ஆடிப்பூரம் ஆகஸ்டு - 7... 'தென்னாட்டுக்கொரு கோதை' - ஆண்டாள்!

Aadi Pooram
Aadi Pooram
Published on

- மீரா பார்த்தசாரதி

அம்மன்களுக்கு விசேஷமானது ஆடி மாதம். இந்த மாதத்தின் பூர நட்சத்திரத்தன்று பெரியாழ்வாரால் துளசிச் செடியின் அருகே கண்டெடுக்கப்பட்ட ஆண்டாள் அவதரித்த மாதமும் இதுவே.

இந்த இடம் இன்றளவிலும்  ஸ்ரீவில்லிபுத்தூரில், பூஜை , புனஸ்காரங்கள் உடன் நந்தவனமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

ஆழ்வார்களின் முக்கிய நூலான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும் இயற்றியுள்ள ஆண்டாள், பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் என்ற சிறப்பைப் பெற்றவள். 

‘தென்னாட்டுக்கொரு கோதை’ என்று புகழப்படும் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையானது இந்தி மொழியிலும் பெயர்க்கப்பப்பட்டுள்ளதாம் .

ஒரு பொருத்தம் பாருங்களேன் … ‘வடநாட்டு மீரா’ , ‘தென்னாட்டு கோதை ‘ இருவருமே பகவான் கிருஷ்ணன் மீது தீராக் காதல் கொண்டவர்கள்.

கவிதாயினியான மீராவின் கைகளில் தம்புரா… தன்  கவிதைப் புலமையால் வட நாட்டுப் பிரஜைகளை மீரா கவர, தென்னாடு புகழ் ஆண்டாளோ மார்கழி மாதத்தை ஆள்பவள் .

தான் சூடிய பின் பெருமாளுக்கு பூஜை மாலையை அனுப்பும் ஆண்டாளை எண்ணி இந்த மாதத்தில் பாவை நோன்பு எடுத்தால் திருமணம் கை கூடும் என்பது ஐதீகம். 

‘கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு’...என்கிறார் வேதபிரான் பட்டர். திருப்பாவையில் முப்பது பாடல்கள் என்பதை எவ்வளவு நயமாகக் கூறியிருக்கிறார்.

திருவாடிப்பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியே 

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே 

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே 

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே 

உயரரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே 

மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே    

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே …

ஆண்டாள் அவதரித்ததை சிறப்புற வாழ்த்திப் பாடியிருக்கும் இப்பாடலை ஆடி பூர நாளில் பாட எல்லா வளமும், எல்லா நலமும் கூடும். 

இதையும் படியுங்கள்:
வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் போது கவனிக்க வேண்டியவை..!
Aadi Pooram

‘அன்னவயல் புதுவை ஆண்டாள் ‘... ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ … என்றெல்லாம் புகழப்படும் ஆண்டாள் கண்ணனிடம் தன் பக்தியை பரிபூரணமாக அர்ப்பணித்தாள் . 

நாச்சியார் திருமொழியில் 143 பாமாலைகளைக் கோர்த்து தன் பரிபூரண அன்பைச் சமர்ப்பித்தாள். அன்பின் பரிபூரண சமர்ப்பணமே அந்த ‘143’ ன் மகத்துவம் .

இலக்கை அடையும் இலட்சியத்துடன்கூடிய ஒருமுகப்படுத்தப்பட்ட விடாமுயற்சி இருந்தால் போதும்; எதையும் சாதிக்கலாம் ... வெல்லலாம் என்பதற்கு ஆண்டாளை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேண்டுமா என்ன?

இந்த வருடம் ஆடிப்பூரம் - ஆகஸ்டு - 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com