
பெண்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய அரசு சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன் கொடுமைகள், பாலியல் தீண்டல்கள் என அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், அரசாங்கமும் பல வழிகளில் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
அந்த வகையில் பெண்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பாதுகாப்பு உபகரணங்கள் எவை என பார்ப்போம்.
1. பெப்பர் ஜெல் ஸ்பிரே:
தற்போது பெண்களிடம் அதிகம் புழக்கத்திற்கு வந்திருக்கும் பொருளாக பெப்பர் ஜெல் ஸ்பிரே உள்ளது. உங்களை யாரேனும் பின் தொடர்கிறார்கள் அல்லது தாக்கமுயற்சி செய்கிறார்கள் என உணர்ந்தீர்கள் என்றால், உடனே அவர்களின் கண் மற்றும் வாய்ப்பகுதியில் பெப்பர் ஜெல்லை ஸ்பிரே செய்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம். இதனால், கண்களில் ஏற்படும் விளைவு மிகவும் வீரியம் நிறைந்தவை. தாங்க முடியாத எரிச்சலை தரும். இதை வாங்கி உங்கள் ஹேண்ட் பேக்கில் போட்டுக் கொண்டு வைத்திருந்தால் ஆபத்து நேரத்தில் இது உதவும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அதனை அவர்களுக்குத் தெரியாமல் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
2. டெட்டிக்கல் பென்:
பார்க்க சாதாரண பென் போன்ற தோற்றம் கொண்ட இது பெண்களுக்கு நிச்சயம் உதவும். அலுமினியத்தால் ஆன இந்த பேனாவை ஈசியாக ஆயுதமாக பயன்படுத்தலாம். நீங்கள் ஆபத்தை உணரும்போது, இந்த பென்னை எடுத்து எதிரில் இருப்பவரின் கையில் குத்தினால் போதும். சாதாரண பென் போல இது வளையாது. அதிகப்படியான வலியை கொடுக்கும். மிகவும் சிறிய வடிவில் இருக்கும் இதை எப்போதும் ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளலாம்.
3. சேஃப்டி கீ செயின்:
இது பார்ப்பதற்கு சாதாரண கீ செயின் வடிவில் இருக்கும். ஆனால், இதில் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் அலாரம் பொருத்தப்பட்டிருக்கும். தனியாக செல்லும் போதும் ஆபத்து வருவதை உணர்ந்தாலோ யாரேனும் பின்தொடர்ந்து வந்தாலோ அதில் இருக்கும் அலாரத்தை அழுத்தினால் போதும். 50 அடி தூரம் வரை இதன் சத்தம் ஒலிக்கும். சத்தத்தை கேட்டு எதிரி ஓடவும் வாய்ப்புண்டு. இதனால் உங்களை பாதுகாக்க சிலர் ஓடி வரலாம்.
4. செல்ப் ரிங்:
இது பெண்கள் அணியும் சாதாரண கைவிரல் மோதிரம் வடிவில் இருக்கும். அதன் உட்புறத்தில் கூர்மையான கத்தி போன்ற பகுதி கொடுக்கப்பட்டிருக்கும். தினமும் தனியாக சென்று வரும் பெண்கள் இந்த மோதிரத்தை கையில் அணிந்து கொண்டு செல்லலாம். ஆபத்து நேரத்தில் முனைப்பகுதியை மட்டும் நீக்கிவிட்டு அந்த கூர்மையான கத்தி பகுதியை பயன்படுத்தி எதிரிகளிடமிருந்து தப்பிக்கலாம்.
5. எல்லோ ஜாக்கெட்:
கரண்ட் ஷாக் அடிக்கும் ஐபோன் கேஸிங் பெயர்தான் எல்லோ ஜாக்கெட். இது ஆன்லைனிலும் கிடைக்கும். ஐபோன் வைத்திருக்கும் பெண்கள் இந்த கேஸை வாங்கி பயன்படுத்தலாம். ஆபத்து நேரத்தில் இதில் இருக்கும் பட்டனை அழுத்தி எதிரியின் கையில் வைத்தால் போதும் ஷாக் அடிக்கும். உணர்வு ஏற்பட்டு, அவர்கள் நிலைகுலைந்து விழுவார்கள். இதில் சார்ஜிங் செய்யக்கூடிய வசதி உள்ளது. தினமும் சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
இதில் குறிப்பிட்ட பொருட்கள்பெண்களின் பாதுகாப்புக்காக ஆபத்துக் காலத்தில் அவர்களுக்கு பயன்படும்.
இவற்றை தக்க நேரத்தில் மட்டும் உபயோகிக்க வேண்டும்.