குதிகால் வெடிப்பா? வியர்வை நாற்றமா? வாய் துர்நாற்றமா? அனைத்திற்கும் ஒரே தீர்வு இதோ...

வெறும் 10 ரூபாய்க்கு கிடைக்கும் படிகாரம், வாய் துர்நாற்றம், வியர்வை நாற்றம், குதிகால் வெடிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எப்படி உதவுகிறது என்பதை அறியுங்கள்.
Alum
Alum
Updated on
MM strip
MM strip

நம்ம ஊர் மளிகைக் கடைகளிலும், நாட்டு மருந்துக் கடைகளிலும் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு பொருள் தான் படிகாரம் (Alum). வெறும் 10 ரூபாய்தானே, இதில் என்ன பெரிய விஷயம் இருக்கப் போகிறது? என்று அலட்சியமாக நினைத்துவிடாதீர்கள். இதன் மருத்துவக் குணங்கள் உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.

வேதியியலில் இது 'பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்' என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஃபங்கல், கிருமிநாசினி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகள் நிறைந்துள்ளன.

படிகாரத்தை நம் அன்றாட வாழ்வில் எப்படி 5 வழிகளில் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்!

1. வாய் துர்நாற்றத்திற்கு குட்பை:

உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கிறதா? இதற்காக விலையுயர்ந்த மவுத்வாஷ்களை வாங்கத் தேவையில்லை.

சிறிதளவு படிகாரப் பொடியை தண்ணீரில் கலந்து, வாயைக் கொப்பளித்து வாருங்கள். இது வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து, இயற்கையான மவுத்வாஷ் போலச் செயல்பட்டு, நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

2. வாசனை திரவியம்:

நீங்கள் அடிக்கும் சென்ட் அல்லது பெர்ஃப்யூம் சில மணி நேரங்களிலேயே வாசனை போய்விடுகிறதா? அதற்கு ஒரு அருமையான ட்ரிக் இருக்கிறது.

நீங்கள் உங்கள் உடலில் எங்கு வாசனை திரவியம் தெளிக்கப் போகிறீர்களோ (உதாரணமாக மணிக்கட்டு அல்லது கழுத்துப் பகுதி), அங்கு லேசாகப் படிகாரத்தைத் தேய்த்துவிட்டு, அதன் பின் பெர்ஃப்யூமை ஸ்பிரே செய்யுங்கள். இது வியர்வை நாற்றத்தையும் கட்டுப்படுத்தி வாசனையை மேலும், கொஞ்ச நேரத்திற்கு நீடிக்கச் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
போலியான சிரிப்பால் உடலுக்குள் நடக்கும் விபரீதம்: மருத்துவர்கள் தரும் அதிர்ச்சி எச்சரிக்கை!
Alum

3. இயற்கையான டியோடரண்ட்:

இன்றைய காலகட்டத்தில் ரசாயனங்கள் நிறைந்த டியோடரண்டுகளைப் பயன்படுத்துவதால் பலருக்கு சருமப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதற்குப் பதிலாகப் படிகாரத்தைப் பயன்படுத்தலாம்.

குளித்து முடித்ததும், அக்குள்களில் லேசாகப் படிகாரக் கல்லைத் தேய்க்கலாம். இது வியர்வையைச் சீராக்கி, வியர்வை துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களைத் தடுக்கிறது.

4. பித்த வெடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி:

குளிர்காலத்திலோ அல்லது வறண்ட வானிலையிலோ பலரையும் வதைக்கும் ஒரு பிரச்சனை தான் குதிகால் வெடிப்பு.

படிகாரப் பொடியை சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போலச் செய்து, தூங்குவதற்கு முன் பித்த வெடிப்புகளில் தடவி வாருங்கள். படிகாரத்தின் குணப்படுத்தும் தன்மை, பாதங்களில் உள்ள வெடிப்புகளை விரைவாகக் குணமாக்கி, சருமத்தை மென்மையாக மாற்றும்.

5. நச்சுக்களை நீக்கும் குளியல்:

நமது சருமத்தில் தினமும் படியும் அழுக்குகளையும் நச்சுக்களையும் நீக்க படிகாரம் பெரிதும் உதவுகிறது.

நீங்கள் குளிக்கும் வாளி தண்ணீரில் சிறிதளவு படிகாரப் பொடியைக் கலந்து, அந்தத் தண்ணீரில் குளியுங்கள். இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளை நீக்கி, உடலை இயற்கையான முறையில் நச்சுநீக்கம் செய்ய உதவுகிறது. மேலும் சருமத்திற்கு ஒரு தனிப் பொலிவையும் தருகிறது.

படிகாரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், அதை முகத்திலோ அல்லது உணர்திறன் மிக்க சருமத்திலோ பயன்படுத்தும் முன் ஒருமுறை 'பேட்ச் டெஸ்ட்' செய்து கொள்வது நல்லது. மேலும், படிகாரத் தண்ணீரை உட்கொள்ளக் கூடாது. இதை அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com