ஆந்திரா மெஸ் காரசார பருப்பு பொடி செய்யலாம் வாங்க!

Andhra Paruppu Podi
Andhra Paruppu Podi
Published on

ஒரு காலத்துல சென்னைக்கு வேலை தேடி போற பேட்ச்லர்ஸ்க்கு குறைஞ்ச காசுக்கு வயிறார சோறு போட்டது ஆந்திரா மெஸ்கள். ஆந்திரா மெஸ்னாலே நமக்கு முதல்ல ஞாபகம் வர்றது காரசாரமான பருப்பு பொடிதான்...

சுடு சோத்துல கொஞ்சம் பருப்பு பொடியை போட்டு அது மேல இரண்டு ஸ்பூன் நெய் ஊத்தி பிசைஞ்சி சாப்பிட்டா பலநாள் பசியும் பஞ்சா பறந்து போகும்... அப்படி ஒரு சுவை அந்த பருப்பு பொடியில இருக்கும்... இன்னைக்கும் சில ஆந்திரா மெஸ்கள் சென்னைல இந்த பருப்பு பொடியை சுவை மாறாம கொடுத்துட்டு வர்றாங்க...

நம்ம வீடுகளிலேயும் இதை செஞ்சு வச்சுகிட்டா, குழம்பு வைக்க போரடிக்கும் போது சோத்தை வடிச்சு இந்த பருப்பு பொடியை போட்டு கொஞ்சம் நெய் ஊத்தி சாப்பிட்டோம்னா அசத்தலா மதிய சாப்பாட்டை முடிச்சிடலாம்... கொஞ்சம் காரம் கம்மியா போட்டா நம்ம வீட்டு குழந்தைகளும் இந்த பருப்பு பொடியை விரும்பி சாப்பிடுவாங்க...

சரி வாங்க இந்த பருப்பு பொடி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்...

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 100 கிராம்

பாசிப்பருப்பு – 100 கிராம்

பொட்டுக்கடலை – 100 கிராம்

மிளகாய் – 10 லிருந்து 15 காரத்திற்கு ஏற்ப

சீரகம் – 2 ஸ்பூன்

பெருங்காயம் – 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

பூண்டு – 10 பல் தோல் உரித்தது

உப்பு தேவையான அளவு

செய்முறை :

கொஞ்சம் அடி கனமான சட்டியை அடுப்பில வச்சு நல்லா சுட வச்சுக்கோங்க. அதில துவரம் பருப்பையும், பாசிப்பருப்பையும் தனித்தனியா எண்ணெய் சேர்க்காம நல்லா சிவந்து வாசம் வரும் அளவுக்கு வறுத்து ஒரு தட்டுல கொட்டிகோங்க.

அடுத்ததா பொட்டுக்கடலையை அதே சட்டியில போட்டு, லேசா சூடு ஆகும்படி வறுத்து, அதையும் தட்டில் மாற்றிக்கோங்க. வரமிளகாய் உடையும் அளவிற்கு வறுபட வேண்டும். அடுத்ததாக ஜீரகம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து அதே தட்டில் கொட்டிக்கோங்க. கறிவேப்பிலை இரண்டு கொத்து மொருமொருன்னு உடையும் அளவுக்கு வறுத்து எடுத்துக்கோங்க.

10 பல் பூண்டை, நல்லா உரல்ல போட்டு இடிச்சிட்டு சட்டியில ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பூண்டை ப்ரவுன் கலர் வரும் அளவுக்கு வறுக்கணும். பூண்டில் ஈரப்பதம் இருந்தால், பருப்பு பொடி, சீக்கிரமாக கெட்டுப்போய்டும். அதனால ஈரம் இல்லாம வறுத்துடுங்க.

இதையும் படியுங்கள்:
கசகசா பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார் மக்களே!
Andhra Paruppu Podi

வறுத்த இந்த பூண்டையும், தட்டில் கொட்டி நல்லா ஆற வச்சுடுங்க. கடைசியா அடுப்பை அனைச்சுட்டு , உப்பை அந்த கடாயில் போட்டு, உப்போட ஈரப்பதம் போற அளவுக்கு அரை நிமிஷம் வறுத்துடுங்க.

அதையும் தட்டில் கொட்டிகோங்க.... இப்போ எல்லா பொருட்களையும்  ஆறினத்துக்கு அப்புறம் , மிக்ஸி ஜார்ல போட்டு பொடியா அரைச்சுட்டா, சுவையான காரசாரமான பருப்பு பொடி தயார்.

காத்து புகாத டப்பாவில போட்டு வச்சிகிட்டா 3 மாசம் வரைக்கும் இதை வச்சு நீங்க பயன்படுத்திக்கலாம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com