
-நா.பா. மீரா
அட்சய திருதியை
கங்கையும் அன்னபூரணியும் புவிதனில்
அவதரித்த திருநாளாம் இப்பெருநாளிலே
நீரும், சோறும் வீண்செய்தலை
விட்டொழித்தல் நலமன்றோ?
இறைக்கச் சுரக்கும் கேணியாய்
அள்ள அள்ளக் குறையா
அமுதசுரபியாய். கொடுக்கப் பெருகிடும்
அன்பே ஆயுளுக்கும் அட்சயமன்றோ?
தானம் செய்திடப் பெருகிடும்
தனமே இத்திருதியை நாளில்
என்ன தானம் செய்யலாம்
யோசிப்போம் நிதானமாய்
இயன்ற தானம் செய்யலாம்
தனிமையில் வாடும் முதியோர்
தீராப் பிணியில் தவிப்போர்
நாடித் துயர் துடைப்போம்
உணர்வீர் மாந்தரே வயிற்றின்
துயர் துடைக்கும் அன்னதானம்
காலதானமோ மனத்தின் பசி நீக்கி
புத்துயிர் அளித்திடும் அட்சயமே!
இன்று (30.04.2025) அட்சய திருதியை.
இந்நன்னாளில்....
அன்பினைப் பகிர்வோம்! பெறுவோம்! பெருகட்டும் அன்பு அட்சயமாய்....
வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!