அட்லாண்டிக் பெருங்கடலை தனியாக கடந்து சாதனை செய்த அனன்யா!

Ananya Prasad
Ananya Prasad
Published on

அட்லாண்டிக் பெருங்கடலை தனியாக கடந்த முதல் இந்திய பெண் என்ற சாதனை செய்தார் அனன்யா பிரசாத். தனியாக ஒரு பெருங்கடலை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட 34 வயதான அனன்யா பிரசாத் , உலகின் மிகக் கடினமான அட்லாண்டிக் பெருங்கடலில் 52 நாட்கள் தனியாக பயணம் செய்து 3,000 மைல் தூரத்தைக் வெற்றிகரமாக கடந்துள்ளார்.

டிச.11, 2024 அன்று ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் இருந்து பயணத்தை தொடங்கிய அனன்யா, ஜனவரி 31, 2025 அன்று கரீபியனின் உள்ள ஆன்டிகுவாவில் கரையேறினார்.

பெங்களூரில் பிறந்த அனன்யாவிற்கு ,ஆறு வயதாக இருந்தபோதே அவருடைய குடும்பம் லண்டனில் குடியேறியது. முதலில் அனன்யா ஒரு பொழுது போக்காகக் படகோட்ட கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பின்னர் அதுவே அவருடைய ஆர்வமாக மாறியது. அட்லாண்டிக் பெருங்கடலை கடக்க அனன்யா மூன்றரை ஆண்டுகள் சிறப்புப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். பெருங்கடலை கடப்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உடல் வலிமையோடுமன வலிமையையும் வேண்டும்.அதுவும் அபாயம் மிக்க கடலை தனியாக கடப்பதற்கு தனி தைரியம் வேண்டும்.

வானிலை மாற்றங்கள், சூறாவளி, மழை, கடும் வெப்பம் மற்றும் குளிர் போன்ற பல்வேறு கால நிலைகளையும் சமாளிக்க வேண்டும்.அவற்றை எதிர்கொள்ளும் போது மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.அனன்யா இது அனைத்திலும் சிறப்பாக அறிவு பெற்றிருந்தார் .இந்தப் பயணத்தின் போது படகின் ரேடார் ஒரு முறை உடைந்தது.அவரே அதை சரி செய்தார்.அவருடைய ஒரு போன் கடலில் விழுந்து விட்டது.இந்த பயணத்தில் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் அனன்யா படகை ஓட்டுவார். அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வார்,தினசரி 6 மணி நேரம் படகில் தூங்குவார் .

தேவையான உணவுப் பொருட்களை முன்பே எடுத்துக் கொண்டதால் , படகில் சமைத்து சாப்பிடுவார் . பல்வேறு இயற்கை இடையூறுகளுக்கு மத்தியில் அனன்யா மன உறுதியுடன் அட்லாண்டிக் கடலைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளார்.அனன்யா இந்த கடினமான கடல் பயணத்தை ஒரு சமூக நோக்கத்திற்காக மேற்கொண்டார். இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் அனாதையான குழந்தைகளுக்கு உதவுவதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் அவர் ஒரு கோடியே 35 லட்சத்துக்கும் அதிகமாக நிதியை திரட்டியுள்ளார்.இந்த வெற்றிக்குப் பின்னால் அனன்யாவின் கடின உழைப்பு, மற்றும் விடாமுயற்சி கூடவே சமூக நலனும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் அழுவதற்கான காரணங்கள்: பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்
Ananya Prasad

ஒரு பெண்ணாக அனன்யாவின் வெற்றி , சமூக எல்லைகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தாண்டி, சாகச விளையாட்டுகளில் ஏதாவது செய்ய விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கமாக இருக்கும்.தேசிய மற்றும் பாலின தடைகளைத் தாண்டி, சாகச விளையாட்டுகளில் ஏதாவது செய்ய ஆர்வமுள்ள ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் அனன்யா உத்வேகமாக இருப்பார்.இந்த கடினமான பயணத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அனன்யா பெரிதும் சாதித்துள்ளார். அனன்யாவின் வெற்றியை ஐரோப்பிய நாடுகள் இன மற்றும் நிற ரீதியாக பார்க்கின்றன. அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த முதல் கருப்பின பெண் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஐரோப்பியர்கள் தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். அட்லாண்டிக் கடலைத் வெற்றிக் கொண்ட பெண் என்று அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வசீகர தலைப்பு, துள்ளும் இளமை நடை... வேறு யாரு? நம்ம 'சுஜாதா'வேதான்!
Ananya Prasad

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com