வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் போது கவனிக்க வேண்டியவை..!

Kamatchi amman Vilakku
Kamatchi amman Vilakku
Published on

நம் அனைவரும் வெள்ளி, செவ்வாய் அன்று வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவோம். ஒருசிலர் நாள்தோறும் விளக்கேற்றி வைத்து வழிபடுவார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை தவறாமல் விளக்கேற்றுவார்கள். விளக்கு ஏற்றும் போது அதன் வெளிச்சம் எவ்வாறு பிரகாசமாக உள்ளதோ, அதேபோன்று தான் நம் வாழ்க்கையும் பிரகாசமடையும் என்பது ஐதீகம். 

நம் முன்னோர்கள் ஒரு விஷயத்தை சாதாரணமாக கூறிவிடமாட்டார்கள். அதற்கு பின்பு ஆயிரம் காரணங்களும், அறிவியலும் இருக்கும். இந்து சாஸ்திரத்தின் படி முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள அனைத்துமே ஏதோ ஒரு அறிவியலை கொண்டிருக்கும். அதன்படி நம் வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கேற்றும் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

பொதுவாக ஒரு வீட்டில் சுபகாரியங்கள் செய்கிறார்கள் என்றால் நிச்சயம் அந்த வீட்டில் வாங்கும் ஒரு மங்கலமான பொருள் காமாட்சி அம்மன் விளக்கு. மேலும் சுபநிகழ்வுகளுக்கு சீர் போன்றவை செய்யும் போது இந்த காமாட்சி அம்மன் விளக்கு அதில் அவசியம் இடம்பெறும்.

காமாட்சி அம்மன் உலக உயிர்கள் நலம்பெற வேண்டி தவம் இருந்தவள். அவ்வாறு தவம் இருந்தபோது அனைத்து தெய்வங்களும் அவளுள் அடக்கமாயினர். அதனால் ஒருவர் தன் வீட்டில் அவரின் குலதெய்வத்தை நினைத்து காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

காமாட்சி அம்மன் விளக்கேற்றும் போது...

காமாட்சி அம்மன் விளக்கேற்றும் போது விளக்கு சுத்தமாக இருக்க வேண்டும். தினமும் சுத்தப்படுத்த வேண்டியது இல்லை. ஆனால் விளக்கு பாசி பிடித்து சுத்தமில்லாமல் ஏற்றக்கூடாது. எனவே வாரத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குடும்பம் என்பது கோவில். அதை தாங்கி நிற்கும் அஸ்திவாரம்?
Kamatchi amman Vilakku

விளக்கில் அம்மன் அமர்ந்த நிலையில், இருபுறமும் யானை இருக்கும். எனவே விளக்கில் மஞ்சள், குங்குமம் வைத்து யானை உருவத்திற்கும் வைக்க வேண்டும். 

விளக்கை தரையில் வைத்து ஏற்றாமல் ஒரு சிறிய தாம்பாளத்தில் வைத்து தான் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த தாம்பாளத்தில் சிறிதளவு நீர், அல்லது மலர்கள் தூவி விளக்கை அதன் மேல் வைத்து ஏற்றுவது சிறப்பு.

விளக்கில் எண்ணெய் ஊற்றிய பிறகு தான் திரி போட வேண்டும். திரி வைத்துவிட்டு எண்ணெய் ஊற்றக்கூடாது. மேலும் விளக்கு ஏற்றும் போது, அதிக அளவிலான சுடர் தூண்டிவிடக்கூடாது. சிறிய அளவில் எரிந்தால் போதுமானது.

விளக்கில் வைத்த மஞ்சள், குங்கும், பூ, சுடரில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் கொண்டு ஏற்றக்கூடாது. இது மேலும் கஷ்டத்தை கொடுக்கும்.

காலை பிரம்ம முகூர்தத்தில் விளக்கேற்றி வழிபட்டால் கூடுதல் சிறப்பு. காமாட்சி அம்மன் மற்றும் குலதெய்வத்தின் பரிபூர்ண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com