குடைமிளகாயின் நன்மைகள்!

குடைமிளகாயின் நன்மைகள்!
Published on

குடைமிளகாயில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அதில் உள்ள மாங்கனீசும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.

குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் இவை அனைத்தும் குறைவாகவே உள்ளது. எனவே, குடைமிளகாய் உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன.

இதில் உள்ள வைட்டமின் சி சத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

கொடை மிளகாயில் உள்ள லைகோபீன் என்ற பைட்டோநியூட்ரியண்ட் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்களுக்கான அபாயமும் குறைகிறது.

சிவப்பு குடைமிளகாயில் இரும்பு சத்து நிறைந்து உள்ளது. இது ரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.

இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான வலிகளுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதில் அழற்சி எதிர்ப்பு தன்மை இருப்பதால் உடல் வலியை போக்கும் குணம் கொண்டது.

குடை மிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடை மிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, மூளையை கூர்மையாக்குவதிலும் குடை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.

குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது.

குடைமிளகாயில் உள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com