
ஒத்த எண்ணம் கொண்ட நபரைத் தேர்ந்தெடுப்பது
ஒரு மனைவி திருமணத்திற்குமுன் உங்கள் பின்னணியை தெரிந்து கொள்ளவேண்டும். உங்கள் துணையின் சமூக மற்றும் குடும்பப் பின்னணி பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம். எப்போதும் ஒத்த எண்ணம் கொண்டவர்களுக்கும் பொருளாதார நிலையில் சமமான இருப்பவர்களிடையே திருமணப் பிணைப்பு ஏற்படவேண்டும். சாணக்கியர் பணக்காரர்களை திருமணம் செய்தல் நல்லது என்கிறார்.
பொறுமை அவசியம்
பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர்கள் குடும்பத்தை அனைத்து சூழ்நிலைகளில் இருந்து பாதுகாப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். கஷ்ட காலங்களில் குடும்பம் பலமாக இருப்பது நல்லது. அளவுக்கு அதிகமாகக் கோபப்படுபவர்கள் வாழ்க்கையில் பிரச்னைகளை கொண்டு வருகிறார்கள். அடிக்கடி கோபப்படும் ஒருவர் தனது வாழ்க்கை துணைக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறார்.
வார்த்தைகளைப் கவனியுங்கள்
நல்ல தொடர்பு எந்த உறவையும் பலப்படுத்தும் என்பதை மறந்து விடக்கூடாது. கணவன் மனைவிக்கிடையே தகவல் பரிமாற்றம் மிக முக்கியம். உங்கள் துணையின் கசப்பான வார்த்தைகள் உங்கள் திருமணத்தில் விரிசலை ஏற்படுத்தும். திருமணத்திற்கு முன் உங்கள் துணையின் வாழ்க்கை முறையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அழகை மட்டும் பார்க்காதீர்கள்
அழகுக்காக ஒரு பெண்ணை திருமணம் செய்யாதீர்கள். புற அழகை விட, அக அழகு மிகமுக்கியம். சாணக்கியர் நீதியின்படி ஒருபோதும் பொய்யரை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்காதீர்கள். அது ஆபத்தாக முடியும். சாணக்கிய நீதியின்படி உங்கள் துணை ஆன்மிக நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறாரா என்பதை அறிந்து கொள்வது அவசியம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எந்த விவகாரமும் செய்வதில்லை என்று சாணக்கியர் கூறுகிறார்.
நம்பிக்கை மிக முக்கியம்
திருமணம் செய்துகொள்ளும் நபர் மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே உறவில் முன்னேற முடியும். சந்தேகம் பெரிய நோய். அதனால் நம்பிக்கை மிகவும் முக்கியமானது. நம்பிக்கை இல்லாத உறவு நீண்ட காலம் நீடிக்காது.
பழக்கங்களை அறிந்துகொள்ளுங்கள்
உங்கள் துணையின் பழக்க வழக்கங்கள் பற்றி நீங்கள் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும் என சாணக்கியர் நீதி கூறுகிறது. நல்ல பழக்கங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கெட்ட பழக்கங்கள் வாழ்க்கையையே பாழாக்கிவிடும். நீங்கள் திருமணம் செய்யப்போகும் நபரின் பழக்க வழக்கங்களை முன் கூட்டியே அறிந்திருப்பது நல்லது.