Oh My God! 27 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்ட நெக்லஸ்! தங்கமா? வைரமா? ரெண்டுமே இல்லீங்க...
இந்த asian gemstone வெகு சில இடங்களில் மட்டுமே கிடைக்கும். மியான்மாரில காணப்படும் இந்த jadeite பச்சை நிறத்தைக் கொண்டுள்ளது. இதை இம்பீரியல் பச்சை என்பார்கள். பார்பரா ஹுட்டன் என்ற மகாராணியின் ஜேட் நெக்லஸ் மிகவும் புகழ் பெற்றது.
இதன் மதிப்பு:
தங்கம் அதிகமாக உள்ளவர்கள் பணக்காரர்கள் என்று எண்ணுவோம். ஆனால், ஜேடின் விலை தங்கத்தை விட அதிகமானது. ஒரு காரட் ஜேடைட் என்பது 926 அவுன்ஸ் தங்கத்திற்கு இணையானது.
Jadeite என்பது இரண்டு வகைப்படும் ஒன்று jadeite இன்னொன்று nephrite என்று கூறப்படுகிறது. இந்த ஜேட் வகை பைராக்சீன் என்ற மினரல் வகையைச் சார்ந்தது. மிக விலை உயர்ந்த மினரலாகத் திகழ்கிறது. வைரத்தை விட மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
Nephrite ஜேட் என்பது மிகவும் சுலபமாகக் கிடைக்கக் கூடியது. விலையும் குறைவு. மேலும் இந்த வகையில் பல நிறங்கள் உள்ளன. ஆனால், இம்பீரியல் ஜேட் வகை நல்ல பச்சையாகவும் நல்ல பளிச்சென்றும் இருக்கக் கூடியது. அதனால் அதிக மக்களால் விரும்பக்கூடியதாக இருக்கிறது. இது உருவாக அதிக அழுத்தமும், குறைந்த வெப்பமும் தேவைப்படுகிறது.
அதனாலேயே வெகு சில இடங்களில் இது காணப்படுகிறது. இந்த கற்கள் உருவாக நல்ல சூழல் அவசியமாகிறது. ஆசியாவிலேயே 70 சதவீதம் ஜேட் கற்கள் மியன்மாரில் உள்ளன. மேலும் காலிஃபோர்னியா, கடமாலா, ஜப்பான், ரஷ்யா மற்றும் கசக்ஸ்தான் போன்ற இடங்களிலும் ஜேடைட் காணப்படுகிறது.
மிக விலையுயர்ந்த ஜேட் நெக்லஸ் எது தெரியுமா?
அதன் பெயர் Hutton Mdivani நெக்லஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நெக்லசில் 27 பெரிய ஜேட் கற்கள் உள்ளன.
Woolworth சாம்ராஜ்ஜியத்தின் வாரிசான பார்பரா ஹுட்டன் விலை மதிப்பற்ற இந்த நெக்லசோடு பல விலையுயர்ந்த நகைகளையும் பெற்றிருந்தார். இதற்காக சரித்திரப் புகழ் பெற்றவர். இந்த நெக்லஸ் 2024ம் ஆண்டு 27 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.

