Akshaya Tritiya 2025
2025 ஆம் ஆண்டின் அட்சய திருதியை ஏப்ரல் 30, புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. "அட்சயம்" என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். இந்த நாளில் தொடங்கும் எந்த ஒரு செயலும், வாங்கும் பொருட்களும் வளர்ந்து பெருகும் என்பது நம்பிக்கை. தங்கம், வெள்ளி வாங்குவதும், தானதர்மங்கள் செய்வதும் மிகவும் சுபமானதாகக் கருதப்படுகிறது.