
வளரும் குழந்தைகளுக்கு தேவைப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, போன்றவை குதிரைவாலி அரிசியில் அதிகமாக காணப்படுகிறது. இதில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
குதிரைவாலியில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண் சம்பந்தமான கோளாறு வரவிடாமல் செய்யும்.
சளி இருமலுக்கு குதிரைவாலி அரிசியும் ஒருவகையில் சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களும் இதை தொடர்ந்து உண்டு வந்தால் பலன் ஏற்படுகிறது.
குதிரைவாலி அரிசியில் புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புகள் பெருமளவில் உள்ளதால் உடல் எடையை குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் இது அதிகமாக பயன்படுகிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் இது உதவுகிறது.
குதிரைவாலி அரிசியை தினசரி சாதமாக சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு மெதுவாக கட்டுக்குள் வரும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் சீராகவும், இதயத்துடிப்பு நன்றாகவும் இருக்கும்.
இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்கும். மேலும் சிறுநீர் பாதையில் ஏற்படும் புண்கள், கட்டிகளை அகற்றும் திறன் இந்த குதிரைவாலி அரிசிக்கு உண்டு.
குதிரைவாலி அரிசியில் தயமின், ரிப்போஃப்ளோவின் போன்றவை இடம்பெற்றுள்ளதால் இதனை கஞ்சியாக இரவு உணவாக பயன்படுத்தினால் ஆழ்ந்த உறக்கம் கண்களை தழுவும்.