உங்க மனைவியை மகிழ்விக்க சிம்பிளான 5 வழிகள்!

couple images...
couple images...
Published on

னைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள் அம்மா, அப்பா அண்ணன், தம்பி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லாம மனைவி அமைவதற்க்கு மட்டும் இறைவன் கொடுத்த வரம் என்கிறார்களே, அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மனைவியின் மகத்துவத்தை இத்தகைய மனைவியை மகிழ்விக்க சின்ன சின்ன 5 வழிகள்

1.மனைவி எதைச் சொன்னாலும் அப்படியே செய்து முடிக்கவும்.

உங்கள் மனைவி எதையாவது சொன்னால் அதனை மறுப்பு சொல்லாமல் அப்படியே செய்து முடிக்கவும். இதில் தவறு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு நாள் காலையில் நான் உனக்கு ஏதாவது உதவி செய்யவா  என தாராளமாகவே அவரிடம் கேட்கவும். இன்னும்  சொல்ல வேண்டுமென்றால் அப்போதே செயலாற்றவும் . இதனை நடைமுறைப் படுத்துவதில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டாலும் சீரான முறையான சுகமான குடும்ப வாழ்விற்கு இது ஒரு இதமான பழக்கமாகும்.

2. உங்கள் தவறுகளை உளமாற ஒப்புக் கொள்ளவும்.

உளமாற உங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்ளவும். அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயங்க வேண்டாம். மறுபடியும் இதே போல் தவறுகள் நடக்காத வண்ணம் முடிந்தளவு பார்த்துக் கொள்கிறேன் என்பதை உறுதி கூறுங்கள் உங்கள் இணையிடம். உங்கள் பேச்சின் உறுதி தன்மையை வைத்தே மனைவி மிகவும் மகிழ்ச்சி அடைவார். உளமாற தவறுகளை ஒப்புக் கொள்ளும்போது நீங்கள் எப்போதும் தவறான பாதைக்கு செல்லவே முடியாது.

3. புன் சிரிப்பு.

புன் சிரிப்பு என்பது உங்கள் பார்வையை தோற்றத்தை கம்பீரமாகச் செய்யும் செலவில்லாத வழியாகும். நீங்கள் சிரித்தால் உலகமும் உங்களுடன் இணைந்தே சிரிக்கும். சிரிப்பு என்பது உங்கள் வாழ்க்கையை வளமாக்க செய்யும் மலிவான பாதையாகும். எளிய வழியாகும். மனைவியை கவரும் செலவில்லாத வழியாகும். சிரிப்பை தொடருங்கள்.  உங்களுடைய சின்ன சின்ன பிரச்சனைகள் கூட  சரியாவதை காண்பீர்கள். உங்களது கடுமையான முகபாவனை நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். ஆதலால் சிரிப்பை தொடருங்கள்.

4. பிக்மேளியன் வழியை பின்பற்றவும்.

கிரேக்க நாட்டில் பிக்மேளியன் என்ற ஒரு சிற்பி இருந்தார். ஒருமுறை சலவை கல்லில் ஒரு அழகிய பெண் சிலையை வடித்தார். தான் செதுக்கிய சிலையின் வனப்பைக் கண்டு அந்தப் பெண்ணையே காதலிக்க தொடங்கி, இரவு பகல் என எல்லா நேரங்களிலும் அவளது நினைப்பாகவே காதல் வசப்பட்டு போனார். ஒரு நாள் அந்த சிலையே உயிருள்ள பெண்ணாக உருமாறி அவர் கண்ணெதிரே காட்சியளித்தாள்.

இதையும் படியுங்கள்:
வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது!
couple images...

அதேபோல் உங்கள் மனைவியை நல்ல குடும்பப் பாங்கான மனைவியாக, ஒரு நல்ல தாயாக, நல்ல மருமகளாக நீங்கள் நினைக்க ஆரம்பித்து அப்படியே தொடர்ந்து நினைவில் ஓடவிட்டு வந்தாலே நீங்கள் எப்படி எல்லாம் உங்கள் மனைவி இருக்க வேண்டும் என்று நடக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே அவர் உருமாறி விடுவார் என்பது திண்ணம்.

5. உங்கள் மனைவியோடு ஹோலி சிந்தனையை பின்பற்றவும்.

பகவான் கிருஷ்ணர் கோபியர்களுடன் ஹோலி விளையாடியதை இன்று வரை இன்ப விளையாட்டாகவே கருதி பேசப்பட்டு வருவது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும் .நீங்களும் அப்படியே மகிழ்ந்து விளையாடலாம் உங்கள் மனைவியோடு. அவருக்கு புகழுரைகளை அள்ளி இறைக்கவும். அப்படியே பாராட்டுகளை தெரிவிக்கவும். உதாரணத்திற்கு உங்கள் மனைவி அதிகாலை 6 மணிக்கு எழுந்து வேலைகளை செய்யும்போது சபாஷ்! உன்னை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. நான் எழுந்திருக்கும் முன்னரே காபி போட்டுக் கொண்டிருப்பதை நினைக்கவே ரொம்ப நான் கொடுத்து வைத்தவன் என்பதை சொல்லிப் பாருங்கள் பலன் பின்னர் தெரிய ஆரம்பிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com