சுரக்க நீர்ச்சத்து அவசியம் ஆகவே பாலூட்டும் பெண்கள் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் பால், சூப், ஜூஸ் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com