உடலை உறுதியாக்கும் 6 ஆரோக்கிய பானங்கள்!

healthy juices
healthy juicesImage credit - pixabay
Published on

நாம் சிறுவயதிலிருந்தே கொழுப்பு உணவுகளை விரும்பி உண்பதால், முதுமையில் வரவேண்டிய இதய நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை இளம் வயதிலேயே வந்து விடுகிறது .அது மட்டுமன்றி உடலில் கொழுப்புகள் சேர்வதனால் ரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் ரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி இறுதியில் மாரடைப்பு இறப்பு வரை கொண்டு சேர்த்து விடுகிறது.

ஒழுங்கற்ற லைஃப் ஸ்டைல், ஃபாஸ்ட் ஃபுட் நிறைய சாப்பிடுவது, இன்ஸ்டன்ட் உணவுகளை விரும்பி உண்ணுவது ,அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் உடல் நலிவடைய காரணமாகின்றன. இவற்றையெல்லாம் குறைக்க,  பழரசங்கள், பானங்கள் உதவுகின்றன. அந்த பானங்களை  பற்றி பார்ப்போம்.

முட்டைக்கோஸ் ஜூஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள டார்டாரிக் ஆசிட் உடலில் சேரும் சர்க்கரையை தடுக்கிறது மேலும் முட்டைக்கோஸில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகமாக உள்ளது இது இதயத்திற்கு மிகவும் வலுவூட்டி உடலை உறுதியாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
இயல்பான நிலையில் இருப்பவர்களுக்கு எப்போதும் சந்தோஷம்தான்!
healthy juices

பார்ஸ்லி கீரை ஜூஸ்

பார்ஸ்லி கீரை ஜூஸில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்றுகின்றன. மேலும் உடலுக்குத் தேவையான  வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இந்த ஜூசை குடிப்பதால் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் கரைவதோடு எடையையும் குறைத்து உடலையும் வலுவாக்குகின்றது.

எலுமிச்சை ஜூஸ்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து அருந்த தொப்பை குறைகிறது .இதனால் தட்டையான வயிறு கிடைத்து உடல் பலம் பெறுகிறது .

இலந்தைப்பழ இலை ஜூஸ்

இலந்தைபழ இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ வைட்டமின்  சி,மற்றும் வைட்டமின் பி2 போன்றவை அதிக அளவில் உள்ளன. இந்த இலைகளை இரவில்நீரில் ஊறவிட்டு மறுநாள் எழுந்ததும் குடித்து வர உடல் ஆரோக்கியம் மேம்படும்.

எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை ஜூஸ்Image credit - pixabay

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ் கண்களுக்கு நல்லது கொழுப்புகளை குறைத்து மேனியை பளபளப்பாக்குகிறது. கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது மேலும் உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரி ஜூஸ்

வெள்ளரி ஜூசை குடித்து வர உடல் மெலியும் இதில் 90 சதவீத அளவு நீர்ச்சத்து உள்ளதால் உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுவதோடு தோலை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது மேலும் உடலின் உறுதித் தன்மைக்கு உதவி புரிகின்றது.

மேற்கண்ட ஜூஸ்களை குடித்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப உடல் உறுதியோடு பலமாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com