காலம் மாறிவிட்டது என்றாலும், கருத்துள்ள சிலவற்றை மறக்க வேண்டாமே!

kumkum on forehead...
kumkum on forehead...Image credit - mangalparinay.com
Published on

பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.

குங்குமப் பொட்டு வைத்தாலே உடலுக்கு நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவதுதான் சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி முதலியவற்றை அணியலாம். நூலாகிய தாலிச்சரட்டில் பஞ்ச பூத சக்திகள் அதிகம்.

தாலி என்பது ஒரு மங்கலப் பொருள். எனவே அணிகலன் களைப் போல் தினமும் அதைக்கழற்றி வைப்பதும் மறுநாள் எடுத்து அணிந்து கொள்வதும் தவறு. அது எப்பொழுதும் கழுத்திலேயே இருக்க வேண்டும்.

காலையில் அடுப்பு பற்ற வைக்கும்பொழுது அக்னியை வணங்கி இன்று சமைக்கும் உணவினை அனைவரும் உண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்.

மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது. கோயிலுக்குக் கொண்டு செல்லும் எண்ணெயை கோயில் விளக்கிலேதான் ஊற்ற வேண்டுமே தவிர வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது.

முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது. இழுத்து சொருக வேண்டும். முந்தானை ஆடினால் குடும்பமும் ஆடிவிடும் என்பார்கள்.

குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக்கூடாது. இரு திரி இட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும்.

தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலம் போடக்கூடாது. போடுகின்ற கோடு தெற்கு பக்கமாய் முடியக்கூடாது.

ஆலயத்தில் சுவாமி கும்பிடும்போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன்நெற்றி தரையில் தொட உடல் முழுவதும் தரையில் படுமாறு விழுந்து வணங்க வேண்டும்.

சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது தெற்கு முகமாக உட்கார்ந்து சிறிது மஞ்சளைத் தேய்த்து முகத்தில் பூசிக் கொண்டு தான் குளிக்க வேண்டும்.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

ஆண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தலைவிரி கோலமாக நின்று வழி அனுப்பி வைக்கக் கூடாது.

இதையும் படியுங்கள்:
உடலை உறுதியாக்கும் 6 ஆரோக்கிய பானங்கள்!
kumkum on forehead...

இவையெல்லாம் நம் முன்னோர்கள் கூறியது. காலம் மாறிவிட்டது என்பது நிதர்சனம்.

இப்போதைய காலகட்டத்தில் கணவரின் வருமானத்திற்கு உள்ளாக குடும்பம் நடத்த கற்றுக் கொண்டாலே பல குடும்பங்களில் சந்தோஷம் தலைவிரித்தாடும்.

கணவன் பணிக்காக வெளியே செல்லும் போதும், வேலை முடித்து வீடு திரும்பும் போதும் இன் முகத்துடன் பெண்கள் வரவேற்க வேண்டும்.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இப்போது பல குடும்பங்களில் பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். அதனால் ஆண்களும் பெண்களுக்கு ஏற்றபடி அவர்கள் முகம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் குடும்பம் என்பது ஆண் பெண் என இரண்டு சக்கரங்கள் மூலமாகவே இழுத்துச் செல்லப்படுகிறது. இதில் எந்த சக்கரம் பெரியது? எந்த சக்கரம் சிறியது? என பிரச்சனை ஏற்பட்டால் வண்டி ஓடாமல் ஒரே இடத்தில் நின்று விடும்.

அதனால் நம் முன்னோர்கள் சொன்னதையும் கடைபிடிக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ற படியும் நடந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இல்லறம் இனிக்கும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com