
தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.
தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும்.
வயிற்றில் புண், வடு, வயிறு கோளாறு, செரிமானமின்மை போன்ற பிரச்னைகள் இருந்தாலும் தொடர்ந்து தேங்காய் பால் குடித்துவர பூரண குணமாகும்.
தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.
இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.
வறண்ட தலைமுடி இருந்தால் அவர்கள் தொடர்ந்து தேங்காய் பால் குடிக்க முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். அரிக்கும் வேர்கள், பொடுகுத் தொல்லையும் இருக்காது.
தேங்காய் பால், கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது.
தேங்காய் பாலில் லாரிக் ஆசிட் இருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்.