ஓபல் சுசாட்டா சுவாங்ஸ்ரீ: பேரழகும், பேரறிவும்!

opal suchata
opal suchata Chuangsri
Published on

சமீபத்தில் 2025ம் ஆண்டுக்கான உலக அழகிகளுக்கான இறுதிப் போட்டி ஆந்திர மாநிலம் தெலங்கானாவில் நடந்தது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 108 அழகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஓபல் சுசாட்டா சுவாங்ஸ்ரீ. இவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

தாய்லாந்து வரலாற்றின் முதல் உலக அழகி;

2003, மார்ச் 20ல் தாய்லாந்தின் ஃபூக்கெட்டில் பிறந்த ஓபல், ஹோட்டல் உரிமையாளரின் மகள். இவருக்கு தாய் (Thai), ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் சரளமாக பேசத் தெரியும். தற்போது பொலிடிகல் சயின்ஸ் படித்து வருகிறார் ஓபல். 72 வருட தாய்லாந்து வரலாற்றில், முதல்முறையாக உலக அழகிப் பட்டத்தை வென்ற முதல் தாய்லாந்து பெண் என்கிற சிறப்பைப் பெற்று, தாய்லாந்து நாட்டிற்கு மிகுந்த பெருமை தேடித் தந்திருக்கிறார் ஓபல்.

தூதுவராகும் எண்ணம்;

ஓபல் தனது நாட்டிற்கான தூதுவராக வேண்டும் என்கிற இலக்கு வைத்திருக்கிறார். மும்மொழிகள் பேசத் தெரியும் என்பதால் உலகளாவிய தொடர்புத் திறனை மேம்படுத்த உதவும் என்று நம்புகிறார். கல்வி மற்றும் மொழியியல் சாதனைகளுக்கு அப்பால் ஓபல் பெண்களின் ஆரோக்கியத்திற்காக மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

சமூக அக்கறையும், சுகாதார விழிப்புணர்வும்;

தனது 16 வது வயதில் மார்பகத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அனுபவம் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. மார்பக சுகாதார விழிப்புணர்வு பற்றிய பிரச்சாரத்தை செலுத்தத் தூண்டியது. 'ஓபல் ஃபார் ஹெர்' என்கிற தலைப்பில் அவர் மார்பக சுகாதாரத்தைப் பற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார். கல்வி மற்றும் தடுப்பு சுகாதார பராமரிப்பு மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் விளங்குகிறார்.

இதையும் படியுங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
opal suchata

'ஃபர் அம்மா'

ஓபல் செல்லப் பிராணிகளின் ரசிகை. அவர் வீட்டில் 16 பூனைகள் மற்றும் ஐந்து நாய்களை பராமரித்து வளர்த்து வருகிறார். இதனால் அவருக்கு 'ஃபர் அம்மா' என்கிற செல்லப்பெயரும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் இவர் கதை சொல்வதில் வல்லவர். பெண்கள் அனைத்து வயதினருக்கும் முன்மாதிரியாக இருப்பதையும் பிறருக்கு வழி நடத்துவதையும் நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.

புத்திசாலித்தனமான பதில்:

உலக அழகிகளுக்கான இறுதிப் போட்டியின் இறுதிச் சுற்றில், நடுவராக வந்த, சோனு சூட் என்கிற பிரபல நடிகர் கேட்ட சிக்கலான கேள்விக்கு மிக புத்திசாலித்தனமாக பதில் அளித்தார் ஓபல். அவரது பதில் கூர்மையான அறிவையும் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது.

"உங்கள் பயணம் உங்களுக்கு கதை சொல்லலையும் தனிப்பட்ட பொறுப்பையும் எவ்வாறு கற்றுக்கொடுத்தது?" இந்த கேள்வியை நடுவர் சோனு சூட் எழுப்பினார்.

இதையும் படியுங்கள்:
கல்லூரி அணி டூ சர்வதேச அணி! ஹென்ரிச் கிளாசெனின் கிரிக்கெட் பயணம்!
opal suchata

"பிறருக்கு நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டும். நீங்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு வயதானவராக இருந்தாலும் வாழ்க்கையில் எந்தப் பட்டத்தை வகித்தாலும் உங்களை அடுத்தவர்கள் கவனித்துப் பார்க்கிறார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும். தான் மட்டுமே சிறந்தவர் என்று எண்ணக்கூடாது.

அதாவது பதவி, புகழ், வயது இவற்றைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளையோ அல்லது பெற்றோர்களையோ, பெரியவர்களையோ எல்லாரையும் கருணையுடன் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்கிற பாடத்தைக் கற்றுக்கொண்டேன்..." எனப் பதிலளித்தார் ஓபல். இதுவே இந்த உலகில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு செய்யும் நன்மையாகும் என புத்திசாலித்தனமாக பதில் அளித்தார் ஓபல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com