

“ஓம்பூர் புவஸ் ஸுவ :
தத்ஸ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந:ப்ரசோதயாத்.
‘ஓம் தத் ஸத்
இது என்ன..? இது தான் காயத்ரி மந்திரம். ஆவணி அவிட்டம் சமயம் படிக்க பூணூல் போடுவார்கள். மறுநாள் இந்த காயத்ரி மந்திரம் சொல்லி தரப்படும்.
காயத்ரி மந்திரம் சொல்வது என்ன… ?
“மூன்று உலகிலும் விளங்கும் பேரோளியை (சூரியன்) வணங்குகிறேன். எப்படி எல்லாருக்குமே நேர்மறை எண்ணங்களை துண்டுகிறாரோ… அதேபோல் எனக்கும் என் சிந்தனையில் நேர்மறை எண்ணங்களை தூண்டும் பேரோளியை தியானம் செய்கிறேன்”
இது தான் பொருள்.
இதில் எந்த கடவுள் பெயரும் இல்லை. பேரோளியை மட்டுமே நினைத்து தியானம் செய்யும் இது மிகவும் பயனுள்ள எண்ணங்களை நமக்கு அளிக்கும் என்பது காலகாலமாக நம்பிக்கை. இந்த மந்திரம் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். மனிதனுக்கு கிடைத்த பொக்கிஷம். எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருப்பினும் சொல்லலாம். சாதி கடந்தும் சொல்லலாம்.
எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். ஏன்? இழவு வீட்டிலும் சொல்லக்கூடிய மந்திரம் இது மட்டுமே.
இது நல்ல அறிவை சூரியனிடம் இருந்து கேட்கிறது.
அதனால் சடங்குகள் அவசியம் இல்லை.
இதை தான் புத்தர் எதிர்த்தார்.
ஆம்.
சூரியனை தியானிக்க ஏன் சடங்கு வேண்டும்… ?
ஏன்… ?
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நல்லறிவை பெற இதை சொல்லி தியானம் செய்யலாம். தொடர்ந்து தியானம் செய்பவர்கள் அந்த மந்திரத்தின் மகிமையை அறிந்து கொள்வார்கள்.
அதாவது காயத்ரி மந்திரத்தில் கடவுள் பெயர் இல்லாவிட்டாலும் இது காயத்ரி என அழைக்கப்படுகிறது. காலையில் காயத்ரியாகவும், மதியம் சாவித்திரி ஆகவும் மாலை சரஸ்வதியாகவும் இருக்கிறார் என்பது ஐதீகம்.
இதை நம்ப வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால் மந்திரம் சொல்லாமல் இருக்க கூடாது.
என் நண்பர் மந்திரத்தின் பொருள் தெரியாமலே தினமும் சந்தியாவதனம் செய்வார். நான் எந்த சடங்கையும் செய்வது இல்லை. ஏன்? பூணூல் கூட போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் மந்திரம் சொல்ல தவறுவதில்லை. அதன் பயன் நான் அறிந்து கொண்டேன்.
நீங்கள் எந்த கடவுளை நம்பினாலும், நம்பாவிட்டாலும்
இந்த மந்திரம் சொல்லி பாருங்கள்.
உங்கள் சிந்தனை சிறக்கும்.
உங்கள் கஷ்டம் குறையும்.
உங்களுக்கு மனிதாபிமானம் தானே வந்து சேரும்.
எண்ணிக்கை இவ்வளவு அல்லது அவ்வளவு இருக்க வேண்டும் என்பது எல்லாம் இல்லை. நேரம் கிடைக்கும் போது எல்லாம் சொல்லுங்கள்.
இந்த மந்திரம் சொல்ல 1 நிமிடம் கூட ஆகாது. அதனால் நீங்கள் எப்போது வேண்டுமானால் சொல்லலாம்.
குறிப்பாக குளிக்கும் போது சொல்லலாம்.
பிறகு ஒரு சந்தேகம்…?
ஏன் பெண்கள் சந்தியாவதனம் செய்வது இல்லை… ? இது மனித சூழ்ச்சி.
ஆண்=பெண்= சரிசமம்
இப்படி இருக்கையில் பெண்களை சந்தியாவதனம் சடங்கு செய்ய நான் சொல்ல வில்லை. அவளும் நற்சிந்தனை பெற வேண்டும். எனவே பெண்களும் தமக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் சொல்லலாம். குறிப்பாக மாத விடாய் சமயத்திலும் சொல்லலாம். மாத விடாய் தீட்டு அல்ல. கழிவு மட்டுமே. ஆணும் கழிவுகளை அகற்றுகிறான். அதேபோல் தான் பெண்கள் கழிவை அகற்றுகிறார்கள்.
நான் எல்லோரையும் வேண்டி கேட்டு கொள்வது ஒன்று தான். காயத்ரி மந்திர பொருளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு மந்திரம் வெறும் 4 வரிகள் தான். அதை மனப்பாடம் செய்யுங்கள். பின்னர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் காயத்ரி மந்திரம் சொல்லி பலன் பெறுங்கள்.
‘ஓம் தத் ஸத்’