தமிழக அரசு சார்பில் ஆட்டிஸம் மையமா?

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

ன்றைய  தமிழக நிதிநிலை அறிக்கையில் ஏராளமான  நலத்திட்டங்கள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின்  தலைமையில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாணாக்கர் நலன் சார்ந்தும், தமிழின் வளர்ச்சி, நீர்வளங்களை பாது காக்கும் திட்டங்கள் என பல சிறந்த திட்டங்கள் வரிசை யாக  அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் ரூபாய் 25  கோடி செலவில் சென்னையில் ஆட்டிஸம் மையம் அமைப்பதற்கான திட்டம்.

இது வரவேற்கத்தக்க ஒரு மிகச்சிறந்த திட்டமாகும்.  தொழிற்நுட்ப வளர்ச்சி மிகுதியான இன்றைய காலகட்டத்திலும் கூட ஆட்டிஸம் குறித்த போதிய விழிப்புணர்வு  மக்கள் மத்தியில் இல்லை என்பதுதான் உண்மை. இந்த  சூழலில் தமிழக அரசின் இந்த திட்டமானது பாராட்டுக்குரியது எனலாம். இதன் மூலம் பல ஆட்டிஸம் குறைபாடு  உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் பயனடைவர்.

ஆட்டிஸம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள், ஏற்படு வதற்கான காரணங்கள்குறித்தும் அதனைக் குணப்படுத்த இயலுமா என்பது குறித்தும் விளக்குகிறது இந்த பதிவு...

குழந்தைகள்...
குழந்தைகள்...autism-india.org

ஆட்டிஸம் என்றால் என்ன?

ட்டிஸம் என்பது ஒரு நோய் அல்ல. அது குழந்தைகளுக்குஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடாகும். இது  மூளையின் செயல்பாட்டுத் திறன் அல்லது ஆற்றலைத்  தடுக்கும். மேலும் பார்த்தல், கேட்டல், தொடுதல் போன்ற  உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த  முடியாமல் குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம்  ஏற்படுவதுதான்  ஆட்டிசம். இந்த குறைபாடு உள்ள  குழந்தைகள் பல விஷயங்களில்  சற்று மாறுபட்டவர்களாக தெரிவார்கள்.  ஏறக்குறைய ஐந்நூறு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த  குறை பாடு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அறிகுறிகள் என்னென்ன:

ல்லாவிதமான உடல் சார்ந்த குறைபாட்டிற்குமே, நிச்சயமாக ஒரு சில அறிகுறிகள் இருக்கும். குழந்தைகளுக்கு வரக்கூடிய ஆட்டிஸம் குறித்த அறிகுறிகளை கண்டறிவது  சிரமம்தான். ஆனால் 1 முதல்  3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சில அறிகுறிகள் மூலம் நம்மால்  அறிந்துகொள்ள இயலும். அந்த வகையில் குழந்தை களுக்கு ஏற்படும் இந்த ஆட்டிஸம் குறைபாட்டிற்கான அறிகுறிகள் ஒன்றன் பின் ஒன்றாக…

 · சமூகத்தை விட்டே ஒதுங்கி இருப்பது

· கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல்

· சமூகம் சார்ந்த புரிதல்கள் இல்லாமல் இருப்பது

· அதிகளவிலான பயம்

· ஆபத்தை உணராமல் இருப்பது

· விளையாட்டுகள் சார்ந்த ஆர்வம் இல்லாமல் இருப்பது

· வித்தியாசமான நடவடிக்கைகளை ஒரே மாதிரியாகத் திரும்பத்  திரும்ப செய்வது

· காரணம் இல்லாமல் அழுகை மற்றும் சோகத்தை வெளிக்காட்டுவது.

· வலியை உணராமல் மந்தமாக இருப்பது

· பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்ப சொல்வது

குழந்தைகளுக்கு ஆட்டிஸம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

குழந்தைகள்...
குழந்தைகள்...www.spectrumnews.org

குழந்தைகளுக்கு ஆட்டிஸம் ஏற்படுவதற்கு குறிப்பாக இது மட்டும்தான் காரணம் என்று  சொல்லுவது மிகவும் கடினமாகும்.

குறைந்தபட்சம் மரபு ரீதியிலான காரணங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.  

· பெற்றோர்கள்  வயதை தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வது

· மதுப்பழக்கம் அதிலும் குறிப்பாக பெண்கள் கருவுற்றிருக்கும் சமயத்தில்

· ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்

· கருவில் குழந்தை இருக்கும் போதும் மகப்பேறின் போதும் கழுத்தில் கொடி சுற்றுதல்

· முதன்முதலாக வெளியேறும் மலம் குழந்தையின் சுவாசப்பாதைக்குள் நுழைதல்

· மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிரச்சினைகளின் தாக்கம்

· மூளைக்கு பாதிப்பு ஏற்படுதல்

இதையும் படியுங்கள்:
மெக்சிக்கன் ட்ரிப் செல்பவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 8 மெக்சிக்கன் உணவுகள்!
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

குணப்படுத்த இயலுமா?

ந்தக் குறைபாட்டை நூறு சதவிகித அளவில் குணப்படுத்திவிடுவது என்பது சாத்தியமே இல்லைஆனால் பெற்றோர் சூழ்நிலையை நன்கு கருத்திற்கொண்டு, ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையையும், பயிற்சியையும் குழந்தைகளுக்கு அளிப்பது அவசியம். ஆட்டிஸம் குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு மன தைரியமும், தன்னம்பிக்கையும் இருக்கவேண்டியது மிக முக்கியம். குறைபாட்டின் அளவை நன்கு உணர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து அந்த  குழந்தைகளின் உலகத்திற்குள் மூழ்கிவிடுவது அவர்களை எளிதில் குணமாக்கும். முழுவதுமாக குணப்படுத்தும் வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட ஏறக்குறைய குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் பெறலாம்.

சென்னையைச் சுற்றி ஏராளமான தனியார் ஆட்டிஸம் மையங்கள் இருப்பினும், நமது தமிழக அரசு சார்பில், முதன் முதலில், ரூபாய் 25 கோடி ரூபாய் செலவில், ஆட்டிஸம் மையம் அமைப்பதற்கான இந்தத் திட்டத்தை தாக்கல் செய்திருப்பது மிகவும் சிறந்தது. வரவேற்கத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com