நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு...

ஒரு செக் லிஸ்ட்...
நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு...
Published on

* ருக்குச் செல்வதற்கு முன்பாக டாக்டரிடம் மருந்து, மாத்திரைகள் போன்ற விவரங்களை எழுதி வாங்கி வைக்கவும்.

* டாக்டர் தரும் மருந்துச் சீட்டை இரண்டு நகல் எடுத்து வெவ்வேறு பெட்டிகளில் போட்டு வையுங்கள்.

* ங்கள் மருந்துகளுக்காகவே ஒரு சிறிய கைப் பையை அவசியம் வைத்திருங்கள். அதில் வெளியூருக்குச் செல்லும் நாட்களுக்குத் தேவையான அனைத்து மருந்து மாத்திரைகளையும் வைத்துக்கொள்ளவும்.

* ன்சுலின் போன்ற மருந்துகளை அதற்கு உண்டான பெட்டியோடு எடுத்துச் செல்ல வேண்டும். தவறி கீழே விழுந்தால் எளிதில் உடையாமல் இது பாதுகாக்கும். இது போன்ற மருந்துகளை சரியான குளிர் நிலையில் முடிந்தவரை வைத்திருத்தல் அவசியம்.

* ரே பையில் அனைத்து மருந்துகளையும் வைக்க வேண்டாம். ஒரு பை தவறினாலும் அடுத்த பையில் உள்ள மருந்துகள் ஆபத்துக் காலத்தில் நமக்கு கை கொடுக்கும்.

*பிரயாணத்தின்போது பயன்படுத்திய வேண்டாத ஊசிகளைப் போட்டுவைக்க, ஒரு தனி மூடி போட்ட பாக்ஸை வைத்துக்கொள்ளுங்கள். நம் இடத்தை அடைந்ததும் இதனை அப்புறப்படுத்தலாம்.

*னைத்து தகவல் அடங்கிய ஒரு டைரியை எடுத்துச் செல்வது அவசியம். அதில் உங்கள் இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எண், மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் போன்றவற்றை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

* ற்போது தாங்களே குளுக்கோமீட்டர் என்ற சின்ன கருவியைப் பயன்படுத்தி சர்க்கரையின் அளவை சரி பார்க்கிறார்கள். அப்படி பயன்படுத்துபவர்கள் அதை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். டைரியில் சர்க்கரையின் அளவு, கருவியின் ஐடிஎண், தொலைபேசி எண்களையும் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.

* க்காரணம் கொண்டும் நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. விமான பயணத்தின்போது சாப்பிட இலவசமாக எதுவும் தர மாட்டார்கள். ரயில் பயணத்தில் வாங்க முடி யாமலும் போகலாம். அதனால் எப்போதும் ஏதேனும் தின்பண்டத்தை கையிருப்பாக வைத்துக்கொள்ளவும். கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.

* ரு சிலருக்கு திடீரென சர்க்கரை குறையும்போது மயக்கம் ஏற்படலாம். அதற்காக குளுகோஸ் மருந்துகளை கைப்பையில் மேலாக வைத்தால் எடுக்க எளிதாக இருக்கும்.

* ங்கள் பொன்னான பாதங்களைப் பாதுகாக்க சாக்ஸ் மற்றும் கை உறைகளை எடுத்துச் செல்வது நல்லது. கால் பாதம் வலிக்காமல் இருக்க 'சிலிப்ஆன்' வகை ஷூக்களைப் பயன்படுத்தலாம்.

* விமானத்தில் நீண்ட தூரம் தனியாக நீங்கள் செல்வதாக இருந்தால், பணிப்பெண்ணிடம் உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ள தகவலை முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள்.

* வெளிநாட்டுக்குச் செல்வோர், ஆங்கிலம் தெரிந்த மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அல்லது தனக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதை அந்த நாட்டு மொழியில் எப்படி சொல்வது என்பதை முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

*நாடுவிட்டு நாடு செல்லும்போது கடிகார நேரத்தில் மாற்றம் இருக்கும். எனவே அந்த நாட்டு நேரத்துக்கு ஏற்றார்போல் ஊசி, மருந்து. மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

* நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தாலோ அல்லது நடந்தாலோ, மூட்டு வலி வரலாம். ஆகவே மூட்டு வலிக்கு போட்டுக் கொள்ள கிரிப் பேண்டுகளையும் எடுத்துச் செல்ல வேண்டும். இவை ஃபார்மஸியில் சைஸ் வாரியாகக் கிடைக்கின்றன.

*ருமத்தைப் பாதுகாக்க நீங்கள் செல்லும் இடம் அல்லது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, பிரத்யேக லோஷன்களை வாங்கி எடுத்துச் செல்லுங்கள்.

* ரு சிறிய முதலுதவி கிட் ஒன்றையும் தயார் செய்து, மருந்துப் பையில் போட்டு வைக்கவும். இதில் காட்டன், சிறுகத்திரி, 'பேண்ட் எய்ட் போன்றவற்றை அவசியம் வைத்திருங்கள்.

இப்போது எதைப் பற்றியும் கவலையே படாமல், ரிலாக்ஸாக ட்ராவல் பண்ணுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com