

ஒரு வினாடி தன்னை மறந்தவன் போல் பேச்சை நிறுத்திய வருண் தொடர்ந்தான். “எங்களைப் பத்தி சொல்ல லதாவோட நிச்சயதார்த்த நாள்தான் சரியான நாளா இருக்கும்ன்னு முடிவு செய்துதான், அப்பாவையும் இங்க கூட்டிட்டுவர நாங்க பிளான் பண்ணினோம்”.
லதா தொடர்ந்தாள். “கார்த்திக்கை நான் சந்திச்ச முதல் நாளே அவர்கிட்ட வருணை பத்தியும் சொல்லி, அவரும் உடனே வருணை போனிலும் தொடர்பு கொண்டு, இருவரும் அறிமுகம் செய்து கொண்டனர். அம்மா.. பெங்களூர்ல, என்னோட ஆண் நட்புப்பத்தி நீங்க பயப்படும்போது எனக்கு நகைப்பாக இருந்தாலும், எங்க சகோதர உறவை நாங்க வெளிப்படுத்தும் நாள், நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற நாளாகத்தான் இருக்கணும்ன்னு நினைத்தோம்."
அதற்குள் நிச்சயதார்த்தத்திற்கு தயார் செய்துகொள்ளும் நேரம் நெருங்கிவிட, அப்போதைக்கு அந்த பேச்சு ஒத்திவைக்கப்பட்டது. அப்போதுதான் அருகிலிருந்த கோயிலுக்கு சென்றுவிட்டுத் திரும்பியிருந்த மாலதியின் பெற்றோர்கள் ஒன்றும் புரியாமல், நீண்ட நாட்களுக்குப் பிறகு மாப்பிள்ளையைப் பார்த்த அதிர்ச்சியில், “நல்லாஇருக்கீங்களா மாப்பிள்ளை?” என்று வினவினர் . அவர்களுக்குக் கைகூப்பிப் புன்னகையில் தலையசைத்த தேவராஜன் ஹாலில் சென்று அமர்ந்தார்.