2024 வருட ‘ஸ்த்ரீ ரத்னா’ விருதுகள் யாருக்கு?

ஸ்த்ரீ ரத்னா விருதினைப் பெற்றவர்கள்...
ஸ்த்ரீ ரத்னா விருதினைப் பெற்றவர்கள்...

ண்டுதோறும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்மணிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ‘ஸ்த்ரீ ரத்னா’ விருதினை 2013ஆம் ஆண்டு முதல் அளித்து கெளரவித்து வருகிறது (மும்பை) ஃபைன் ஆர்ட்ஸ் செம்பூர்.

பத்தாவது ஆண்டாகக் கொண்டாடப்பட்ட விருது விழாவிற்காக, ஸ்த்ரீ ரத்னாக்களைத் தேர்வு செய்ய 5 அங்கத்தினர்கள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப் பட்டிருந்தது.

குழுவின் தலைவராக, முன்னாள் Deputy Governor, RBI திருமதி சியாமளா கோபிநாத், உறுப்பினர்களாக திருமதி ரேணுகா ராம்நாத் (Founder CEO Multiples/ Alternate Asset Management Co.,) திருமதி சுதா ரகுநாதன், திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன் மற்றும் திருமதி சாந்தி ஏகாம்பரம் (Director of Jt. MD. Kotak Mahindra Bank) ஆகியோர்கள் இணைந்து செயல்பட்டனர்.

எட்டு சிறந்த பெண்மணிகள் ஸ்த்ரீ ரத்னா விருதினைப் பெற்றார்கள். அதன் விபரம்:

நீரஜா பிர்லா

ஆதித்ய பிர்லா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர், தவிர M Power இன் நிறுவனர். பணியிடத்தில் பாலின சமத்துவத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். குமாரமங்கலம் பிர்லாவின் துணைவியார். M Power தேசிய அளவில் மனநல பாதுகாப்பு சேவை அளித்து வருகிறது. அன்புதான் நல்ல சிகிச்சை என்பவர் இவர்.

தர்ஷனா ஜாவேரி

மணிப்புரி நடனத்தை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர். இம்பால், மும்பை, கொல்கத்தாவில் மணிப்புரிக்கென ‘நர்த்தனாலயா’ அமைப்பை  நிறுவியுள்ளார். மணிப்புரி நடனத்தின் முன்னணி இந்திய விரிவுரையாளர். பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். குரு பிபின்சிங்கின் மாணவி.

சுகுணா வரதாச்சாரி

கர்நாடக இசைக் கலைஞர், வீணைக் கலைஞர் மற்றும் ஆசிரியர். சிறந்த பாடகி. அநேக தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்று இசை குறித்த விரிவுரைகளை வழங்கியுள்ளார். சங்கீத கலாச்சார்யா, சங்கீத நாடக அகாடமி விருதுகளைப் பெற்றவர்.

ஸ்த்ரீ ரத்னா விருதினைப் பெற்றவர்கள்...
ஸ்த்ரீ ரத்னா விருதினைப் பெற்றவர்கள்...

ஜரீன் தாருவாலா

Stan Chartஇன் திருப்புமுனை நிபுணர். விவசாய வணிகத்தை உருவாக்கியவர். கிராமப்புறங்களில் முதன்முதலாக ATM நிறுவக் காரணமாக இருந்தவர். 33 வருடங்களுக்கும் மேலாக Banking Serviceஇல் இருந்து திறமையாக செயலாற்றி வருகிறார்.

நீர்ஜா கபூர்

நியூ இந்தியா அஷுரன்ஸ் கம்பெனியில் கடந்த 36 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். லண்டனில் இருக்கும் இந்தக் கம்பெனி பிரிவில் மூன்று ஆண்டு காலம் திறமையாக பணியாற்றியவர். பல்வேறு பிரிவுகள், பதவிகள் என்று அனைத்தையும் சிறப்பாக கையாண்டவர்.

M.V. பானுமதி

(Former Director General of Income Tax Investigation, Mumbai) 36 வருட கால அனுபவமிக்கவர். தற்சமயம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். வருமான வரித் துறை இலாகாவில் மிகச் சிறப்பாக பணி புரிந்தவர். முன்னாள் நிதித்துறை அமைச்சர் திரு. அருண் ஜெட்லி இவரது சேவையைப் பாராட்டி, கடிதம் கொடுத்து கெளரவித்துள்ளார்.

பரத நாட்டியம்...
பரத நாட்டியம்...

அநுபமா ஹோஸ்கரே

(Founder, Director of the Dhaatu Puppet Theatre)

இரண்டு முதுகலைப் பட்டங்களை, பொறி இயற் துறையில் பெற்றவர். 2004ஆம் ஆண்டு Puppet தியேட்டரை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருபவர். 2012ஆம் ஆண்டில் International Puppet திருவிழாவினை நடத்தினார். பரதநாட்டியக் கலைஞரும்கூட.

இதையும் படியுங்கள்:
உங்கள் கனவுகளை நனவாக்குவது எப்படி?
ஸ்த்ரீ ரத்னா விருதினைப் பெற்றவர்கள்...

டாக்டர் ஆனந்தா சங்கர் ஜெயந்த்

பரத நாட்டியம் மற்றும் குச்சுப்புடி கலைஞர். உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் PhD பட்டம் பெற்றவர். இந்திய ரெயில்வே போக்குவரத்து சேவையின் முதல் பெண் அதிகாரி. பாரம்பரிய நடனக் கலைஞர், நடன இயக்குனர். சங்கீத நாடக அகாடமி, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ பட்டம் வாங்கியவர்.

ஃபைன் ஆர்ட்ஸ் செம்பூர் அமைப்பின் சேர்மன் Emeritus திரு. G.G. பரதன், சேர்மன் திரு. R. ராதா கிருஷ்ணன், பிரசிடெண்ட் திருமதி ராதிகா அனந்தகுமார் மூவரும், பெண்மணிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, விருதுகளை வழங்கினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com